December 6, 2025, 7:52 AM
23.8 C
Chennai

குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோவிலில் ஆராட்டு உற்சவம் துவக்கம்..

FB IMG 1677909400332 - 2025
ஆராட்டு உற்சவத்தில் பங்கேற்க யானைகளிடையே ஓட்டப் பந்தயம் நடத்தி முதலாவதாக வந்த ஒற்றை கொம்பன் கோகுல்

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோவிலில் நடைபெறும் வருடாந்திர மாசி ஆராட்டு உற்சவம் வெள்ளிக்கிழமை இரவு துவங்கியது. இந்த ஆண்டு ஆராட்டு உற்சவத்தில் பங்கேற்க யானைகளிடையே ஓட்டப் பந்தயம் நடத்தி முதலாவதாக வந்த ஒற்றை கொம்பன் என பக்தர்களால் செல்லமாக அழைக்கப்படும் கோகுல் என்ற 33 வயதான யானை தேர்வு செய்யப்பட்டது.இந்த யானை உற்சவத்தில் சுவாமி கிருஷ்ணன் விக்ரகத்தை சுமந்து பவனி வரும்.

images 2023 03 04T113621.938 - 2025

பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் உலக பிரசித்தி பெற்ற குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணன் கோவிலில் ஆண்டுதோறும் மாசிமாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறும். இத்திருவிழாவில் கேரளா மட்டுமின்றி தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநில ங்களில் இருந்தும் ஏராள மான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

இந்த ஆண்டுக்கான திருவிழா வெள்ளிக்கிழமை இரவு தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்ட னர். திருவிழாவின் முதல் நாளில் யானைகள் ஓட்டப்பந்தயம் நடைபெறும். இதற்காக தேவஸ்தானத்திற்கு சொந்தமான யானைகளில் இருந்து குலுக்கல் முறையில் 5 யானைகள் தேர்வு செய்யப்பட்டன.

இந்த யானைகள் பங்கேற்ற ஓட்டப்பந்தயம் கோவில் முன்பு தொடங்கியது. இதில் கோகுல் என்ற 33 வயதான யானை முதலிடம் பிடித்தது. யானைகள் ஓட்டத்தில் முதலிடம் பிடித்த கோகுல் யானைக்கு ஒரு தந்தம் இல்லை. ஒரு விழாவில் பங்கேற்ற போது தென்னை மரத்தில் இருந்து ஓலை விழுந்ததில் யானையின் ஒற்றை தந்தம் முறிந்தது.

images 2023 03 04T113453.425 - 2025

இதனால் பக்தர்கள் இந்த யானையை ஒற்றை கொம்பன் யானை என்றே அழைப்பார்கள்.தற்போது இந்த யானைக்கு தான் முதல் பரிசு கிடைத்துள்ளது. குருவாயூர் கோவிலில் நடைபெறும் மாசி திருவிழா வருகிற 12-ந் தேதி நிறைவு பெறுகிறது. 10 நாட்களும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்காக ரூ.2.31 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கோவில் திருவிழாவுக்கான மொத்த செலவு ரூ.3.22 கோடியாகும். உற்சவம் நடைபெறும் நாட்களில் குருவாயூர் கிருஷ்ணனுக்கு வழக்கமான பூஜைகளுடன் உற்சவபலி பூஜை உற்சவபலி தரிசனம்,ஸ்ரீபூதபலி இறுதி நிகழ்ச்சியாக சுவாமிக்கு ஆராட்டு நடைபெறும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories