மண்ணிவாக்கம் மண்ணீஸ்வரர் திருக்கோயிலில் சஷ்டி யாகம்!

ஆன்மிகச் செய்திகள் ஆன்மிகம் விழாக்கள் விசேஷங்கள்

Mannivakkam ManneeswararTemple 2 - 2026

தாம்பரம் – வண்டலூர் அருகில் மண்ணிவாக்கம் அருள்மிகு. மண்ணீஸ்வரர் திருக்கோவிலில் மாசி வளர்பிறை ஷஷ்டி மற்றும் கிருத்திகை கூடிய வருகிற மாசி செவ்வாய் (12.03.2019) அன்று காலை சத்ரு சம்ஹார யாகம் நடைபெற உள்ளது.

அவ்வமயம், திருப்போரூர் முருகனுக்கு வைகாசி விசாகத்தன்று சாற்றப்பட உள்ள வெள்ளி வேல், பல திருத்தலங்களிலும் அபிஷேக மற்றும் பூஜைகள் செய்யப்பெற்று இந்த தலத்திற்கு வரவுள்ளது.

யாகம் பூர்த்தியானபின், மாலை 4 மணிக்கு படப்பை வாலாஜாபாத் இடையில் ஒரகடம் கூட்ரோடு சந்திப்பிற்கு அந்த வேல் கொண்டுவரப்பட்டு அங்கிருந்து ஊர்வலமாக வல்லக்கோட்டை ஸ்ரீமுருகன் திருச்சந்நிதிக்கு எடுத்துச்செல்லப்பட்டு அபிஷேகம் பூஜைகள் நடைபெறவுள்ளது.

இதில் தேச பக்தர்கள், ஆன்மீக அன்பர்கள் அனைவரும் பெருமளவில் கலந்து கொண்டு தர்ம சக்திக்கு துணை நின்று முருகன் அருள் பெற வேண்டுகிறோம்.

 = ஸ்ரீகாந்த் /  ஸ்ரீராம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.