FB IMG 1665061695955 - 2026

திருமீயச்சூர் லலிதாம்பிகை நெய் குள தரிசனம்

ஆன்மிகம்

திருமீயச்சூர் லலிதாம்பிகை அம்மனின் நெய்க்குளம் தரிசனம் வருடத்தில் மூன்று முறை மட்டுமே கிடைக்கும்

  1. வைகாசி மாதம் பெளர்ணமி,விஜய தசமி
  2. தை அமாவாசை ஆகிய மூன்று தினங்களில் மட்டுமே கிடைக்கும்.

கருவறைக்கு முன்பாக 15அடி நீளத்திற்கு வாழை இலையை பரப்பி அதில் சர்க்கரைப் பொங்கலை பரப்பிடுவர்.

அத்துடன் புளி சாதம், தயிர்சாதம்
போன்றவற்றை தயாரித்து தேவியின் சந்நதியின் முன் வாழையிலை, மட்டை, தென்னை ஓலை ஆகியவற்றின் மீது 15 அடி நீளம், 4 அடி அகலம், ஒன்றரை அடி உயரத்தில் படையலாகப் படைக்கப்படும். சர்க்கரைப் பொங்கல் நடுவே குளம்
போல அமைத்து அங்கே இரண்டரை டின் தூய நெய்யைக் கொண்டு நிரப்புவர்.

அதன் பின்னர் கருவறையின் திரையை விலக்கினால் அலங்கரிக்கப்பட்ட அம்மனின் உருவம் நெய் குளத்தில்
பிரதிபலிக்கும். இதனை தரிசிப்பவர்களுக்கு மறுபிறவியே கிடையாது என்பது நம்பிக்கை. இதுதான் நெய்க்குள தரிசனம் திருமீயச்சூரில் உள்ள அருள்மிகு லலிதாம்பிகை சமேத ஸ்ரீ மேகநாத சுவாமி திருக்கோயில் மட்டுமே கிடைக்கப் பெறும்.நெய் குள தரிசன காலம்:-
இரவு 7.30pm மணி முதல் 9pm மணி வரை (1½ மணி நேரம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது

FB IMG 1665061695955 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.