Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்பக்கத்தில் உள்ள ப்ரயாகை | Kanchi Varadhan கனு பார்வேட்டை @பழைய சீவரம் |Sri #APNSwami...

பக்கத்தில் உள்ள ப்ரயாகை | Kanchi Varadhan கனு பார்வேட்டை @பழைய சீவரம் |Sri #APNSwami #Writes

WhatsApp Image 2018 12 30 at 9.13.30 AM 3 - Dhinasari Tamil

பக்கத்தில் உள்ள ப்ரயாகை           
by Sri #APNSwami
????????????????????????????????????????????????

  தைப் பொங்கல் திருநாளின் மறுதினம், கனு பார்வேட்டை எனும் உத்ஸவம் கோவில்களில் நடைபெறும். இதற்கு பரிவேட்டை, பார்வேட்டை என்று பல பெயர்களுண்டு. காஞ்சி வரதனும் செங்கல்பட்டிற்கு அருகேயுள்ள த்ரிவேணீ (பாலாறு, செய்யாறு, வேகவதீ) சங்கமமான பழைய சீவரம், திருமுக்கூடலுக்கு எழுந்தருளுகிறான். இந்த வைபவம் ப்ரஹ்மாண்ட புராணத்தில், விஷ்ணுசித்தர் எனும் மஹர்ஷிக்கும், மரீசி முனிவருக்கும் உரையாடலாக அமைந்துள்ளது.

  சுதர்ஸந கிரி எனும் இந்த பத்ம மலையில் (பழைய சீவரம் மலையில்), க்ருஷ்ண சர்மா எனும் யோகி ஒருவர் தவம் செய்தார். ப்ரயாகை சென்று த்ரிவேணீ (கங்கா, யமுனா, ஸரஸ்வதீ) சங்கமத்தில் நீராட முடியாத அவருக்காக, இம்மூன்று நதிகளும் இங்கே ஒன்றாக ப்ரவகித்து சங்கமித்தன.

யஸ்மாத் வேங்கடநாயக: நரஹரி: லக்ஷ்ம்யா ஸமேதௌ ச தௌ

தத்தீரே உபய பார்ச்வதச்ச திவிஜை: தேவை: மஹீபாலகை: |

ஸர்வை: தேசிகவர்ய பூசுரவரை: ஸம்ஸேவிதௌ ஸர்வதா

ஸாந்நித்யம் ச கரிஷ்யத: கலியுகே தீரே த்ரிவேண்யா: சுபே ||

  “பாலாறு, செய்யாறு, வேகவதீ நதிகளின் இந்த சங்கமம் கங்கை, யமுனை, ஸரஸ்வதீ சங்கமத்தை விட மேலானது. இதன் இருகரைகளிலும் ஸ்ரீநிவாஸன், ஸ்ரீலக்ஷ்மீநரசிம்மன் மற்றும் ஆசார்ய புருஷர்களும் வசிக்கின்றனர். இக்கலியுகத்தில், பக்கத்தில் உள்ள ப்ரயாகையாக இந்த சங்கம க்ஷேத்ரம் சிறந்து விளங்குகிறது“.

  “இதில் நீராடி, மக்கள் அனைத்து செல்வங்களையும் அடைகின்றனர். மேலும், சூரியன் மகர ராசியை அடைந்தவுடன், ஹஸ்திகிரி நாதனாகிய வரதன், இங்கு எழுந்தருளி திருப்பார்வேட்டை மஹோத்ஸவம் கண்டருளப் போகிறான் என்றும் மரீசி உரைக்கிறார்.

யஸ்மாத் ஹஸ்திகிரீச்வரோபி மகரம் யாதேச பாநௌ கிரௌ

பத்மாக்யே மஹதிம் ச்ரியம் ச ஜகதாம் குர்வந் த்ரிவேண்யா: தடே |

ஆகேரோத்ஸவம் அத்புதம் த்ரிஜகதாம் ஆநந்ததம் ஸந்ததம்

பச்யத்பி: திவி தேவதை: விஜயதே பூபாலகை: பூசுரை: ||

இதே மாஹாத்ம்யத்தில், மேற்கொண்டு விஸ்தாரமாக, ஸ்ரீபாஷ்யகாரர், ஸ்வாமி தேசிகன் முதலானோரின் அவதாரம் குறித்த செய்திகளும் நிறைந்துள்ளன. நாமும் த்ரிவேணீ சங்கமத்தில் பார்வேட்டையில் வரதனை சேவித்து பாக்யம் பெறலாம்.

விஜய் தொலைக்காட்சியின் “தபோ வனம்” நிகழ்ச்சியிலும், சங்கரா தொலைக்காட்சி “நதி மூலம்” நிகழ்ச்சியிலும், பல ப்ரமாணங்களுடன் இச்சங்கமம் குறித்து விளக்கியுள்ளோம். தொடரும் மணற்கொள்ளைகளால் வறண்டு கிடக்கும் இந்நதிகள், இனியாவது வளம் பெறுமா நம் மனம் மாறி, நாம் இதற்கு முயலுவோமா?

எதிர்பார்ப்புடன்

.பி.என்  

Sri #APNSwami
இது போன்ற கட்டுரைகளைப் படிக்க… https://apnswami.wordpress.comமேலும்… நாட்டு நடப்புகளுடன் சுவையான் ஸம்ப்ரதாய விஷயங்களை அறிந்திட https://apnswami.wordpress.com/blogpages/ மற்றவர்களுக்கும் பகிர்ந்திடுங்கள்…உங்கள் கருத்துக்களையும், சந்தேகங்களையும் பதிவு செய்யுங்கள்…

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

மக்கள் பேசிக்கிறாங்க

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

19,155FansLike
374FollowersFollow
64FollowersFollow
74FollowersFollow
2,546FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

COMPLAINT BOX | புகார் பெட்டி :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

சிவாஜி கணேசன் குடும்பத்தில் மற்றுமொரு நடிகர் உதயம்!

தமிழ், இந்தி, ஆங்கில மொழிகளில் தெருக் கூத்து நாடகங்களில் பங்கேற்றுள்ளார்.

175 நாள்.. அகண்ட சாதனை படைத்த அகண்டா!

பாலகிருஷ்ணாவின் 'அகண்டா' படம் 175 நாட்கள் ஓடியிருப்பது திரையுலகினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

AK61: விமான ஓடு தளத்தில் இருக்கும் வீடியோ..!

அஜித் குமார் மற்றும் மஞ்சுவாரியர் இருக்கும் புதிய வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது

பிரதமரின் சரியான, தொலைநோக்கு அணுகுமுறையை சிலாகித்த நடிகர் மாதவன்!

பதவிக் காலத்தை தொடங்கியபோது, ​​மைக்ரோ எகானமி மற்றும் டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்தினார்

Latest News : Read Now...