
ஓசூர் அருகே ஜல்லிக்கட்டுக்காக வளர்த்து வந்த 3 காளை மாடுகள் உயிரிழப்பு, தீவனத்தில் விஷம் கலந்திருப்பதாக உரிமையாளர் போலீஸில் புகார் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பீர்ஜேப்பள்ளி கிராமத்தில் ரகு என்பவரின் தாத்த நாராயண கவுடு பல ஆண்டுகளாக பாரம்பரிய நாட்டு மாடுகளை வளர்த்து மஞ்சு விரட்டு, எருது விடும் விழா உள்ளிட்ட போட்டிகளின் மீது அதிக ஆர்வம் கொண்டவர்,
நாராயண கவுடுவின் பேரன் ரகு தற்போது 14 நாட்டு காளை மாடுகளை எருதுவிடும் விழாவிற்கு தயார்படுத்தி வருகிறார். இவை அலிகர் நாட்டு வகை காளை மாடு எனவும், இதில் மாகாராணி என்ற பட்ட பெயர் கொண்ட காளை பல ஊர்களில் பரிசுகளையும் பட்டங்களையும் பெற்று புகழ் பெற்ற காளை என்றும் சொல்கிறார்கள்.
இந்நிலையில் காளை மாடுகளுக்கு தவிடு கலந்த தீவனத்தை ஐந்து காளைகளுக்கு வரிசையாக வழங்கியபோது இரண்டு காளை மாடுகள் நிலை தடுமாறி உள்ளன. எச்சரிக்கையடைந்த மாட்டு உரிமையாளர்கள் மீதமிருந்த மாடுகளுக்கு தீவனம் வைக்கவில்லை..
மாடுகள் கீழே சரிந்து விழுந்து உயிருக்கு போராடிய நிலையில் கால்நடை மருத்துவர் ஒரு மணி நேரமாக அளித்த சிகிச்சை பலனளிக்காமல் மூன்று நாட்டு காளை மாடுகள் மாட்டு தொழுவத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன.
ஒரு காளைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, ஆசை ஆசையாக வளர்த்த மூன்று மஞ்சு விரட்டு மாடுகள் அடுத்தடுத்து உரிமையாளர்களின் கண் முன்பேயே உயிரிழந்ததை பார்த்து கதறி அழுதது பார்ப்போரை கண் கலங்க வைத்தது
மாட்டின் உரிமையாளர் ரகு, தமது மாடுகளுக்கு வழங்கப்பட்ட தீவனத்தில் விஷம் கலந்திருந்ததால் மாடுகள் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகித்து, உத்தனப்பள்ளி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
உயிரிழந்த 4 மாடுகளின் தற்போதைய மதிப்பு சுமார் 10 லட்சத்திற்க்கு மேல் என சொல்லப்படுகிறது. இறந்த மூன்று காளை மாடுகளையும் ஊர்ப் பொதுமக்கள் பூஜை செய்து வருகிறார்கள்,
மேலும் காளைகள் இறந்த செய்தி கேட்ட சுற்றுவட்டார பகுதி மக்கள் இறந்த காளை மாடுகளைக் காண திரண்ட வண்ணம் உள்ளனர். நாட்டு மாடுகள் உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையேயும், மாடு வளர்ப்போர் மத்தியிலேயும் சோகத்தை ஏற்ப்படுத்தி உள்ளது.



