IND Vs SA ODI: முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி

Published:

இந்தியா தென் ஆப்பிரிக்கா முதல் ஒருநாள் போட்டி, லக்னோ, 6 அக்டோபர் 2022

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

தென் ஆப்பிரிக்க அணி (40 ஓவரில் 4 விக்கட் இழப்பிற்கு 249 ரன், டேவிட் மில்லர் ஆட்டமிழக்காமல் 75 ரன், ஹென்றி கிளாசன் ஆட்டமிழக்காமல் 74 ரன், டி காக் 48, ஷர்துல் தாகூர் 2/35) இந்திய அணியை (40 ஓவரில் 8 விக்கட் இழப்பிற்கு 240 ரன், சஞ்சு சாம்சன் 86, ஷ்ரேயாஸ் ஐயர் 50, ஷர்துல் தாகூர் 33, நிகிடி 3/52) 9 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

ஷிகர் தவான் தலைமையிலான புதிய இந்திய அணி இன்று லக்னோவில் நடந்த தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடியது.

அணி வீரர்கள் – ஷிகர் தவான், ஷுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், ஆவேஷ் கான், ரவி பிஷ்னோய். மழை காரணமாக போட்டி தாமதமாக் தொடங்கியது.

ALSO READ:  தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

இரண்டு அணிகளும் 40 ஓவர்கள் விளையாடும் எனத் தீர்மானிக்கப்பட்டது. டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீசத் தீர்மானித்தது. இந்திய பந்து வீச்சாளர்கள் நன்றாக பந்து வீசினார்கள். ஷர்துல் தாகூர் (ரன்ரேட் 4.37) மற்றும் ரவி பிஷ்னோய் (ரன்ரேட் 4.87) இருவரும் அதிகம் ரன் கொடுக்கவில்லை; விக்கட்டுகளும் எடுத்தனர்.

தொடக்க வீரர் மலான் (22 ரன்) 12ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். அணித்தலைவர் பவுமா இரண்டு ஓவர் மட்டுமே ஆடி 15ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். அவருக்குப்பின் ஆடவந்த மர்க்ரம் 16ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். 23ஆவது ஓவரில் டி காக் (48 ரன்) ஆட்டமிழந்ததும் ஜோடி சேர்ந்த கிளாசன், டேவிட் மில்லர் இருவரும் ஆட்டமிழக்காமல் இறுதிவரை ஆடி அணியின் ஸ்கோரை 249 ரன்னுக்கு எடுத்துச் சென்றனர்.

அடுத்து ஆடவந்த இந்திய அணிக்கு ஷிகர் தவன் (4 ரன்), சுப்மன் கில் (3 ரன்) இருவரும் மோசமான தொடக்கம் தந்தனர். ருதுராஜ் கெய்க்வாட் (42 பந்துகளில் 19 ரன்), இஷான் கிஷன் (37 பந்துகளில் 20 ரன்) இருவரும் மிக மெதுவாக் ஆடினார்கள்; விரைவில் ஆட்டமிழந்தார்கள்.

ALSO READ:  100 கோடி மக்களுக்கு சமூகப் பாதுகாப்புக் கவசம்: பிரதமர் மோடி பெருமிதம்!

அதன் பின்னர் ஜோடி சேர்ந்த ஷ்ரேயாஸ் ஐயர் (37 பந்துகளில் 50 ரன்), சஞ்சு சாம்சன் (ஆட்டமிழக்காமல் 63 பந்துகளில் 86 ரன்) ஷர்துல் தாகூர் (31 பந்துகளில் 33 ரன்) நன்றாக ஆடினர். இருப்பினும் மொத்தம் 240 ரன்களே இந்திய அணியால் எடுக்க முடிந்தது.

எனவே 9 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியடைந்தது. ஹென்றி கிளாசன் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

தென் ஆப்பிரிக்க அணி 1-0 என்ற கணக்கில் இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முன்னிலை வகிக்கிறாது.

Related articles

Recent articles

spot_img