To Read it in other Indian languages…

Home ஆன்மிகம் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் பக்தர்கள் தரிசனம்..

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் பக்தர்கள் தரிசனம்..

images 41 1 - Dhinasari Tamil

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் மலைக்கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய நான்கு நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று பங்குனி மாத பிரதோஷத்தை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் சதுரகிரி யில் அதிகரித்துள்ளது. அதிகாலை முதலே பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்பட்டனர்.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் வழிபாடு நடத்த 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 19-ந் தேதி(இன்று) பங்குனி மாத பிரதோஷம் மற்றும் 21-ந்தேதி அமாவாசை வழிபாட்டை முன்னிட்டு பக்தர்கள் சதுரகிரிக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

images 42 1 - Dhinasari Tamil

அதன்படி பக்தர்கள் இன்று முதல் 22-ந்தேதி வரை 4 நாட்கள் சதுரகிரி மலையேறி சென்று சாமி தரிசனம் செய்யலாம். 10 வயது உட்பட்டவர்களும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் மலையேற அனுமதி கிடையாது. மலை ஏறுவதற்கு காலை 7 மணி முதல் 2 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை.

இரவில் மலைக்கோவிலில் தங்க அனுமதி இல்லை உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை வனத்துறை அறிவித்து உள்ளது. இந்த நிலையில் சதுரகிரி மலைக்கோவிலில் இன்று பங்குனி மாத பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இதையொட்டி இன்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறிச் சென்று

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × 3 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.