இன்று திருச்சானுர் ஸ்ரீ பத்மாவதி தாயார் அவதார தினம்..

Published:

FB IMG 1671958186691 - 2026

இன்று மார்கழி உத்திராடம் நக்ஷத்திரம்.திருச்சானுர் ஸ்ரீ பத்மாவதி தாயார் திருஅவதார திருநக்ஷத்திரம் கார்த்திகை சுக்லபக்க்ஷ பஞ்சமி உத்திராடமாகும்.

திருச்சானூரில் பத்மாவதி தாயார் அழகு மிகு அருள்கோலத்தில் காட்சி அளிக்கிறாள். மலர்களை ஏந்திய மேலிரு கரங்களுடனும், அபய, வரத முத்திரைகளுடைய கீழிரு கரங்களுடனும், அழகு வடிவுடனும், பத்மாசனத்தில் அமர்ந்தபடி தாயார் அருள்புரிகிறாள்.சுகமுனிவர் கிருஷ்ணருக்கும், பலராமருக்கும் எடுத்த கோவில் இது என்கிறது புராணம்.

வைகுண்டத்தில் நாராயணின் திருமார்பில் உறையும் மகாலட்சுமியே திருச்சானூரில் பத்மாவதி தேவியாய் அருள்கிறாள்.அகலகில்லேன் இறையுமென்று திருவேங்கடமுடையானின் திருமார்பில் தங்கி தயா தேவியாக அருள்பவள் திருமகளான அலர்மேல்மங்கை தாயார்.

யாதேவீ சர்வபூதேஷு லக்ஷ்மீ ரூபேண சம்ஸ்திதா
நமஸ்தத்யை நமஸ்தத்யை நமஸ்தத்யை நமோந்நமஹ [[

என்று அருளியபடி செல்வவளம் செழிக்கச்செய்பவள்.

“அலர்மேலு’ என்பதே சரியான வார்த்தை.
“அலர்’ என்றால், “தாமரை!’ “மேலு’ என்றால், “வீற்றிருப்பவள்!’
இதையே, “பத்மாவதி’ என்கின்றனர்.
“பத்மம்’ என்றாலும், “தாமரை!’ “வதி’ என்றால், “வசிப்பவள்!’
ஆக, தாமரையில் வீற்றிருப்பவள் என்பது இந்தச் சொல்லின் பொருள். செந்தாமரை மலரில் வீற்றிருக்கும் லட்சுமியே, பத்மாவதியாக பூலோகத்தில் அவதாரம் எடுத்தாள்.

ALSO READ:  பஞ்சாங்கம் ஆக.15 - சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img