21-03-2023 10:12 PM
More
    Homeஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்பாரதீதீர்த்த மஹாசன்னிதானம்: திவ்ய சப்ததி-பூர்த்தி மஹோத்ஸவம்!

    To Read in other Indian Languages…

    பாரதீதீர்த்த மஹாசன்னிதானம்: திவ்ய சப்ததி-பூர்த்தி மஹோத்ஸவம்!

    Bharathi therrtha swamigal
    Bharathi therrtha swamigal

    1200 வருடங்களுக்கு முன்பாக சனாதன தர்ம கோட்பாடுகளை மக்கள் உதாசீனம் செய்து அதர்ம கோட்பாடுகளை உண்மை என கருதி பின்பற்றி வந்துகொண்டிருந்த காலம். பரமசிவன் ஆதி சங்கரராக காலடியில் அவதரித்து நாடெங்கிலும் விஜயம் செய்து சனாதன தர்ம நெறிகளை உயிர்ப்பித்து ஷண்மத ஸ்தாபனத்தை செய்தார்.

    32 ஆண்டுகள் வாழ்ந்தாலும் அபாரமான செயல்களைச் செய்து அதன் பின்னர் தொடர்ந்து சனாதன தர்ம நெறிகளை ஜனங்களுக்கு உபதேசிக்க பாரததேசத்தின் நான்கு திசைகளில் 4 இடங்களைப் தோற்றுவித்தார் ஆதிசங்கர பகவத்பாதர்.. அதில் முதன்மையானது தென்திசையில் உள்ள ஸ்ரீசிருங்கிரி சாரதா பீடம் முதல் குருவாக ஆதி சங்கரரின் சீடரான ஸ்ரீ சுரேஷ்வர் ஆச்சாரியார் நியமித்தார்.

    bharthi theerthar
    bharthi theerthar

    பின்பு பீடம் வரிசையாக ஆச்சார்யார்களின் அலங்கரிக்கப்படுகிறது தற்பொழுது 36ஆவது ஆச்சார்ய புருஷர் ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகள் அருளாட்சி செய்து வருகிறார் இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஆந்திர மாநிலம் குண்டூர் ஜில்லா அலகுமல்லிப்படு கிராமத்தில் ஸ்ரீ வெங்கடேஸ்வர அனந்தலட்சுமி தம்பதிகளுக்கு சிங்கேரி சாரதா பீடத்தில் 36ஆவது ஜகத் குருவாக அருள்பாலித்து வரும் ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகள் கர வருடம் சைத்ர சுக்ல சஷ்டி 11 4 1951 வருடம் புதியதாக பிறந்த அவருக்கு சீதாராம ஆஞ்சநேயலு என்று பெயர் சூட்டினார்கள்.

    மகான்களை சிறுவயதிலேயே நாம் அடையாளம் காண முடியும் அதற்கு அவர்களது வாழ்வின் நிகழும் சம்பவங்கள் தெளிவாக விளக்குகின்றன ஸ்ரீ சீதாராம ஆஞ்சநேயரின் பிள்ளைப் பருவமும் இதை நிரூபிக்கும் விதமாகவே இருந்தது ஒரு நாள் காலைப்பொழுது அனந்தலக்ஷ்மியம்மா உறங்கிக்கொண்டிருந்த தன் பிள்ளையின் முகத்தைச் சுற்றி தெய்வீக ஒளி ஒன்று படர்ந்திருப்பதை கண்டு திகைத்துப் போனார்கள்.

    InShot 20210417 200421304
    InShot 20210417 200421304

    மற்றொரு சமயம் பாலகனுக்கு மூன்று வயது, குழந்தை அழ தொடங்க குழந்தையின் அழுகையை நிறுத்த முடியாது போனது இதனால் பயந்த பெற்றோர் குழந்தையை சிவனின் ஆலயத்திற்கு எடுத்துச் சென்றனர் சிவலிங்கத்தை பார்த்த பாலகன் அழுகையை நிறுத்தியது மட்டுமல்லாது சம்போ சிவ சிவ என பக்தியுடன் உச்சரிக்கவும் தொடங்கினார் எல்லோரும் வியந்து போனார்கள்
    இன்னொரு சமயம் தாயுடன் சிவன் கோயிலுக்கு சென்றிருந்த பாலகர் தாயாரை பிரிந்து பின் தங்கிவிட்டார் தாயாரை காணாத குழந்தைகள் பொதுவாக அழத் தொடங்கும் ஆனால் இவரோ எவ்வித பதற்றமும் இல்லாமல் அமைதியாக ஒரு மரத்தின் அடியில் அமர்ந்து சிவநாமத்தை உச்சரித்தபடியே உறங்கியும் விட்டார் இவரை காணாது பதறிப்போன தாயோ இவரைத் தேடி அம்மரத்தினடியில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்கும் இவரை கண்டு தட்டி எழுப்பினார் பதட்டமாய் நின்றிருந்த தாயை கண்ட பாலகர் சம்போ சிவசிவ என்று சொல்லிக்கொண்டே மரத்தடியில் தூங்கிவிட்டேன் ஏதாவது பிரச்சனையா என சாதாரணமாக கேட்டார் இது மகான்களுக்கு உரித்தானது சாமானியர்களுக்கு அசாத்தியமானது

    இந்த மன சாந்தியை மூன்று வயதிலேயே அந்த பாலகர் இடத்தில் காணமுடிந்தது ஏழாவது வயதில் முறைப்படி உபநயனம் செய்விக்கப்பட்டது. இயல்பிலேயே சிரத்தையும், பக்தியும் கொண்ட இவர் பிரம்மச்சாரி கடைபிடிக்க வேண்டிய தர்ம நெறிகளை கவனத்துடன் கடைபிடித்து வந்தார். உரிய காலத்தில் கர்மாக்களைச் செய்து காயத்ரி மந்திரத்தை ஜபம் செய்து, வேதம் கற்றுக் கொள்வதில் விருப்பம் ஆகி, பெரியோரை மதித்து நடந்து, இறை பக்தியில் தன்னை மறந்து, இப்படி பலப்பல மெச்சத் தகுந்த குணங்களை தன்னகத்தே கொண்டிருந்தார்.

    bharthi theerthar
    bharthi theerthar

    தந்தையார் வைதீக நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது தானும் உடன் சென்று நிகழ்ச்சிகளின்போது பெரிதும் உதவியாக இருப்பதை கடமையாக எண்ணி செய்தார் விஷயங்களை உள்ளது உள்ளபடியே கற்றுக்கொள்வதில் இவருக்கு நிகர் இவரே பிறகு இல்லங்களில் தகப்பனார் செய்து வந்த உபநயன வைபவங்களில் மிக சிலவற்றிற்கு இவர் சென்று கவனித்து இருந்தபோதிலும் உபநயன வைப்பதற்கான சடங்குகளும் மந்திரங்களும் இவருக்கு எளிதில் மனப்பாடம் ஆகி விட்டிருந்தன

    ஒரு தடவை தகப்பனார் ஏற்றுக்கொள்ளப்பட்டு போக முடியாத சூழ்நிலை ஏற்பட்டது அந்த பணியினை பாலகர் ஏற்றுக் கொண்டு சென்ற பொழுது அவர் செய்ததை கண்டு அங்குள்ளோர் வியந்தனர். சமஸ்கிருதத்தில் மிகுந்த ஈடுபாடு இருந்தது சிறிய காலத்திற்குள்ளேயே சமஸ்கிருதத்தை சரளமாக பேச தொடங்கினார் இதுவே இவரது ஆன்மீக வாழ்வில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது.

    bharathi theerthar
    bharathi theerthar

    1960 ஆம் வருடம் சாரதா பீடத்தின் 35வது ஆச்சாரியா ஸ்ரீமத் அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகள் நசரத்பேட்டை வருகை தந்தார் குருவைத் தரிசிக்க சென்ற ஸ்ரீஆஞ்சநேயலுவிற்கு சமஸ்கிருதத்தில் உரையாடும் அரியதொரு சந்தர்ப்பம் கிட்டியது இவரது சமஸ்கிருத மொழிப் பிரளவத்தை கண்ட ஆச்சாரியார் மிகவும் மகிழ்ந்து இவரை பரிபூரணமாக ஆசீர்வதித்தார்

    61 ஆம் வருடம் ஜேஷ்ட மகா சன்னிதானம் விஜயவாடா நகருக்கு விஜயம் செய்த போது அவரை தரிசிக்க சமஸ்கிருத ஆசிரியருடன் சென்றிருந்த ஸ்ரீஆஞ்சநேயலுவிற்கு ஆச்சாரியாரின் முன்னிலையில் சமஸ்கிருதத்தில் சொற்பொழிவாற்றும் வாய்ப்பு கிட்டியது அவரது உரையாற்றல் ஆச்சாரியாரை மகிழ்வித்தது சால்வை ஒன்று போட்டு ஆச்சாரியார் இவரை பரிபூரணமாக ஆசீர்வதித்தார்.

    கரைபுரண்டோடும் வெள்ளமென குருநாதரின் கருணை வெள்ளத்தில் கலந்து விட்டார் ஆச்சாரியாள் தான் தனது சத்குரு என தீர்மானித்து விட்டார் குருவின் நினைவலைகள் மிகுந்தவராக ஒரு ஊர் திரும்பிய ஸ்ரீஆஞ்சநேயலு அன்றைய தினத்திலிருந்து தாம் செய்யும் அனைத்து காரியங்களும் தன் குருநாதரின் அருள் தம்முடன் இருந்த தம்மை வழி நடத்திச் செல்வதை உணர்ந்தார்.

    bharathi theerthar
    bharathi theerthar

    ஐந்து வருடங்கள் உருண்டோடின சிலையின் குருபக்தியும் உலக விஷயங்களில் அவருக்கு இருந்த தீவிர வைராக்கியமும் மிக உயர்ந்த நிலையை அடைந்திருந்தனர் 66 அவரிடம் ஆச்சார்யாள் அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகள் உஜ்ஜயினி நகரில் சாதுர்மாஸ்ய விரதத்தை தொடங்கி இருந்தார்

    அவரை தரிசிப்பதற்காக நாசரத்பேட்டையிலிருந்து பக்தர்கள் கூட்டம் கிளம்பியது இல்லத்தை விட்டு விட்டு குருவின் திருவடியில் சரணடைந்து விட முடிவு செய்து இல்லத்தை விட்டு ஸ்ரீஆஞ்சநேயலு குழுவினருடன் கிளம்பி குருநாதரின் திருப்பாத கமலங்களில் தன்னை பூரணமாக அர்ப்பணித்துக்கொண்டார்.

    இவரின் தீவிர வைராக்கியம் சாஸ்திரம் கற்றிடவேண்டும் என்ற உயர்ந்த விருப்பமும் அறிந்து பெரிதும் மகிழ்ந்த ஜேஷ்ட மகாசன்னிதானம் ஸ்ரீஆஞ்சநேயலுவை தம் சீடராக ஏற்று தாமே தர்க்க சாஸ்திரத்தை கற்றுக்கொடுத்தார்

    சாதுர்மாஸ்ய விரதம் முடிந்து கிளம்பி பாரதத்தின் பல்வேறு பிராந்தியங்களில் யாத்திரை செய்த ஆச்சாரியார்யாள் ஸ்ரீஆஞ்சநேயலுவையும் தம்முடன் அழைத்துச் சென்றார். தனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் பாடங்களை நடத்தி வந்தார் இறுதியில் சிங்காரி வந்தடைந்த ஆச்சாரியாள் அவருக்கு வேத சாஸ்திரங்களின் உயர்நிலை பாடங்களை கற்றுத் தர ஏற்பாடுகள் செய்தார்.

    bharathi theerthar
    bharathi theerthar

    கோபால கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள் முதலான பல வித்வான்கள் அனைவருமே ஒரே ஒருமுறை கூறப்பட்டதை அப்படியே மனதில் பதிய வைத்து ஏக சந்த கிரஹியாக விளங்குவதைக் கண்டு வியந்தனர். சிறிய காலகட்டத்திலேயே அனைத்தையும் கற்றுத் தேர்ந்தார் இறை பக்தி குருபக்தி விசேஷமாக பிரகாசித்தது ஜேஷ்ட மகாசன்னிதானம் மகிழ்ச்சியும் திருப்தியும் கொண்டார் இப்படிப்பட்ட ஒருவரது வழிகாட்டுதல் ஆத்திக உலகிற்கும் கிடைக்க வேண்டும் என்று சற்குருநாதர் திருவுளம் கொண்டார்

    இதன் விளைவாக சாரதா அம்பாளின் பரிபூரண சம்மதத்துடன் 11 11 1974 அன்று ஸ்ரீ ஆஞ்சநேயலுவுக்கு சந்நியாச தீட்சையும் ஸ்ரீ பாரதி தீர்த்தர் எனும் திருநாமம் அளித்து அவரை சிங்கேரி ஸ்ரீசாரதா பீடத்தின் 36ஆவது பீடாதிபதியாக அறிவித்தார் இந்த பீடத்தின் ஆச்சார்ய பொறுப்பேற்கும் ஒவ்வொருவருக்கும் கடினமான தேர்வு செய்ய ஒன்றினை பகவான் வைப்பது உண்டு இவ்விடத்தை நடத்திச் செல்ல தகுந்த சீடர் ஒருவரை தேர்ந்தெடுப்பதே அது. என்னைப் பொருத்தவரை சுவாமிகளைப் பொறுப்பிற்கு தேர்ந்தெடுத்ததன் மூலம் பகவான் வைத்த தேர்வில் நான் முதல் வகுப்பில் தேறி விட்டேன் என்று மிகவும் மகிழ்ச்சியுடன் அறிவித்தார் ஜேஷ்ட ஸ்ரீமகாசன்னிதானம்.

    36ஆவது ஆச்சார்ய புருஷர் ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகள் அவர்களின் 71 வந்து வர்த்தந்தி மஹோற்சவமான இன்று அவரை பணிந்து குருவின் அருளுக்கு பாத்ரமாகிய எல்லாவித க்ஷேமங்களையும் பெறுவோமாக.!

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    1 × 4 =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Most Popular

    மக்கள் பேசிக்கிறாங்க

    ஆன்மிகம்..!

    Follow Dhinasari on Social Media

    19,036FansLike
    388FollowersFollow
    83FollowersFollow
    74FollowersFollow
    4,628FollowersFollow
    17,300SubscribersSubscribe

    சமையல் புதிது..!

    COMPLAINT BOX | புகார் பெட்டி :

    Cinema / Entertainment

    லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை..

    திருவண்ணாமலையில் நேற்று படமாக்கப்பட்ட லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை எதிரொலி ஐஸ்வர்யா ரஜினிகாந்தின்...

    கண்ணை நம்பாதே-படம் எப்படி?..

    அவரவர் குற்றத்திற்கு தண்டனை உண்டு என்கிற கருவை அடிப்படையாக் கொண்டு உருவான படம் கண்ணை நம்பாதே. தான்...

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once..

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once திரைப்படம் .சிறந்த...

    ஆர் ஆர் ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது..

    ஆர் ஆர் ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது.விருதைபெரும் மகிழ்ச்சி...

    Latest News : Read Now...