April 27, 2025, 3:19 AM
29.6 C
Chennai

இன்று ஆடி அமாவாசை திதி..

அமாவாசை திதி மாதம் ஒரு முறை வந்தாலும் தை ஆடி புரட்டாசி அமாவாசை திதி மிக முக்கியமான தாக சொல்லப்படுகிறது.இன்று ஜூலை 28 வியாழன் ஆடி அமாவாசை திதியாகும்.

சூரியனும், சந்திரனும் ஒரே ராசியில்  சஞ்சரிக்கும் நாள் தான் அமாவாசை என ஜோதிட கணிப்பீடு பிரகாரம் கூறப்படுகிறது. ஒன்பது கிரகங்களுமே சக்தி வாய்ந்தது என்றாலும் சூரியன் சந்திரன் இரண்டுமே மிக சக்தி வாய்ந்த கிரஹங்கள். எனவே அவற்றின்  ஆகர்ஷண சக்தி   அமாவாசை அன்று  அதிகமாக இருக்கும். இதனால் சிலர்  மூளையில் சில மாற்றங்கள் நிகழ வாய்ப்பு உள்ளது. மனம் கொந்தளிப்பு அல்லது சில சஞ்சலத்துடனேயே இருக்கும்.

சந்திரன்  முழுசாக மறைந்திருக்கும்  நாள்.   அன்றிலிருந்து மீண்டும் வளர்ந்து  கண்ணில் படும். என்பதால்    நியூ மூன்    என்று அமாவாசைக்கு பெயர் வைத்து அழைக்கப்பட்டது. சமஸ்கிருத
ததில் “அமா’ என்றால் “ஒண்ணாக ” என்று அர்த்தம். “வஸ்யா” என்றால்  சேர்ந்து  வசிப்பது.  அமாவாசை அன்று நாம் செய்யவேண்டிய, செய்யக்கூடாத விஷயங்களைத் தெரிந்து கொள்வது அவசியம்.
குலதெய்வத்தை வழிபடுவதும், அம்மன் வழிபாடு நடத்துவதும் மிகவும் சிறப்பானதாகும்.
அமாவாசை நாளில் உணர்ச்சிவசப்படுவதைத் தவிர்க்கவும். கோபம், பதற்றம் வேண்டாம். முடிந்தால் பேசாமல் மெளன விரதம் இருக்கவும் ஜோதிடத்தில் கூறப்படுகிறது.

மாதம் ஒரு அமாவாசை வந்தாலும், தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசி மகாளய அமாவாசை தினங்களில் நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் பண்ண  முக்கிய நாட்களாக சொல்லப்படுகிறது

வாசலில் கோலமிடுவது இறைவனை வரவேற்க.  ஆனால் அமாவாசை தினங்களில்  நம் முன்னோர் கள்,  பித்ருக்கள்,  நம் வீட்டின்  வாசலில்  பசி தாகத்தோடு  வந்து நிற்பார்கள்.  உள்ளே வர நினைத்தாலும், வீட்டு வாசலில் இருக்கும் கோலத்தால்  திரும்பிப் போய்விடுவார்கள்.  இறந்தவர்களாக இருப்பதால்  அவர்கள் வரும் போது ஒரு சில அதிர்வலைகளை ஏற்படும், அதனால் சில வித பிரச்னைகள் ஏற்படலாம் என்பதால் அமாவாசை திதியில் வாசலில் கோலமிட்டு வதை தவிர்க்க ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

அமாவாசை தினத்தில் நாம் மிக கடினமான, புதிய முயற்சிகளை செய்யக்கூடாது. அப்படி செய்யும் போது நம் உடலில் ஏதேனும் சிறு காயம் ஏற்பட்டாலும் அதன் வீரியம் மிக அதிகமாக இருக்கும். அதனால் ஏற்படும் காயம் ஆறுவதற்கும் காலதாமதம் ஆகலாம்.  அதனால் தான்  அமாவாசை அன்று   உணர்ச்சி வசப்படுவ தைத் தவிர்க்கவும். கோபம், பதற்றம் வேண்டாம். முடிந்தால் பேசாமல் மெளன விரதம் இருக்கலாம்.

  நமது பஞ்சாங்கம்  சந்திரன் இயங்குவதை வைத்து காலத்தை கணிப்பதால் சந்திரமானம் என்று பெயர். சந்திரன்  ஒருமுறை  முழுசாக  சுற்ற ஒரு மாதம். 15 நாட்கள் வளர்ந்து பௌர்ணமியாக, அடுத்த 15நாள்
தேய்ந்து மறைந்து மறுபடி அமாவாசை.  இதற்கு  உண்டான கால அளவு 29 நாட்கள் 12 மணி 44 நிமிடங்கள் 3.00 வினாடியாகும்.

சந்திரன் தேய்வது வளர்வது தொடர்பாக  சந்திர மாதத்தை  ரெண்டாக  பிரித்து  15  நாள் வளர்பிறை காலம் ‘சுக்ல பட்சம்’ , 15 நாள் தேய்பிறை காலம் ‘கிருஷ்ண பட்சம்’ . இதில் 14 திதிகள்  எனும் சந்திர நாட்கள். அவற்றின் பெயர்கள் :பிரதமை, துவிதியை, திருதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி,சப்தமி, அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி, சதுர்த்தசி.  அப்புறம் அமாவாசையோ  பௌர்ணமியோ  வரும்.
முன்னோர்களை நினைத்து எள்ளும் தண்ணீரும் இறைத்து வழிபாடு செய்வது தர்ப்பணம் ஆகும். பசுமாட்டிற்கு வாழைப்பழம் அகத்திக்கீரை கொடுப்பது தர்ப்பணம் ஆகும்.

அமாவாசை தினத்தில் பித்ருக்களுக்கு பிடித்த உணவு வகைகளை செய்து அதை படையலிட்டு பிறகு அதில் கொஞ்சம் எடுத்து காக்கையை சாப்பிட அழைத்து வைக்க வேண்டும். கூடி வாழ்ந்து சேர்ந்து உண்ணும் வழக்கம் காகங்களிடம் மட்டுமே உள்ளது. நம் முன்னோர்கள் காகங்கள் வடிவில் வந்து நாம் அளிப்பதை பெற்றுக் கொள்வார்கள் என்பது காலம் காலமாக உள்ள நம்பிக்கை.   அவர்கள் உணவை சுவீகரித்து விட்டு நம்மை மனப்பூர்வமாக
ஆசிர்வதிப்பார்கள், குடும்பம் க்ஷேமமாக இருக்கும் என்று நம்பிக்கை கொள்ளப்படுகிறது

இந்த 2022 ஆண்டின் ஆடி அமாவாசை இன்று ஜூலை 28ஆம் தேதி வியாழக்கிழமை கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் நம்முடைய முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்து எப்படி வழிபடுவது அவசியமாகும்.
பித்ரு தர்ப்பணம் செய்வதற்காக பிரத்தியேகமாக ஆறு நாட்களில் முக்கியமான ஒன்று, ஆடி அமாவாசை ஆகும். இந்த நாட்களில் சிலர் சில பொருட்களைத் தானமாக தருகின்றனர்.

பித்ருகளுக்கு திதி கொடுக்கும் பொழுது, ஏழைகளுக்கு உணவு, ஆடை, மற்றும் பசுக்களை தானம் செய்கின்றனர். தானத்தில் சிறந்த ஒன்றான, அன்னதானம் செய்தால் தீராத வினையெல்லாம் தீரும் பித்ருக்களின் முழு ஆசிர்வாதம் கிடைக்கும்.  தானியங்களை தானம் செய்வதால் லட்சுமி மற்றும் அன்னை அன்னபூரணி இருவருக்குமே ஆசிகள் கிடைக்கும், அனைத்து விருப்பங்களும் நிறைவேறும் என்பது ஐதீகம் ஜோதிட சாஸ்திர ரீதியாக கூறப்படுகிறது.இந்துமத பெரியோர்கள் பலரும் இதை கடைப்பிடிக்கின்றனர்

இன்று ஆடி அமாவாசை தர்ப்பணம் கொடுக்க சரியான நேரம்:

நம்முடைய முன்னோர்களுக்கு ஆடி அமாவாசை தர்ப்பணம் இன்று ஜூலை 28ம் தேதி வியாழக்கிழமை காலை முதல் பிற்பகல் வரை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் கொடுக்கலாம். மேலும், இந்த நேரத்தில் தான் பித்ருக்கள், பூலோகத்திலிருந்து மீண்டும் பிதுர் லோகத்திற்கு திரும்பிச் செல்வதாக நம்பப்படுகிறது. எனவே, அவர்களை பூமிக்கு வரும்படி அழைப்பு விடுக்கவும், நினைவில் கொள்ளவும் ஆடி அமாவாசையன்று அவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கப்படுகிறது. 
இன்றைய ஆடி அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்  கொடுப்பது அவர்களின் பிள்ளைகளுக்கும் தலைமுறைக்கும் முன்னோர்களின் ஆசி கிடைக்கும். நமக்கு வாழ்வில் அனைத்து செல்வங்களும் கிடைக்கும். மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். எனவே, இந்த அமாவாசை தினத்தில் நம்முடைய வீட்டினை சுத்தம் செய்து வீடுகளில் விளக்கேற்றி நம்மை  முன்னோர்களை வரவேற்று ஆசி பெறுவோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

மாணவர்கள் படித்தால் திமுக.,வின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?

இது தனது அரசியல் எதிர்காலத்துக்கு அச்சுறுத்தலாகலாம் என முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?" என்று ஆளுநர் ரவி கேள்வி எழுப்பியதாக

பஞ்சாங்கம் ஏப்.26 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

IPL 2025: கடைசி இடத்தில் தொடரும் தோனியின் சிஎஸ்கே

ஐ.பி.எல் 2025 – சென்னை vs ஹைதராபாத் – எம்.ஏ. சிதம்பரம்...

காஞ்சி சங்கர மடத்தின் 71வது பீடாதிபதி தேர்வு!

காஞ்சி காமகோடி பீடாதிபதியின் ஆசீர்வாதத்துடன், கணேச சர்மா யஜுர்வேதம், சாமவேதம், ஷடங்காக்கள், தசோபநிஷத் மற்றும் சாஸ்திர படிப்புகளைத் தொடர்ந்து வருகிறார்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

மாணவர்கள் படித்தால் திமுக.,வின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?

இது தனது அரசியல் எதிர்காலத்துக்கு அச்சுறுத்தலாகலாம் என முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?" என்று ஆளுநர் ரவி கேள்வி எழுப்பியதாக

பஞ்சாங்கம் ஏப்.26 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

IPL 2025: கடைசி இடத்தில் தொடரும் தோனியின் சிஎஸ்கே

ஐ.பி.எல் 2025 – சென்னை vs ஹைதராபாத் – எம்.ஏ. சிதம்பரம்...

காஞ்சி சங்கர மடத்தின் 71வது பீடாதிபதி தேர்வு!

காஞ்சி காமகோடி பீடாதிபதியின் ஆசீர்வாதத்துடன், கணேச சர்மா யஜுர்வேதம், சாமவேதம், ஷடங்காக்கள், தசோபநிஷத் மற்றும் சாஸ்திர படிப்புகளைத் தொடர்ந்து வருகிறார்.

‘இஸ்ரோ’ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் காலமானார்!

'இஸ்ரோ' முன்னாள் தலைவர் கி.கஸ்தூரி ரங்கன் தம் 84ம் வயதில், வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, பெங்களூருவில் ஏப்.25 இன்று காலமானார்.

பயங்கரவாதிகளின் முதுகெலும்பை முறிக்கத் தேவையான சக்தி..!

இந்நிலையில், நேற்று பீகார் மாநிலத்துக்குச் சென்றிருந்த பிரதமர் மோடி, அங்கே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், காஷ்மீர் படுகொலைச் சம்பவத்தில்

IPL 2025: கோலி அதிரடி; பெங்களூருக்கு சிறப்பான வெற்றி!

பெங்களூரு அணியின் பந்துவீச்சாளர் ஹேசல்வுட் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இன்றைய ஆட்டத்தில் இரண்டு

Entertainment News

Popular Categories