காஞ்சி பெருந்தேவித் தாயார்… வைகாசி கடைசி வெள்ளிக்கிழமை… பக்தர்கள் ஏக்கம்?

Published:

kanchi perundevi thayar
kanchi perundevi thayar

ஆகாரத்ரய ஸம்பன்னாம் அரவிந்த நிவாஸிநீம் |
அசேஷ ஜகதீசித்ரீம் வந்தே வரத வல்லபாம் ||

காஞ்சிபுரம் #பெருந்தேவித்தாயார் வைகாசி கடைசி வெள்ளிக்கிழமை அன்று சேவை சாதிப்பதை உள்ளூர் பக்தர்கள் பெருவாரியாகச் சென்று தரிசிப்பர். இந்த முறை எல்லாம் ஏமாற்றம்.

காஞ்சிபுரத்தில் புகழ்பெற்ற ஸ்ரீவரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் இன்று வைகாசி மாத கடைசி வெள்ளிக்கிழமை பூஜைகள் நடைபெற வேண்டியது, ஆனால் எதுவும் நடைபெறவில்லை!

வைகாசி வெள்ளி என்றால் இங்கே பக்தர்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்படும். ஆனால் இந்த முறை கொரோனா வைரஸ் பரவல் காலம் என்பதால், பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், தாயாரின் ஏகாந்த சேவையைக் காண இயலாமல் பழைய புகைப்படங்களை தங்களுக்குள் பக்தர்கள் வாட்ஸ் அப் மூலமாகவும் சோஷியல் மீடியாக்களிலும் பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.

கர்நாடக மாநிலத்தில் வரும் ஜூன் 1ம் தேதி முதல் ஆலயங்கள் திறக்கப் படும் நிலையில், தமிழகத்திலும் கோரோனா பாதிப்பு இல்லாத அல்லது குறைவாக இருக்கும் மற்ற மாவட்டங்களிலாவது, ஆலயங்கள் விரைவில் பக்தர்களின் தரிசனத்துக்கு திறந்துவிடப் பட வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

  • வி.என்.கேசவபாஷ்யம், காஞ்சிபுரம்
ALSO READ:  ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் - கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

Related articles

Recent articles

spot_img