ஸ்ரீ தோடகாஷ்டகம்-ஸ்ரீசங்கர பகவத்பாத ஸ்தோத்திரம் 
தோடகாச்சார்யாள், அவருக்கு ஆநந்தகிரின்னு பேரு. காசியில் ஆசார்யாளோட ஆறாயிரம் சிஷ்யர்கள் இருந்தா. அவர் எல்லாருக்கும் பாடம் எடுப்பார். இந்த தோடகர், ஆசார்யாளுக்கு கைங்கர்யம் பண்றதுல ரொம்ப உத்ஸாகத்தோட இருந்தார். அவரோட துணியை தோய்ச்சு போடறது, அவருக்கு என்ன வேணும்னு பார்த்து பார்த்து பண்ணுவாராம். படிப்பு போறாது. ஆனா ஆசார்யாளுக்கு இவர் கிட்ட தனிப் ப்ரியம். ஒரு நாள், த்யான ஸ்லோகங்கள் சொல்லிட்டு இவர் பாடத்துக்கு வரணும்னு காத்துண்டு இருந்தாராம்., அப்போ மத்த சிஷ்யா எல்லாம் “அவனுக்கென்ன வந்தா புரியவா போறது? அசடு, மக்கு” அப்படீன்னு சொன்னாளாம். அப்போ ஆசார்யாளுக்கு, “நம்ம கிட்ட வந்து சிஷ்யாளா சேர்ந்தவாளுக்கு, இவன் மக்கு நாம உசத்தி அப்படீன்னு எண்ணம் இருக்கக் கூடாது. இதை மாத்தணும்” னு நினைச்சாரம். அதே நேரத்துல அந்த தோடகர் (ஆனந்தகிரி) மேலேயும் கருணை ஏற்பட்டது. அதனால இங்க இருந்தே அவனுக்கு ஞானத்தை அனுக்கிரஹம் பண்ணிடுறார். ஞானம் பிறக்கும், உண்மை விளங்கும், குரு அனுக்கிரஹம் இருந்தா ஒரு க்ஷணத்துல ஞானம் வந்துடும்ங்கறதுக்கு, ஒரு உதாரணம். அந்த ஆனந்தகிரி பேரானந்தத்துல திளைச்சிண்டு இருக்கார். அவர் அங்கே இருந்து கையைத் தட்டிண்டு, ஒரு அழகான தோடக வ்ருத்தம் ன்னு ஒரு வ்ருத்ததுல ஆச்சார்யாள் மேல பாடிண்டே வரார்.
விதிதாகில சாஸ்த்ர ஸுதா ஜலதே
மஹிதோப நிஷத் கதிதார்த நிதே |
ஹ்ருதயே கலயே விமலம் சரணம்
பவ சங்கர தேசிக மே சரணம் ||
அப்படீன்னு ஆரம்பிச்சு எட்டு ஸ்லோகங்கள்
இந்த எட்டும் பாடிட்டு, கடைசி ஸ்லோகம். ‘விதிதா ந மயா விஷதைக கலா’ எங்கு ஒரு படிப்பும் தெளிவா தெரியாது ‘ந ச கிஞ்சன காஞ்சனமஸ்தி குரு’. என்கிட்ட ஒரு ரூபா கூட இல்லை, என் கிட்ட ஒரு விதமான செல்வமும் இல்லை. “த்ருதமேவ விதேஹி க்ருபாம் ஸஹஜாம்” ஹே குரோ! உங்களோட கூட பிறந்ததான, இயல்பான கருணையை ஏன் மேல காண்பியுங்கோ. ‘பவ சங்கர தேசிகமே சரணம்’ சங்கர தேசிகர் -னா சங்கர ஆச்சார்யாள். ஆசார்யாளே உங்களுடைய பாதங்களில் நான் சரணாகதி பண்றேன்” அப்படீன்னு வந்து பாதங்கள்-ல விழறார்.
எந்த உபநிஷத் பாஷ்யத்தை ஆச்சார்யாள் சொல்லி கொடுத்துண்டு இருக்காரோ, அந்த ‘மஹிதோபநிஷத் கதிதார்த நிதே’ அந்த உபநிஷத் அர்த்தமே இந்த பெரியவா தானே அப்படீங்கறார் அவர். எந்த உபநிஷத் பாடம் எடுக்கறாரோ அதன் பொருளே இவர்தானே. அப்படீன்னு சொல்லி உயர்ந்த பக்தியும், ஞானமுமா வந்து நமஸ்காரம் பண்றார். அந்த அளவுக்கு தெளிவு. ‘பவ ஏவ பவான் இதி’ நீங்கள் பரமேஸ்வரன் தான் என்று நான் தெரிஞ்சுண்டேன். அவருக்கு ஆனந்தம் தாங்கலை. ‘பவ எவ பவானிதி மே நிதராம் ஸமஜாயத சேதஸி கௌதுகிதா’ என் உள்ளம் சந்தோஷத்துல பொங்கறது, அப்படீன்னு ஆனந்தமா பாடிண்டு வந்து நமஸ்காரம் பண்ணுகிறார். அப்ப அவரோட பெருமையை எல்லாரும் புரிஞ்சிக்கிறா. தோடக வருத்தத்துல அவர் இந்த ஸ்லோகங்களை பண்ணினதால, அவரோட இயற்பெயர் மறைஞ்சு, அவருக்கு தோடகாசார்யர்னே பேர் அமைஞ்டுசுடுத்து.
இந்த தோடகாஷ்டகத்தை மஹா பெரியவா கிட்ட யாரவது சொன்னா, பெரியவா அசையாம சிலை போல நிப்பா. அந்த 8 ஸ்லோகங்களையும் முழுக்க சொல்லி நமஸ்காரம் பண்ற வரைக்கும், சின்ன குழந்தையையாக இருந்தாலும் சரி, பண்டிதராக இருந்தாலும் சரி, இந்த தோடகாஷ்டகத்தை சொன்னா பெரியவாளை நம் முன்னே நிறுத்திடலாம். எப்படி இராமாயணத்தை படிச்சா, அங்க ஆஞ்சநேய ஸ்வாமி கேட்டுண்டு இருக்கற மாதிரி, எங்கே இந்த தோடகாஷ்டகத்தை நாம சொன்னாலும் அங்க மஹா பெரியவா இருக்கான்னு அர்த்தம்.
- விதிதாகில சாஸ்த்ர ஸுதா ஜலதே
மஹிதோப நிஷத் கதிதார்த்த நிதே!
ஹ்ருதயே கலயே விமலம் சரணம்
பவ சங்கர தேசிக மே சரணம் (1)
- கருணா வருணாலய பாலய மாம்
பவஸாகரதுக்க விதூன ஹ்ருதம் I
ரசயாகிலதர்சன தத்வவிதம்
பவ சங்கர தேசிக மே சரணம் (2)
- பவதா ஜனதா ஸ¨ஹிதா பவிதா
நிஜபோத விசாரண சாருமதே I
கலேயேச்வர ஜீவ விவேக விதம்
பவ சங்கர தேசிக மே சரணம் (3)
- பவ ஏவ பவானிதி மே நிதராம்
ஸமஜாயத சேதஸி கௌதுகிதா I
மம வாரய மோஹமஹாஜல திம்
பவ சங்கர தேசிக மே சரணம் (4)
- ஸுக்ருதே அதிக்ருதே பஹ§தா பவத:
பவிதா ஸமதர்சன லாலஸதா I
அதி தீனமிமம் பரிபாலய மாம்
பவ சங்கர தேசிக மே சரணம் (5)
- ஜகதீ மவிதும் கலிதாக்ருதய:
விசரந்தி மஹா மஹ;ஸச்சலத: I
அஹிமாம் சுரிவாத்ர விபாஸ புர:
பவ சங்கர தேசிக மே சரணம் (6)
- குருபுங்கவ புங்கவகேத ந தே
ஸமதா மயதாம் நஹி கோபி ஸுதி: I
சரணாகதவத்ஸல தத்வ நிதே
பவ சங்கர தேசிக மே சரணம் (7)
- விதிதா ந மயா விசதைக கலா
நச கிஞ்சன காஞ்சனமஸ்தி குரோமி
த்ரு தமேவ விதேஹி க்ருபாம் ஸஹஜாம்
பவ சங்கர தேசிக மே சரணம் (8)



