மதுராந்தகம் அருகே ஞானகிரிக் குன்றில் ரங்கநாதர்!

ஆன்மிகச் செய்திகள் ஆன்மிகம் ஆலயங்கள்

sriranganathar njanagiri mountain - 2026

சென்னை மதுரை தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு  கடந்து மதுராந்தகம் அருகில் உள்ளது ஞானகிரி எனும் பெயருள்ள அழகிய குன்று. இங்கே அருள்பாலிக்கிறார் ஸ்ரீ ரங்கநாதப் பெருமான்.

ஞானகிரிக் குன்றின் மீது மிகவும் பழைமையான ஆலயத்தில் கோயில் கொண்டுள்ளார் இந்த ரங்கநாதர்.

1994ஆம் ஆண்டின் போது மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் உற்ஸவ மூர்த்தி பரிவேட்டை நிகழ்ச்சிக்கு இந்தக் குன்றின் அருகே வந்தபோது, இங்குள்ள ஹனுமான் கோயிலை எடுத்துக் கட்டினர் பக்தர்கள்.

பின்னர் அருகே இருந்த இந்த ரங்கநாதர் கோயிலும் பக்தர்களின் கண்களில் படவே இந்தக் கோயிலையும் புனரமைத்து எடுத்துக் கட்டினர். இப்போது இந்தக் கோயில் புதுப் பொலிவு பெற்று சிறப்பாக பூஜைகளும் நடந்து வருகின்றன.

வார நாட்களில் காலை 7 மணி முதல் 10 மணி வரையும் வார இறுதி நாட்களில் 7 மணி முதல் 12 மணி வரையும் கோயில் சந்நிதி திறந்திருக்கும்.

மதுராந்தகத்தில் இருந்து சுமார் ஒன்றரை கி.மீ. தொலைவில் உள்ள கல்லார் பாலத்தை ஒட்டி இந்தக் கோயிலுக்குச் செல்லலாம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.