spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்கடையனுக்கும் வழிகாட்டிய குரு: சீரடி சாய்பாபா (பாகம் 3)

கடையனுக்கும் வழிகாட்டிய குரு: சீரடி சாய்பாபா (பாகம் 3)

- Advertisement -

அகிலமெல்லாம் இறைவன் இருந்தபோதும் ஆழ்மனதில் உண்மை இல்லாதவர்களால் எங்கும் எதிலும் இறைவனைக் காண முடியாது என்பது ஆன்றோர்களின் அறிவுரை.

கண் முன் காட்சி கொடுத்துக் கொண்டிருந்த இறைவனை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டோமே என்று தவித்த சீரடி மக்கள் சிலர் தேடிக் கொண்டிருந்தனர். அப்போது அவுரங்காபாத் செல்லும் வழியில் குதிரையை தொலைத்துவிட்டு தேடிக் கொண்டிருந்த சாந்த் பாட்டீல் யாருமில்லா காட்டில் ஒரு மாமரத்தின் அடியில் ஒருவர் அமர்ந்திருப்பதைக் கண்டார்.

அவரிடம் கேட்டுப் பார்க்கலாமே என அருகில் வந்தார். பாட்டிலை பார்த்த சாய் குதிரை சுமக்கவேண்டிய சேணத் தை சுமந்து கொண்டு எதை தேடுகிறீர்கள் என கேட்டார் .நமது எண்ணத்தை எப்படி இவர் அறிந்தார் என்ற ஐயப்பாட்டுடனே சொன்னார் பாட்டில். ஐயா தொலைந்துபோன குதிரையை தான் தேடுகிறேன் என்றார்.

எல்லாம் அறிந்த பாபாவிடம் குதிரையை தாங்கள் கண்டீர்களா என்று வருத்தத்தோடு கேட்டார். எங்கும் நடப்பதை அறிந்து தானே வந்திருக்கிறார் என்பதை அறியாத பாட்டிலிடம் குதிரையை சற்று தொலைவில் உள்ள ஓடையின் அருகில் சென்று பாருங்கள் என்றார். சற்றுமுன் தானே அங்கு தேடினோம் என்று நினைத்தாலும் சிறிது நம்பிக்கையோடு ஓடைக்குச் சென்ற பாட்டில் ,அங்கு சற்று முன் இல்லாத குதிரை நெடுநேரம் நிற்பது போல் புல் மேய்ந்து கொண்டிருந்தது.

ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்த பாட்டில் நன்றி கூறுவதற்காக பக்கிரி யைக்கான திரும்பி வந்தார் .குதிரையோடு வந்த பாட்டிலை பார்த்து சொன்னார் தாங்கள் மிகவும் களைத்துப் போய் இருக்கிறீர்கள் சற்று ஓய்வெடுத்து என்னோடு ஹுக்கா பிடித்துச் செல்லலாம் என்றார் .

நடுக்காட்டில் நீரும் நெருப்பும் இல்லை எப்படி என்ற தயக்கம் இருந்தாலும் சாயி மேல் நம்பிக்கை கொண்டு அருகில் அமர்ந்தார். பிறர் மனதை அறிந்தவரான பக்கிரி எது நமக்கு அவசியம் தேவையோ அது நிச்சயம் கிடைக்கும் என்று கூறிக்கொண்டே தன் கையிலிருந்த குச்சியால் தரையைக் தட்டினார்

என்ன ஆச்சரியம் நெருப்புத் துண்டு துள்ளி வந்தது. கண் அகல விரித்துப் பார்த்தார். மீண்டும் குச்சியால் தட்ட நீர் வந்தது இப்போது இருவரும் ஹுக்கா பிடித்தனர். சாய்மேல் பக்தியும் மதிப்பும் கொண்ட பாட்டில் பேசினார் ஐயா தாங்கள் செய்த உதவியை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன் இருந்தபோதும் தாங்கள் என் மீது கருணை கொண்டு என்னோடு என் வீட்டிற்கு வந்து சிறிது காலம் தங்கி என்னை ஆசிர்வதிக்க வேண்டும் என்று அன்போடு பாட்டில் கேட்டார் .

பண்பும் அன்பும் நிறைந்த வார்த்தை களுக்கு மதிப்பளித்து அவரோடு செல்ல சம்மதித்தார். பாட்டிலோடு கிராமத்திற்குச் சென்றார் சில நாட்களில் பாட்டிலின் நெருங்கிய உறவினருக்கு திருமணம் வந்தது.

பெண்வீட்டார் ஷீரடி சேர்ந்தவர்கள், என்பதால் பாட்டிலும் உறவினர்கள் பலரும் திருமணத்திற்காக சீரடி புறப்பட்டனர். பாட்டில் ப க்கிரியும் உடன் வந்து மணமக்களை ஆசீர்வதிக்கும்படி கேட்டுக்கொண்டார். காலக் கணக்குகளை அறிந்தவராய் அவருடன் சீரடி வந்தார் .

மாலை நேரம் சீரடி அடைந்த உறவினர்கள் அங்கு இருந்த கண்டோபா கோவில் அருகில் இறங்கினர் ஒரு வண்டியில் இருந்து முன்பு சீரடியில் காணாமல் போன சாயி இறங்கினார் .அப்போது கண்டோபா கோவில் அருகில் இருந்த மகல்சாபதி சாயி என்று அன்போடு அழைத்தார் சாய் என்றால் மரியாதைக்குரியவர் என்று பொருள். இப் பெயரே நிலைத்து நின்று விட்டது.

மரியாதையும் அறிவாற்றலும் உள்ளவர் என்பதைக் குறிக்கும் பாபா என்று சொல்லும் சேர்ந்துகொண்டது சீரடி சாய்பாபா என்றானது சீரடிக்கு வந்த சாய்பாபா நிரந்தரமாக தங்குவதற்காக கண்டோபா கோவிலுக்குச் சென்றார்.

ஆனால் அங்கு பூசாரியாக இருந்த மகல்சாபதி முகமதியர் போல் இருக்கும் இவரை கோவிலில் தங்க வைத்தால் பிரச்சனைகள் வரும் என்பதால் தங்குவதற்கு அனுமதிக்க மறுத்தார். பாபாவின் அவதார ரகசியம் தெரியாத மஹல்சாபதியைப் பார்த்து புன்னகை புரிந்த சாயி மீண்டும் வேப்பமரத்தடிக்கு சென்று தங்கினார்.

மழைக்கும் வெயிலுக்கும் அங்கேயே தங்கினார். ஏதோ பந்தததால் ஈர்க்கப் பட்ட மகல்சாபதி பாபா மரத்தடியில் தங்குவதால் வருத்தமுற்று சிலருடன் சேர்ந்து மிகவும் வற்புறுத்தி பாழடைந்த மசூதியில் தங்க வைத்தனர்.

சாய்பாபாவை மகல்சாபதி சந்திக்க நினைத்தாலும் அவர் மசூதியுள் இருப்பதால் சந்திப்பதை தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தார் ஆனாலும் பாபா வரவழைத்தார் .

மசூதி வந்த மஹாபதி பாபாவின் பூர்வீகத்தை அறிந்து கொள்ள அதிக ஆர்வம் காட்டினார் ஆனால் அதற்கு இடம் கொடுக்காமல் உனக்கும் எனக்கும் பல ஜென்ம தொடர்பு இருக்கிறது அதனால்தான் நீ எங்கு இருக்கிறாய் எனக் கூறி அரவணைத்துக் கொண்டார் சாயி.

பாபாவை அடிக்கடி சந்தித்து பல விஷயங்களைப் பற்றி விவாதித்து வந்தார் பாபா சாதாரண மனிதர் அல்ல என்பதை உணர்ந்தவராய் பல இடங்களிலும் பாபாவைப் பற்றி பேசி பாபாவின் புகழை வளர்த்துக் கொண்டிருந்தார் பாபாவின் பெருமை கொஞ்சம் கொஞ்சமாக பரவியது ஷீரடி மக்கள் தினந்தோறும் பாபாவை தரிசிக்க ஆரம்பித்தனர் அவர்கள்

அவர்களில் சத்திரம் அதிகாரியான அப்பா பாட்டில் கோடி என்பவரும் அவர் மனைவி பாயியும் முக்கியமானவர்கள். அவர்கள் பாபாவை பார்க்க வந்தபோது பாபா எழுந்து நின்று வரவேற்றார். பின்னர் இவள் என் பூர்வ ஜென்மத்து சகோதரி என்றார் வாஞ்சையுடன்.

இதனால் மிகுந்த ஆனந்தம் கொண்ட அத்துடன் தனக்குள் ஒரு சங்கற்பம் செய்து கொண்டால் இனி தனது சகோதரனுக்கு உணவு தராமல் உண்ணக் கூடாது என்பதே அது அதன் படி ஒவ்வொரு நாளும் தேடிச்சென்று அன்போடு உணவு பரிமாறினால் சிலநேரம் பாபா காட்டிற்குள் இருந்த போதும் தனது சங்கல்பத்தை விடாது கடைப்பிடித்த இவ்வுதவியை மறக்காமல் பாட்டில் செல்வதற்கு உதவி செய்தார் .

இதே போன்று பாபாவின் மீது தாய் அன்பு கொண்ட கமன் பாய் என்பவள் .இவர் தனது சமூகத்தைச் சேர்ந்தவர் பசியோடு இருப்பதாக எண்ணியவளாய் தினந்தோறும் பாபாவிற்கு உணவு கொடுத்து வந்தால் அதற்காக எந்த உதவியையும் எதிர்பார்க்காமல் நெடுநாட்களுக்குப் பிறகு தனது வீட்டிற்கு வந்து உணவினை ஏற்குமாறு பிரார்த்தித்தாள்.

பாபாவும் அவரின் கோரிக்கையை ஏற்று அவள் வீட்டிற்கு சென்றால் அங்கு அவரின் மகன் சரி தொழு நோயால் அவதிப் பட்டுக் கொண்டிருந்தான். இத்தனை கஷ்டங்கள் பேர் இருந்தும் நம்மிடம் எந்த உதவியும் கேட்க கேட் காத கமெண்ட் பாயின் உயர் குணத்தால் ஈர்க்கப்பட்டார் .

அதனால் அவரே வலியச் சென்று நோய்க்கான மருந்தை பாம்பின் விஷத்தில் இருந்து செய்து கொடுத்தார். மருந்தினால் நோய் பூரணமாக குணமடைந்து இதனால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தாள். தொழுநோயை குணப்படுத்த பாபா ஊருக்குள் காலரா பரவாமல் தடுக்க செய்த செயல் அவரின் புகழை பரப்பும் பெரும் ஆச்சரியம் தருவதாக இருந்தது.

  • எழுத்து: குச்சனூர் தி.கோவிந்தராஜன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe