கஷ்டங்கள் தீர ஒரு சுலபமான பரிகாரம்! பிரதோஷ நாளில் ஒரு வழிபாடு!

Published:

sankarankoil nandi pradosham - 2026

குருபகவான் அருள் பெற நந்தி வழிபாடு செய்ய வேண்டும்! கஷ்டங்கள் தீர ஒரு சுலப வழி இது.

நந்தி என்றால் ஆனந்தம் மகிழ்ச்சி தருபவர் என்று பொருள். நந்தியின் வேலை தடுப்பது ஆகும் அதாவது இவர் அனுமதி பெறாமல் ஈசன் உறையும் இடங்களுக்குள் யாராலும் செல்ல இயலாது.

நந்தி அனுமதி கிடைத்தால் தான் ஈசன் அருளைப் பெற முடியும். எனவேதான் முக்கிய வேலைகளின் போது யாராவது தடுத்தால் என்ன இவன் நந்தி மாதிரி தடுக்கிறான் என்று சொல் அனைவரும் கூறி உள்ளனர்.

பிரதோஷ காலங்களில் நந்தியை தவறாமல் வழிபடுபவர்களுக்கு அருள் கிட்டும்! நினைத்தது கைகூடும் என்பது ஐதீகம்.

காம சாஸ்திரத்தை தோற்றுவித்தவரும் நந்திகேசுவரரே என்று பல நூல்கள் கூறுகின்றனர்.

நந்தியை வழிபடுதலால் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டு. ஆகம சாஸ்திரங்களையும் சைவ சித்தாந்த தத்துவங்களையும் சிவபெருமானிடம் அறிந்து போதித்தவர் நாதிகேசுவரரே.

ALSO READ:  இருக்கன்குடி மாரியம்மன் கோவில் ஆடி மாத திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

சைவ மரபில் தலையாய சிவஞானபோதம் எனும் நூலை போதித்தவரே நந்தி பெருமான். சிவபெருமானின் எதிரில் நிற்க நந்திதேவர் ஒருவரால் மட்டும் முடியும்.

பிரதோஷ காலம் மட்டுமின்றி எக்காலங்களிலும் சிவபெருமானிடம் வைக்கும் வேண்டுதல்களை நந்திதேவரிடம் வைத்தால் போதும் அதை பரமேஸ்வரிடம் சேர்த்து விடுவார் என்பது மாறாத நம்பிக்கை .

நந்திதேவருக்கு அருகம்புல் மாலையும் சிவப்பு அரிசி நிவேதனமும் நெய் விளக்கும் வைத்து வழிபட வேண்டும்.

கஷடம் தீர, கடனுக்கு வட்டி கட்ட முடியாமை, வருமானம் நிரந்தரமில்லாத நிலை, எவ்வளவு தான் வருமானம் வந்தாலும் சேமிக்க முடியாத நிலை, தேவை இல்லாத பிரச்னைகளில் சிக்கி வழக்கமான வாழ்க்கை பாதிக்கப்படுதல்… திடீர் நோய் திடீர் அவமானம் மருத்துவச் செலவு கட்டுக்கடங்காமல் செல்லுதல் இது போன்ற பிரச்னைகளைத் தீர்க்க ஒரு சுலபமாக பரிகாரம்..

பிரதோஷ காலங்களில் அல்லது வெள்ளிக்கிழமை அன்று பசுவுக்கு அகத்திக்கீரை வழங்கினாலே இந்தப் பிரச்னைகள் படிபடியாக தீர்ந்துவிடும்!

பெரிய கோவில்களில் உள்ள பசு மடங்களில் இவ்வாறு அகத்திக் கீரையை வழங்கலாம். அல்லது வாழைப்பழம் தானமாக வழங்கலாம் .

ALSO READ:  ஜெனகை மாரியம்மன் கோயிலில் ஆடிப்பூர வளையல் அணிவித்து வழங்கல்!

சாதாரணமாக தெருக்களில் வரும் பசுக்களுக்கும் கொடுத்து வர உத்தமம்.  புண்ணியம் கூட அனைவரும் பரிகாரம் செய்து நன்மை பெறுகள்.

  • பரிகார ஜோதிடர் S. காளிராஜன்,
    தாந்த்ரீக பரிகார ஜோதிடம்,
    கீழத்தெரு – இலத்தூர் _ 627803.
    9843710327

Related articles

Recent articles

spot_img