spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்ஸ்ரீஇராமநவமி ஸ்பெஷல்: இராமாயணம் அறிந்ததும் அறியாததும்..!

ஸ்ரீஇராமநவமி ஸ்பெஷல்: இராமாயணம் அறிந்ததும் அறியாததும்..!

- Advertisement -

ஸ்ரீராமர் சீதையைச் சந்தேகித்தாரா?

மஹாலஷ்மியின் அம்சமாக, பிரம்மரிஷி குசத்வஜரின் மகளாகப் பிறந்தாள் வேதவதி(வேதவல்லி).
இவள் ஸ்ரீமஹா விஷ்ணுவையே மணக்க வேண்டும். எனத் தவமிருந்தாள்.

பிரம்மாவிடமிருந்து அளவற்ற வரங்களை வாங்கி வந்த ராவணன், வேள்வித் தீயின் முன் தவமிருந்த வேதவல்லியைப் பிடித்திழுத்தான்.

பாவியே! என்னால் உன் நாடு, நகரம் எல்லாம் அழியும். எனச் சாபமிட்டு விட்டு அத்தீயிலேயே விழுந்து உயிரைவிட்டாள் வேதவல்லி. அவளே சீதையாக அன்னை வந்தாள். என்பது வால்மீகி ராமாயணம்.

துளசிதாசரின் ராமாயணத்தின் படியும், திருப்பதிசாமியின் வரலாற்றின் படியும் வரும் வேதவல்லியின் கதை

காட்டில் சீதையைத் தூக்கிச் செல்ல, கபட சன்னியாசியின் வேடத்தில் வந்தான் பெண் பித்தனான கொடிய
ராவணன்.

அப்பொழுது சீதை ஆசிரமத்தினுள் செல்ல, அங்கே சீதை மறைந்துப் போனாள்.
வேதவல்லியே சீதையின் உருவில் கபட சன்னியாசிக்கு உணவளிக்க வெளியே வந்தாள்.

வேதவல்லியைச் சீதை என நினைத்துத் தூக்கிச் சென்று, சிறை வைத்தான் ராவணன்.

வேதவல்லி நீண்ட காலமாகத் தவம் செய்து வல்லமைப் பெற்றவள் என்பதால் அவளது சாபப்படியே, ஏராளமான பெண்களின் வாழ்வைச் சீரழித்தவனும், தன் தங்கை சூர்ப்பணகையின் கணவனையே கொன்ற ஈவு இரக்கமற்ற ராவணனை அழிக்க சீதையின் உருவில் சிறையிருந்தாள்.

போரில் ராவணனைக் கொன்ற பிறகு, நிஜ சீதை வெளியே வரவேண்டும். எனவே பகவானின் சித்தப்படியே சீதையின் தீக்குளிப்பு நடந்தது.

சீதை நெருப்பில் இறங்கி வரவேண்டும்! என ஸ்ரீராமர் நினைத்தார்!
உண்மையே.

ஆனால் அது தன் மனைவி மீது கொண்ட சந்தேத்தினால் அல்ல.

அறிவற்று சிந்திப்போருக்கு எல்லாமே தவறாகவே தெரியும்.

ஸ்ரீராமரை மானைப் பிடித்துத் தரும்படி சீதைத் துரத்தியபோது, லக்ஷ்மணரைச் சீதையின் காவலுக்கு வைத்துவிட்டு போனார் ஸ்ரீராமர்.

ஆனால் மானாக வந்த அரக்கன் மாரீசனோ, ஸ்ரீராமரின் அம்புப் பாய்ந்ததும்,
ஏ! லக்ஷ்மணா! ஏ! சீதா! என ஸ்ரீராமரின் குரலிலேயே உரக்க கத்திவிட்டு உயிரை விட்டான்..

எனவே சீதை, ஸ்ரீராமர் தான் ஆபத்தில் கத்துவதாக நினைத்து, லக்ஷ்மணரை உதவிக்குப் போகும்படி துரத்தினாள்.

இது அண்ணனின் குரலல்ல! அண்ணன் இப்படி கத்த மாட்டார். ஆபத்து என் அண்ணனுக்கில்லை!
உங்களுக்குத் தான் வரப்போகிறது! என நான் நினைக்கிறேன்! இது அரக்கர்களின் மாயவேலை! என்று சீதைக்கு எவ்வளவோ எடுத்துச் சொன்னார் லக்ஷ்மணர்.

ஆனால் பிடிவாதத்தில் பெண்களை வெல்ல யாராலும் இயலாது!
நல்லோர்களின் அறிவுரையைக் கேட்காது வலியப் போய் ஆபத்தில் சிக்கிக் கொள்ளும் பெண்களைப் போல, அன்னை சீதாதேவியும் ஸ்ரீராமருக்குத் தான் ஆபத்து! என அரண்டுப் போனாள்.

லக்ஷ்மணரின் எந்தக் கூற்றும் அவள் செவிகளில் ஏறவில்லை.

தனது தங்கை ஊர்மிளையின் கணவன் இவன். என நினையாமலும், நாட்டைத் துறந்து, கட்டிய மனைவியைத் துறந்து, காட்டிற்கு வந்து ஒரு சேவகனைப் போல இத்தனைக் காலமும் பணியாற்றியவன் இவன். என சிந்திக்காமலும், நம் கணவனின் தம்பி. என்ற மரியாதையைக் கொடுக்காமலும், லக்ஷ்மணரையே சந்தேகித்து, வாய்க்கு வந்தபடி அவரைத் திட்டி, துரத்தியடித்தாள் சீதா தேவி.

நீ இப்பொழுது அண்ணனைத் தேடிச் செல்லாவிட்டால் உடனே, தீயில் விழுந்து நான் சாவேன். எனச் சீதை மிரட்டியதால், வேறுவழியின்றி ஸ்ரீராமரைத் தேடிச் சென்றார் தூயவரான லக்ஷ்மணர். அவரது தலைமறைந்ததும், பெண் பித்தன் ராவணன் சீதையைத் தூக்கிச் சென்று சிறை வைத்தான்.

இன்னொரு கதை

ராவணனின் அண்ணன் குபேரன்.
குபேரனின் மகன் நளகூபரனின் மனைவி ரம்பை.

பேரழகியான ரம்பையை, மருமகள் எனவும் யோசியாமல் கெடுத்தான் ராவணன்.
இனி நீ விருப்பமில்லாத எந்தப் பெண்ணைத் தொட்டாலும் தலை வெடித்துச் சாவாய். என ரம்பை, ராவணனைச் சபித்தாள்.

எனவே உயிர் போய்விடும். எனப் பயந்தே ராவணன், சீதையைத் தொடவில்லை.

இங்கே சில பேர் சொல்வதைப் போல அது ராவணனின் நற்பண்பல்ல! தலை வெடித்துச் செத்துவிடுவோம். என்ற பயம்.

நீ ஏன் என் பேச்சை மீறி
சீதையைத் தனியே விட்டு வந்தாய்?
என ஸ்ரீராமர், லக்ஷ்மணரைக் கோபித்தார்.

லக்ஷ்மணரின் தயக்கமும், அன்னை வைதேகி உயிரை விட்டு விடுவதாகக் கூறினார்கள் எனத் தயங்கியவாறே தம்பி பேசியவிதமும் ஸ்ரீராமருக்கு, அங்கே என்ன நடந்திருக்கும்?
என்பதைப் புரிய வைத்தது.

அன்னை வைதேகியே இங்கே பயத்தாலும், மதிமயக்கத்தாலும்
தவறிழைத்து விட்டார்.

‘என்னுயிர் தம்பி லக்ஷ்மணனின் தலையின் மீது நெருப்பை அள்ளிக் கொட்டியதைப் போல, அவதூறு பேசினாய் அல்லவா?

அதற்குப் பரிகாரமாக நெருப்பில் இறங்கி, உனது பாபத்தைப் போக்கி வா’ என்று நினைத்தே ஸ்ரீராமர், சீதையை நெருப்பில் இறங்கச் சொன்னார்.

ஆருயிர் மனைவி தீயில் இறங்கும் போது ஸ்ரீராமரின் மனது எத்தனை வேதனைப்பட்டிருக்கும்?.

அதை இதயமுள்ள நல்லோர்களால் மட்டுமே புரிந்துக்கொள்ள இயலும்.

துளசி ராமாயணத்தின்படி, சீதையின் உருவிலிருந்த வேதவல்லி தீயில் இறங்கி மறைய, நிஜ சீதை தீயிலிருந்து வெளியே வந்தாள்.

வால்மீகி ராமாயணத்தின் படி, அரக்கனின் சிறையிலிருந்தவள் இவள். என ஊரார் தன் மனைவியைப் பழிக்கக் கூடாது என்றே வானரங்கள், விபீஷணன் அனைவரின் முன்பாக இலங்கையிலேயே சீதையைத் தீக்குளிக்க வைத்தார் ஸ்ரீராமர்.

தன் மனைவி புதுமரலாக வெளியே வருவாள். என்பது அவருக்குத் தெரியும்.
சீதையின் மீது ஸ்ரீராமருக்குச் சந்தேகம் என்பதே கிடையாது.

அது ஊராருக்காக நடத்தப்பட்ட நாடகமே.
அது சீதா தேவிக்கும் தெரியும்.
தன்னை ஊரார் சந்தேகக்காரன். எனப் பழித்தாலும் பரவாயில்லை;

தன் மனைவியின் கற்பை யாரும் எவ்விதக் குறையும் கூறிவிடக்கூடாது. என்று, சீதையின் மீது வைத்த அளவற்ற காதலே, ஸ்ரீராமரை அவ்வாறு செய்யத் தூண்டியது.

பிரம்மாவிடமே வரம் வாங்கி, சிவனாரையே அவமதிக்க நினைத்து, கைலாயத்தையே அசைத்தத் தசமுகன், சிவனாரால் தண்டிக்கப்பட்டு, “ஓவென அலறியதால்” ராவணன் எனப் பெயர் பெயர் பெற்றான்.

சிவபக்தனாக மாறி சாமகானம் இசைத்துத் தப்பித்த ராவணனும் இறுதியில் நீயே பரம்பொருள் என உணர்ந்து, “உன் புகழ் இவ்வையகத்தில் இருக்கும் வரை, என் பெயரும் இருக்கும்! அதுவே என் பாக்கியம்!” என உணர்ந்தே உன்னை எதிர்த்துப் போரிட்டு மாண்டான்.

பிராமணனாகப் பிறந்து, ராட்சதனாகவே வாழ்ந்த ராவணனே உயிர் போகும் தறுவாயிலேயே புரிந்துக் கொண்டான்.

ஜடாயு

ஸ்ரீராமாயணத்தில் லங்கேஸ்வரன் ராவணன் மாறுவேடத்தில் வந்து சீதாதேவியை தூக்கிக்கொண்டு போனான் இடையில் பறந்து வந்து தடுத்து கடைசி நிமிடம் வரை போரிட்டுத் தன் உயிரைத் தியாகம் செய்த வீரர் ஜடாயு.

கருடனின் மூத்த சகோதரர் அருண பகவான்.

இவர் சூரியனின் தேரோட்டியாக இருப்பவர்.

அருண பகவானின் மனைவி ச்யேனி.
இவர்களது மூத்த புதல்வர் சம்பாதி இளைய புதல்வர் தான் ஜடாயு.

இந்த ஜடாயுவிற்கும், தசரதருக்கும் தான் நட்பு உண்டானது. சாதாரண நட்பு அல்ல பெரும் சகோதர பாசம்.

பெற்ற தந்தையான தசரருக்குக்கூட, ஸ்ரீராமர் கையால் ப்ரேத சம்ஸ்காரங்கள்(இறுதி சடங்கு) செய்யக்கூடிய பாக்கியம் இல்லை.

அந்தப் பாக்கியம், ஜடாயுவிற்குத்தான் கிடைத்தது.

ஏன்? எப்படி?

சகோதரர்களான சம்பாதியும் ஜடாயுவும் ஒருநாள், ‘‘உயரமாகப் பறப்பது யார்?’’ என்ற போட்டியில் பறக்கத் தொடங்கினார்கள்.

அண்ணனைவிட, தான் உயரத்தில் பறக்க வேண்டும் என்று ஜடாயு உயர உயரப் பறந்தது.

ஒரு கட்டத்தில் சூரியனின் வெப்பக்கதிர்களின் தாக்கம் தாங்காமல், ஜடாயுவின் சிறகுகள் கருகத் தொடங்கின.

தம்பியின் நிலை கண்டு சம்பாதி பதறினார் தம்பியைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் தம்பிக்கு மேலாக தான் பறந்தார்.

சூரியக்கதிர்கள் அவரின் சிறகுகளை எரித்தன.

சிறகுகளை இழந்த சம்பாதி, முனிவர் ஒருவரின் (நிசாகரர்) ஆசிரம வாசலில் விழுந்தார்.

சம்பாதியின் அச்செயலால், ஜடாயு உயிர் பிழைத்தார்.

அதன்பின் ஜடாயு, தண்டகாரணியம் வந்தார்.

தண்டகாரண்யத்தில் ஜடாயு இருந்த வேளையில், படைகள் சூழ தசரதர் வேட்டைக்கு வந்தார்.

வெயில் கொளுத்தியன் காரணமாக ஏற்பட்ட தாகத்தால் சோர்ந்து போன படைகள் ஓய்வெடுக்கத் தொடங்கின.

தாகத்தால் தவித்த தசரதர் ஒரு மரத்தின் பெருத்த அடிப்பாகத்தில் தலையை வைத்துப்படுத்தார் உறங்கினார்.

சற்று நேரத்தில், தூக்கக் கலக்கத்தில் தன் காலின் அருகில் இருந்த பாம்புப்புற்றை உதைத்தார் தசரதர்

விளைவு?

புற்றில் இருந்த பாம்பு, கோபம் கொண்டு புற்றில் இருந்து வெளி வந்தது.

சற்று தூரத்திலிருந்து அதைப் பார்த்துக் கொண்டிருந்த ஜடாயு, ‘விசுக்’கென்று எழுந்து பறந்து, தன் கூர்மையான அலகினால் பாம்பைக் கவ்வி, அதை இரு துண்டுகளாக ஆக்கி எறிந்தது.

அரவத்தினால் எழுந்த அரவம் கேட்டு எழுந்த அரசரிடம், ஜடாயு நடந்தவற்றையெல்லாம் எடுத்துச் சொன்னார்.

அது மட்டுமல்ல! தசரதரின் களைப்பை குறிப்பால் உணர்ந்து, கனிகளும் நீரும் தந்து, ‘‘மன்னா! உன் களைப்பு தீர இதை உண்டு விட்டு உன் நகருக்குச்செல்!’’ என்றார்.

எந்த விதமான பிரதிபலனும் எதிர்பாராமல் தன் உயிரைக் காத்த ஜடாயுவை,தன் மூத்த சகோதரராக – அண்ணனாகவே ஏற்றுக் கொண்டார் தசரதர்.

உலகின் மிகப்பெரிய கற்சிற்பங்களில் ஒன்றான ஜடாயு கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ளது.

இராவணனால் தாக்கப்பட்ட ஜடாயு விழுந்த இடம் இது என்று உள்ளூர் மக்களால் நம்பப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Follow us on Social Media

19,170FansLike
387FollowersFollow
92FollowersFollow
0FollowersFollow
4,901FollowersFollow
17,300SubscribersSubscribe