எந்த கஷ்டம் வந்தாலும் கந்தக் கடவுள் அருள் பெற..!

ஆன்மிகச் செய்திகள் ஆன்மிகம்
tiruchendur-murugan1
tiruchendur-murugan1

வாழ்க்கையில் வெற்றியடைவதற்கு மிகவும் சிரமப்பட வேண்டியுள்ளது. எதற்கெடுத்தாலும் பல தடங்கல்களை சந்திக்கவேண்டியுள்ளது.

இந்த பிரச்சனையிலிருந்து நாம் தீர்வு காண அந்த ஆறுமுகனின் பாதங்களில் தான் நாம் சரணடைய வேண்டும். 10 நாட்களில் நம் பிரச்சனைகள் அகல, நினைத்தது நிறைவேற முருகன் வழிபாடே உகந்தது.

தொழில் நஷ்டம், எந்த வேலை செய்தாலும் தோல்வி, குடும்ப கஷ்டம், வேலையின்மை என பல கஷ்டங்களை பலர் தாங்கி வருகின்றனர். இதற்கான பல வழிகள் கிடைக்க வில்லையா? அதற்கான தீர்வு தான் முருகன் வழிபாடு.

ஒருவருக்கு வாழ்வில் வெற்றியை தேடி தருவதே நம் முருக பெருமான் தான். தடை கற்கள் அகல நாம் முருகனை மனதார நினைத்து வழிபட்டு வந்தாலே போதுமானது.

வீட்டில் அறுபடை முருகனின் ஆறுமுகம் கொண்ட உருவப்படம் வைத்து முருகனுக்கு உகந்த நாளில் பூஜைகள் செய்ய வேண்டும். அல்லது அருகிலுள்ள முருகன் கோவிலுக்கு சென்று பாலாபிஷேகம் செய்து வர வேண்டும். தொடந்து 10 வாரங்கள் செய்து வந்தால் வீட்டில் கஷ்டங்கள் அகலும். நினைத்தது நிறைவேறும்.

மேலும் வீட்டில் ஆறுமுகனின் புகைப்படத்தை வைத்து தொடர்ந்து 10 நாட்கள் பூஜைகள் செய்ய வேண்டும். அதாவது தினமும் ஒரு பூக்களை வைத்து வீட்டிலேயே முருகனுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.

ஓம் முருகா சரணம் என ஒவ்வொரு பூக்களை அர்ச்சனை செய்யும் போது 11 முறை உச்சரித்து மனதார வணங்க வேண்டும். மேலும் 10 நாட்கள் விரதம் இருக்கும்போது மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும்.

வீடுகளை தினமும் துடைத்து சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும். இழிவு சொற்களை பேசுதல் போன்றவை கூடாது. இவ்வாறு 10 நாட்கள் தொடர்ந்து இந்த பூஜைகளை செய்து வந்தால் வீட்டில் உள்ள கஷ்டங்கள் விலகி நன்மையே உண்டாகும். நினைத்த காரியம் வெற்றி பெறும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.