விழுப்புரம் பிருஹன்நாயகி சமேத கைலாசநாதர் கோயிலில் ஆருத்ரா சேவை!

ஆன்மிகச் செய்திகள் ஆன்மிகம் லைஃப் ஸ்டைல் விழாக்கள் விசேஷங்கள்
viluppuram bruhanayaki kailasanathar - 2026

விழுப்புரம் ப்ரஹந்நாயகி சமேத கைலாசநாதர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ஆருத்ரா தரிசன சேவை நடைபெற்றது.

முன்னதாக கோயிலில் காலை 7 மணியளவில் சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமானுக்கு சிறப்பான முறையில் பல்வேறு விதமான அபிஷேகங்கள் நடைபெற்றது. இதில் பால், தயிர், நெய், தேன், பஞ்சாமிர்தம், பலவகையான பழங்கள், பன்னீர், சந்தனம், வீபூதி போன்றவைகளாலும், பின்னர் பலவிதமான புஷ்பங்களாலும் அபிஷேகங்கள் நடைபெற்றது.

தொடர்ந்து மாணிக்கவாசர் சுவாமிகள் உற்சவம் நடந்தது. இதில் மாணிக்கவாசகர் திருவுருவச் சிலை முன்பு திருவெண்பாவை பாடப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

பின்னர் சிறப்பு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சிவகாமசுந்தரி சமேத நடராஜர் மகாதீபாரதனையோடு காட்சியளித்தார்.

தொடர்ந்து வேத முழக்கங்கள் முழங்க, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் திருவெண்பாவை பாடப்பட்டது. இறுதியாக மகாதீபாரதனை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி முடித்தவுடன் – பெரிய அளவில் தூரல் விழுந்த வண்ணம் – மழை பெய்து கொண்டேயிருந்ததால் பக்தர்கள் இறைவனை தோளில் சுமந்து ஆனந்த நடனம் ஆடினார்கள். கோயிலில் பக்தர்களுக்கு களி……யும், சாந்து…..கருப்பு கலரில் உள்ள சாந்தும் பிரசாதமாக வழங்கப்பட்டது. 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.