வெல்கம் கேப்டன்.. வரவேற்கிறார் ஹெச்.ராஜா!

சற்றுமுன் தமிழகம்

h raja - 2026

வெல்கம் கேப்டன். வாங்க கடுமையா உழைப்போம்! வெற்றி நமதே என்று வரவேற்பு  கொடுத்திருக்கிறார் ஹெச்.ராஜா.

வெல்கம் கேப்டன். 2014 தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த அனைவரும் சேர்ந்து ஆளும் அஇஅதிமுகவுடன் ஒரு மெகா கூட்டணி அமைந்துள்ளது. அன்று NDA வை விட திமுக விற்கு வெறும் 2% வாக்குகளே அதிகம் என்பது உலகறிந்த விஷயம்.எனவே திமுக + காங்4% மநகூ part 2%அவ்வளவுதான்.கடுமையாக உழைப்போம் 40 ம் நமதே… என்று தனது டிவிட்டர் பதிவில் கூறியுள்ளார் பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா.

ஞாயிறு நேற்று அதிமுக., தேமுதிக கூட்டணி உறுதியானதும் அவர் தனது டிவிட்டர் பதிவில்… இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2014நாடாளுமன்றத் தேர்தலில் விஜயகாந்த் அதிகம் பிரசாரம் செய்தார். தேமுதிக.,வின் பிரேமலதா விஜயகாந்த் மேற்கொண்ட பிரசாரத்தை பிரதமர் மோடி நேரடியாகப் பாராட்டினார் என்பது குறிப்பிடத் தக்கது.

1 thought on “வெல்கம் கேப்டன்.. வரவேற்கிறார் ஹெச்.ராஜா!”

  1. திரு ஹ. ராஜாவின் அவா வெற்றியடைய நாமும் கை கொடுப்போம்.
    JAIHIND

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.