சிவகிரி அருகே தட்டாங்குளம் காளியம்மன் கோவிலில் மாசி பௌர்ணமி விழா!

ஆன்மிகச் செய்திகள் ஆன்மிகம் சற்றுமுன் நெல்லை விழாக்கள் விசேஷங்கள்
sivagiri thattangulam kaliamman - 2026
தேவிபட்டணம் அருள்மிகு தட்டாங்குளம் காளியம்மன் கோவில் மாசி பௌர்ணமி பூஜை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் காளியம்மன் காட்சி

சிவகிரி:  நெல்லை மாவட்டம் சிவகிரி அருகே தேவிபட்டணம் அருள்மிகு தட்டாங் குளம் காளியம்மன் கோவிலில் மாசி மாத பௌர்ணமி பூஜை வழிபாடு நடந்தது.

அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அன்னதானம் வழங்கப்பட்டது! இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்

நெல்லை மாவட்டத்தில் அளவிலும் உயரத்திலும் பெரிய அளவில் உள்ளதும் புராண பெருமையை கொண்டதுமாக தேவிபட்டணம் தட்டாங்குளம் காளியம்மன் கோவில் திகழ்ந்து வருகிறது! இக்கோவிலில் மாதம் தோறும் பௌர்ணமி பூஜை வழிபாட்டு குழுவினர் சார்பில் பௌணர்மி பூஜை நடத்தப்பட்டு வருகிறது

இந்நிலையில், மாசி மாத பௌர்ணமியான இன்று  இரவில் மூலவராக உள்ள காளியம்மன் மற்றும் பரிவார தெய்வங்கள் சின்ன காளியம்மன் பேச்சியம்மன் கன்னி விநாயகர் உட்பட அனைத்து தெய்வங்களுக்கும் பால் தயிர் நெய் விபூதி குங்குமம் சந்தனம் பன்னீர் இளநீர் கரும்பு சாறு எலுமிச்சை சாறு கும்பநீர் உட்பட பதினெட்டு வகையான நறுமணப் பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்து வைக்கப்பட்டது

பின்பு மாலைகள் பட்டாடைகள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டி பூஜைகள் நடைபெற்றன. பக்தர்களுக்கு விபூதி குங்குமம் பிரசாதம் வழங்கபட்டது

ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் ஏற்பாடுகளை பௌர்ணமி பூஜை வழிபாட்டு குழுவினர்கள் உபயதாரர்கள் செய்திருந்தனர்!

– ஆர். பெரியாண்டவர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.