
நம் புத்தி சரியான பாதையில் போனால் தான் நாம் சுகமாக இருக்க முடியும் அது சரியான பாதையில் போகவில்லை என்றால் நாம் சுகமாக இருக்க முடியாது.
ஒரு கதை லக்ஷ்மிக்கும் சரஸ்வதிக்கும் சண்டை வந்தது யார் சிறந்தவர் என்ற போட்டி உன்னுடைய அனுக்கிரஹம் எத்தனை பேருக்கு இருக்கிறது ஆனால் அவர்களுக்கு ஒரு வேளை கூட சாப்பாட்டுக்கு வழி கிடையாது. என்னுடைய அனுகிரகம் இருப்பவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று பார்த்துக்கொள்.
அதனால் பிரபஞ்சத்திலேயே உன்னுடைய தேவை யாருக்கும் இல்லை என்னுடைய தேவை எல்லோருக்கும் வேண்டும். உன்னுடைய அனுக்கிரஹம் துளிகூட இல்லாவிட்டாலும் நான் இருந்தால் அவன் எப்படி பிரகாசிக்கிறான். உலகத்திலே பார்த்துக்கொண்டே இருக்கிறோம் கையெழுத்து கூட தெரியாதவர்கள் எவ்வளவு பெரிய மனிதர்களாகி விடுகிறார்கள் என்று லக்ஷ்மி சரஸ்வதி இடம் சொன்னாளாம்.
அப்பொழுது சரஸ்வதி சொன்னாளாம் இந்த சண்டை வேண்டாம் நாம் வந்து ஒருவனை எடுத்துக்கொள்வோம். ஒரு அறிவும் இல்லாதவன் ஒரு காசும் இல்லாதவன் அவனுக்கு முதலில் நீ அனுக்கிரஹம் பண்ண என்ன ஆகிறது என்று பார்ப்போம். பின்பு நான் சொல்கிறேன்.
சரி என்று ஒருவனை தேர்ந்தெடுத்தார்கள் அவனுக்கு ஒரு காசும் கிடையாது ஒரு அட்சரமும் தெரியாது முதலில் அவனுக்கு லக்ஷ்மி கடாக்ஷம் வந்துவிட்டது எப்படியோ அபாரமான ஐஸ்வரியம் ஏற்பட்டது. நேற்று வரை ஒன்றும் இல்லாதவன் இன்று கோடீஸ்வரனாகி விட்டார் ஒரு பத்து மாடி வீடு கட்டியாகிவிட்டது அபாரமான சம்பத்து ஐஸ்வரியம்.
அவன் பத்தாவது மாடிக்கு போனான் அங்கிருந்து ஊர் முழுவதும் பார்த்தால் எல்லா ஊர்களும் அவனுக்குத் தெரிந்தன அசாத்தியமான சந்தோஷம் அப்பொழுது அவன் என்ன நினைத்தான் தெரியுமா நான் இந்த பத்தாவது மாடியில் இருந்து குதித்தால் என்ன ஆகும் அறிவு துளி கூட கிடையாது என்ன ஆகும் என்று அவனுக்கு தெரியாது எங்கே இருந்து கீழே குதித்தால் என்ன ஆகும் ரொம்ப நன்றாக இருக்கும் போலிருக்கிறதே என்று நினைத்தானாம்.

மேலே லட்சுமி சரஸ்வதி இருவரும் பார்த்துக் கொண்டிருந்தார்கள் சரஸ்வதி லட்சுமியிடம் சொன்னாள் நீ என்னவோ அவனுக்கு பிரமாதமாக அனுக்கிரஹம் பண்ணினாய் என்ன ஆயிற்று அவன் இப்போது கீழே விழுந்து உயிரை விடப் போகிறான். உன் பணம் அவனுக்கு என்ன பிரயோஜனம் கொடுத்தது என்று கேட்டாளாம்.
அப்போது லக்ஷ்மி சொன்னாள் ஆம் இதைவிட என்னால் ஒன்றும் செய்ய முடியாது. எவ்வளவு ஐஸ்வரியம் கொடுக்க வேண்டுமோ அவ்வளவு கொடுத்தாயிற்று என்று.
நீ அங்கு போய் அவனைக் காப்பாற்ற முடியாது என்று சொன்னால் நான் காப்பாற்றுகிறேன் என்று சரஸ்வதி கூறினாள் அப்போது லக்ஷ்மி என்னால் முடியவில்லை நீதான் காப்பாற்ற வேண்டும் என்று அப்பொழுது உடனே சரஸ்வதி அனுக்கிரஹத்தினால் அவன் புத்தியில் ஸ்மரனை வந்தது நான் என்ன பைத்தியக்காரன் கீழே விழுந்தால் உயிரோடு இருக்க முடியுமா? அதனால் நான் கீழே விடக்கூடாது என முடிவு செய்தான்.
ஈஸ்வர அனுக்ரஹம் என்று சொன்னால் அவனுக்கு அந்த ஒரே ஒரு புத்தி வந்ததனால் அவனுக்கு பிராண ரக்ஷணம் ஆகிவிட்டது இல்லாவிட்டால் அவன் கீழே குதித்தால் யார் அவனை காப்பாற்ற முடியும்?
அதனால் ஈஸ்வரன் நமக்கு என்ன செய்கிறான் என்று கேட்டால் நமக்கு அந்த புத்தியை கொடுக்கிறான். இந்த கட்டத்தில் நாம் எதைச் செய்ய வேண்டும் எதைச் செய்தால் நம்மை நாம் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்ற ஒரு சரியான பாதை சரியான வழியை நாம் தேர்ந்தெடுக்கும் ஒரு புத்தியை இறைவன் கொடுக்க வேண்டும்.

எந்த காரியத்தை செய்தாலும் மனதில் தோன்ற வேண்டும் பின்பு தான் செயல். மனதுக்கு தோன்றாவிட்டால் செய்ய முடியாது ஸ்ருதியே சொல்லியிருக்கிறது தஸ்மாத் யத் புருஷோ மனஸாதி யத்ஸத் தத் வாசா வததி தத் கர்மா கரோதி
மனதில் தோன்ற வேண்டும் பின்புதான் செயல் நமக்கு சரியான விஷயத்தை தோன்றச் செய்வது யார் அது ஈஸ்வரனுடைய அனுக்கிரஹம் இதில் ஒரு சந்தேகமும் வேண்டாம். அதனால் அத்தகைய கடவுளின் துணையை நாம் அடைய முயற்சி செய்வோம். அவர் அருளால் நல்ல வழியினைத் தேர்ந்தெடுத்து சரியான பாதையில் செல்வோம். என ஜகத்குரு மகாசன்னிதானம் ஸ்ரீ பாரதீ தீர்த்த சுவாமிகள் அருளுரை வழங்குகிறார்கள்.