October 21, 2021, 2:32 pm
More

  ARTICLE - SECTIONS

  பிள்ளைகள் கண்டிப்பாக பெற்றோருக்கு செய்ய வேண்டியது.. ஆச்சார்யாள் கூறும் அருளுரை!

  abinav vidhya theerthar

  ஒரு ஏழை தம்பதியருக்கு அழகான குழந்தை பிறந்தது. அவர்கள் வீட்டின் அருகில் குழந்தைப்பேறு இல்லாத ஒரு பணக்கார தம்பதி இருந்தனர்

  அவர்கள் குழந்தையின் பெற்றோர்களை சந்தித்து உங்கள் அழகான குழந்தையை நாங்கள் சுவீகாரம் செய்து கொள்ள விரும்புகிறோம் உங்கள் அனுமதி தாருங்கள் என்று கேட்டுக் கொண்டனர்

  தாய் சிறிது தயக்கம் காட்டினார் ஆனால் தந்தையோ ஏழையாக இருப்பதால் நம்முடைய அருமையான குழந்தைக்கு நல்ல உணவு உடைகள் மற்ற வசதிகளும் நம்மால் அளிக்க முடியாது குழந்தை எங்கேயும் போக போவதில்லை நம் கண்ணெதிரே அடுத்து வீட்டில் தான் வசிக்க போகிறது ஆகையால் நம் குழந்தையை பார்த்துக் கொண்டும் இருக்கலாம்

  குழந்தையின் நலனுக்காக நாம் பிரிந்து இருப்போம் என்று கூறினார் அரை மனதுடன் தாய் அதற்கு சம்மதித்தாள் புது வீட்டில் அக்குழந்தைக்கு எல்லா வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டன இருந்தாலும் காலம் செல்லச் செல்ல பணக்கார தம்பதியர் ஏழைப் பெற்றோர்கள் தங்கள் குழந்தையை காண வருவதை தடுத்து விட்டனர்

  இதனால் மனவருத்தம் அடைந்த தாய் கண்ணீர் விட்டாள் தனது விதியை எண்ணி நொந்து கொள்வதை தவிர வேறு என்ன அந்தப் பெண் செய்ய முடியும் ஒரு நாள் பணக்காரரின் வீட்டு வேலைக்காரன் அவளைப் பார்த்து உங்கள் குழந்தைக்கு அம்மைநோய் வந்திருப்பதாகவும் நெருங்க அஞ்சி அவனருகே யாரும் குழந்தையிடம் யாருமே செல்வதில்லை என்றும் கூறினான்.

  அவள் என் செல்வமே என்று கதறிக்கொண்டு செல்வந்தனின் வீட்டுக்கு ஓடிப்போய் குழந்தையை அணைத்துக் கொண்டாள் ஒரு தாய் தன் குழந்தையிடம் காட்டும் அன்பு எவ்வளவு தீவிரமானது என்றும் அது எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாதது என்றும் இந்தக் கதை நமக்கு எடுத்துரைக்கிறது

  abinav vidhya theerthar

  குழந்தையின் நலனுக்காக பெற்றோர்கள் மிகுந்த அக்கறை எடுத்துக் கொள்கிறார்கள் அவர்கள் அக்குழந்தையின் பொருட்டு எண்ணற்ற கஷ்டங்களையும் அவமானங்களையும் தாங்கிக் கொள்கிறார்கள் எனவே வேதமானது உனது தாயை கடவுளாக வழிபடு தந்தையை கடவுளாக வழிபடு என்று கூறுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை

  தந்தையைக் காட்டிலும் தாயானவள் 10 மடங்கு பூஜிக்கத் தக்கவர் என்பது வேதவாக்கு எப்படி பார்த்தாலும் ஒருவன் தனது தாய்க்கும் தந்தைக்கும் பட்ட நன்றிக் கடனை திருப்பி செலுத்த முடியாது இவ்வளவு பெருமை வாய்ந்த பெற்றோரிடம் ஒருவன் செய்நன்றி இன்றி நடந்து கொண்டால் அவன் மிகப் பெரிய பாதகத்தை செய்தவனாவான்

  குற்றத்திற்கு எந்த ப்ராயசித்தமும் கிடையாது பெற்றோருக்கு மகனாக ஒருவன் ஆற்ற வேண்டிய கடமைகள் என்ன என்பதை சாஸ்திரங்கள் கூறுகின்றன

  பெற்றோர்கள் உயிருடன் இருக்கிற வரை அவர்கள் சொல்படி ஒருவர் நடந்து கொள்ள வேண்டும் அவர்கள் இறந்து விட்டால் வருடத்துக்கு ஒருமுறை ச்ரார்த்தம் செய்ய வேண்டும் ஒருதடவையாவது காசி சென்று அவர்களுக்கு ச்ரார்த்தம் செய்வது விசேஷம்

  srartham

  அடுத்த ஊரில் இருக்கும் தனது உறவினர் ஒருவர் பணத்தை அனுப்ப வேண்டும் என்று ஒருவர் நினைத்தால் அதற்காக ஒரு தபால் நிலையத்திற்கு சென்று மணி ஆர்டர் படிவத்தை வாங்கி கொண்டான் அதை பூர்த்தி செய்து அனுப்ப நினைத்த பணத்துடன் அங்கிருந்த ஒருவரிடம் அந்த பணத்தை கொடுத்தான் தபால் நிலையத்தில் இருந்தாலும் அதற்கு சமமான வேறு பணம் அடுத்த ஊரில் உள்ள உறவினருக்கு கொடுக்கப்பட்டது

  அதேபோல் இறைவனின் சக்தியால் நன்கு நடத்தப்பட்ட ஒரு ச்ரார்தத்தில் ஒருவன் மிகுந்த சிரத்தையுடன் படைக்கும் உணவானது இறந்த பெற்றோர்கள் பித்ரு லோகத்தில் வாழ்ந்து கொண்டிருந்தாலும் அல்லது இந்த பூமியில் ஏழு பிறவி எடுத்து வாழ்ந்து கொண்டிருந்தாலும் அவர்களுக்கு ஏற்ற ரூபத்தில் சென்றடையும் ச்ரார்த்தம் செய்தவனுக்கு மிகுந்த புண்ணியம் வருவதுடன் பித்ருக்களின் ஆசியும் கிடைக்கின்றன

  இந்த கர்மாவை ஒருவன் செய்யத் தவறினால் சாஸ்திரத்தின் கட்டளையை மீறிய குற்றத்தையும் அவன் அடைகிறான் பெற்றோர்கள் தங்கள் பங்கிற்கு குழந்தைகளிடம் நல்ல பழக்க வழக்கங்களையும் தர்ம நெறிகளையும் ஏற்படுத்த உதவ வேண்டும் குழந்தையின் ஐந்து வயது வரை பெற்றோர்கள் அன்பு காட்ட வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன 16 வயது குழந்தைகளிடம் கண்டிப்பாக இருந்து ஒழுக்கத்தை கற்றுத்தர வேண்டும் அதன்பிறகு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அனேகமாக நண்பர்களைப் போல் தான் நடத்த வேண்டும். என்று ஆச்சார்யாள் அறிவுறுத்துகிறார்கள்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,138FansLike
  366FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,573FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-