ருஷி வாக்கியம் (13) – சனாதன தர்மம் என்றால் என்ன?

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Published:

rushi sanathanam - 2026

“ஏஷ தர்ம: சனாதன:” – இந்த வாக்கியம் நம் புராணங்களிலும் இதிகாசங்களிலும் அடிக்கடி பேசப்படும் வாக்கியம். “இது சனாதன தர்மம்” என்பது இதன் பொருள். புராதனமாக காணப்பட்டாலும் நித்ய நவீனமாக விளங்குவது சனாதனம். கால எல்லைகளுக்கு வளையாத சாசுவத தர்மம் சனாதனம். சூரியோதயம், சந்திரோதயம் போல என்றும் புதுமையாக விளங்குவது. நித்திய ஞானம் சனாதனம்.

“தாரணார்த்தர்ம மித்யாஹு:” என்பது விளக்கம். பற்றுவது தர்மம். விருக்ஷத்திற்கு வேர் பற்றுதல். வேரினால் விருட்சம் நிற்கிறது, வாழ்கிறது, வளர்கிறது. அதேபோல் வாழ்க்கை என்னும் விருட்சத்திற்கு வேர் தர்மம். மனித வாழ்வு உய்வடைவதற்காக, நிறைநிலை பெறுவதற்காக தர்மத்தை போதித்த நூல் வேதம்.

எனவேதான் “வேதோகில தர்ம மூலம்” என்று சகல சாஸ்திரங்களும் வேதத்தை தலையில் தாங்குகின்றன. கட்டாயம் அனுசரிக்க வேண்டிய சொல்லை “வேதவாக்கு” என்று கூறும் வழக்கம் உள்ளது.

“பிரத்யக்ஷேணானுமித்யேவ யஸ்தூபாயம் சபுத்யதே I
யேனம் வின்தன்தி வேதேன தஸ்மாத் வேதஸ்ய வேததா II”

ALSO READ:  உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

மகரிஷிகளின் தவத்தில் உதித்த எல்லையற்ற ஞான குவியல் வேதம். வேத தர்மத்தை வாழ்க்கை நடைமுறைக்கு எடுத்துவந்து அனைத்து மக்களும் கடைபிடிக்கும்படியாக போதித்தவை ஸ்மிருதிகள், புராணங்கள், இதிகாசங்கள்.

பௌதீகவாதமும், பிரத்யக்ஷவாதமும் சாஸ்வத சத்தியத்தை நிரூபிக்க இயலாதவை. புலன்களுக்கு அப்பாற்பட்ட பார்வைக்கு பரமார்த்தம் தன்னைத்தானே பிரத்யக்ஷமாக காட்டியருளும். அந்த பரமார்த்த சாஸ்திரமே வேத விஞ்ஞானம். இது தவத்தால் சித்தியான, இந்திரியங்களுக்கு அதீதமான சக்தியால் கேட்கப்பட்ட திவ்ய சப்தம். ஆதலால் ஸ்ருதி என்றழைக்கப்படுகிறது.

வேதங்கள் கூறும் தர்மங்களை தேச காலத்தை அனுசரித்து எடுத்துரைத்தவையே ஸ்மிருதிகள். ஸ்மிருதிகள் அந்தந்த காலங்களில் ருஷிகள் ஏற்படுத்தியவை. இவற்றையே தர்ம சாஸ்திரம் என்கிறோம். அதன்பின் இதிகாசங்களும், அஷ்டாதச (18) புராணங்களும்.

“இதிஹாசம்” என்பதற்கு “இவ்விதம் ஹா! நிச்சயமாக நடந்தது!” என்று பொருள். நடந்தது நடந்தபடியே இதிகாசத்தில் கூறியுள்ளார்கள் என்பது தெளிவாகிறது. இதிகாசங்கள் முக்கியமாக ராமாயணமும் மகாபாரதமும். இவற்றுள் வால்மீகி மகரிஷி எழுதிய இராமாயணம் காவிய சம்பிரதாயத்தை அனுசரித்து வந்த இதிகாசம். மகாபாரதம் ஒரு புராண, ஸ்மிருதி சம்பிரதாயத்துடன் காவிய குணங்களையும் அணைத்து கொண்ட மகா இதிகாசம். சனாதன தர்மம் இந்த நூல்களில் விஸ்தாரமாக விளக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

சனாதன தர்மம் என்பதற்கு முக்கிய ஆதாரங்கள் சுருதி, ஸ்மிருதி, புராணங்கள், இதிகாசங்கள்.

“ஸ்ருதி ஸ்ம்ருதி புராணானாம் ஆலயம் கருணாலயம்” என்று கூறி நாம் ஆச்சார்ய குருவை வணங்குகிறோம். சுருதி, ஸ்ம்ருதி, புராணங்கள், இதிகாசங்கள் இவற்றை போதிப்பவரே ஆச்சாரியர் என்பது இதன் கருத்து.

இதிகாச புராணங்கள் மூலம் வேதம் பரவலாக அறியப்படுகிறது. இதிகாச புராண ஞானம் இல்லாதவர்கள் வேதத்திற்கு அர்த்தம் கூறினால் வேதமாதா, தன்னைச் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்று வருந்துவாள்.

வேதங்களோடு கூட தன்னலமற்ற மகான்கள் நடந்து காட்டிய தர்மத்தோடு கூடிய வாழ்க்கையும் சனாதன தர்மத்திற்கு ஆதாரங்கள் ஆகின்றன.

“மஹாத்மா ஏவ கத: ஸபந்தா” – “மகாத்மாக்கள் நடந்ததே நம் வழி!” விஸ்தாரமான தர்மத்தை வாழ்வில் கடைப்பிடித்து காட்டியவர்கள் மகனீயர்கள். நம் நாட்டு தர்ம வாழ்க்கை ஒரு புறம் வேத புராண இதிகாச நூல்கள் மூலமாகவும் மறுபுறம் மகாத்மாக்களின் ஆதர்ச மயமான வாழ்க்கை மூலமாகவும் தெளிவாக நம்மை வழிநடத்துகின்றன.

தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,

Related articles

Recent articles

spot_img