“‘டின்னெரும் ஆஹூதிகளும், அவிசுகளும்”
(‘டோஸ்ட் ப்ரபோஸ்’–விளக்கம்)
மஹா பெரியவாளின் அருள்வாக்கு
இந்தக் காலத்தில் ‘டின்னெர்’ நடத்துகிறார்கள். ‘டோஸ்ட் ப்ரபோஸ்’ பண்ணுகிறார்கள். ‘உன்னுடைய சுகத்துக்காக நான் சாப்பிடுகிறேன்’ என்று சொல்லிக் கொண்டு ஒருவன் சாப்பிடுகிறான். ‘சாப்பிடுகிறவன் இவன். இவனுக்குத்தானே புஷ்டி தரும்? இவன் இன்னொருவருடைய சுகத்துக்காக சாப்பிடுவதாகச் சொல்லிவிட்டால், அந்த இன்னொருவனுக்கு எப்படி புஷ்டி கிடைக்கும்?’ என்று கேட்கலாமா?
இதெல்லாம் ஒரு வகை மனோபாவம். இந்த மனோபாவமே ஒருவனுக்கு புஷ்டி கொடுக்கிறது. இப்படியே யாகங்களில் நாம் அக்கினியில் போடுகிற ஆஹூதிகள், அவிசுகள் யாவும் தேவதைக்களுக்கு சக்தி கொடுக்கின்றன. இவ்வாறு நாம் பாவித்து யக்ஞம் செய்தால் தேவர்களும் அப்படியே பாவித்து நமக்கு அநுக்கிரகம் செய்வார்கள்.



