வெறும் வார்த்தைகள் ஞானத்தைத் தருமா? ஆச்சார்யாள் அருளமுதம்!

ஆன்மிகக் கட்டுரைகள் ஆன்மிகம் சற்றுமுன் ஸ்ரீசிருங்கேரி மகிமை
abinav vidhya theerthar - 2026

நான்கு வேதங்களையும் நன்கு தெரிந்து வைத்திருப்பவருக்கு 50 ஆயிரம் ரூபாய் அன்பளிப்பு தருவதாக ஒரு கொடையாளி அறிவித்தான்.

சில நாட்கள் கழித்து ஓர் இளைஞன் கொடையாளியை அணுகி தனக்கு பரிசை கொடுக்குமாறு கேட்டான். உனக்கு நான்கு வேதங்களையும் பற்றி நன்றாகத் தெரியுமா? என்று கேட்டான் கொடையாளி. அதற்கு அவன் நான்கு வேதங்கள் இருக்கின்றன என்று எனக்கு தெரியும் என்று பதில் சொன்னான் அந்த இளைஞன்.

அந்த பதிலை கேட்டு வியப்படைந்த கொடையாளி அவ்வளவுதானா என்று வினவினார். அதற்கு அந்த இளைஞன் ஐயா வேதங்கள் மொத்தம் நான்கு என்று நான் அறிவேன் இது போதாதா? என்றான்.

பாவம் கொடையாளியால் என்ன செய்ய முடியும் பரிசு ஏதும் கொடுக்காமல் அந்த இளைஞனை வெறுங்கையோடு அனுப்பி வைத்தான்.

மனிதனின் மேலெழுந்தவாரியான அறிவினால் எப்படி அவனுக்கு பரிசு பொருளை ஈட்டி தரமுடியுயவில்லையோ அதேபோல் ஆத்ம தத்துவத்தை வெறும் வார்த்தைகளால் அறிந்திருப்பதால் மட்டும் ஒருவன் முக்தியை அடைந்துவிட முடியாது. இரண்டற்ற பரம்பொருளின் நேரடியான ஞானம்தான் அஞ்ஞானத்தை நாசம் செய்து மோஷத்தைக் கொடுக்கவல்லது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.