IMG 20221008 WA0027 - 2026

ஆழ்வார்திருநகரியில் 14ம் நூற்றாண்டில் அவதரித்த மணவாள மாமுனிகள்..

ஆன்மிகம்
IMG 20221008 WA0027 - 2026

தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஆழ்வார்திருநகரியில் 14ம் நூற்றாண்டில் சுவாமி மணவாள மாமுனிகள் அவதரித்தார். அங்கு எழுந்தருளி இருந்த சுவாமி திருவாய்மொழிப் பிள்ளையிடம் சீடராகப் பணிந்து, சம்பிரதாய விஷயங்களை முறைப்படி கற்றார். இதே காலத்தில் வானமாமலை திருத்தலத்தில் நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் உள்ளது.இங்கு அழகிய வரதர் என்ற சுவாமி அவதரித்தார். இவரையும் சுவாமி திருவாய்மொழிப் பிள்ளையிடம் பாடம் கற்க வேண்டி அவரது தந்தையார் அழைத்து வந்தார்.

ஆனால் அழகிய வரதரை மாமுநிகளுக்கு சீடராக்கினார் சுவாமி திருவாய்மொழிப் பிள்ளை. பிற்காலத்தில் மாமுநிகளுக்கு ஆயிரக்கணக்கான சீடர்கள் உருவாக முதலடி எடுத்து வைத்தவர் என்பதால் அழகிய வரதருக்கு – பொன்னடிக்கால் ஜீயர் என்ற பெயர் நிலைத்தது. நாடு முழுவதும் வானமாமலை மடங்களை உருவாக்கி சம்பிரதாயத்தை வளர்த்தவர் இவர். ஏராளமான கைங்கர்யங்களை மேற்கொண்டார். புரட்டாசி மாதம் புனர்பூசம் நட்சத்திரத்தில் (வரும் அக். 17ல் வருகிறது) அவதரித்த பொன்னடிக்கால் ஜீயர் சுவாமியின் திருநட்சத்திர வைபவம் இன்று தொடங்குகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.