“பக்தவத்சலன் யார்? காவிக் கதரா? வெள்ளைக் கதரா?”

ஆன்மிகம் மகா பெரியவர் மகிமை

“பக்தவத்சலன் யார்? காவிக் கதரா? வெள்ளைக் கதரா?”

(தனுஷ்கோடி கடலுக்குள் மூழ்கினாலும் பெரியவா உத்தரவால்,அங்குள்ள மக்களும்,சில உடமைகளும் காப்பாற்பட்ட நிகழ்ச்சி)
64803834 2348961881828728 432128200227684352 n - 2026
(2012 பதிவு)

1964 ல் அப்போதைய முதலமைச்சர் திரு பக்தவத்சலம் பெரியவாளை தர்சனம் பண்ண வந்தார். காரைக்குடியில் முகாம்.

“ராமேஸ்வரத்துக்கு பக்கத்ல தனுஷ்கோடி…ன்னு ஒரு க்ஷேத்ரம் இருக்கு. கேள்விப்பட்டிருக்கியோ?”

“ஆமாம் பெரியவா”

“நீ……ஒடனே உத்தரவு போட்டு, அந்தூர்ல இருக்கற ஜனங்களையெல்லாம் சாமான் செட்டோட, வீடுகளை காலி பண்ணிண்டு அந்த ஊரைவிட்டுட்டு, ராமேஸ்வரத்துக்கோ இல்லே வேற எங்கியாவது வெளியூருக்கு போகச்சொல்லு! ஒன்னோட ராஜாங்க சாமான்களை எல்லாம் வேற எங்கியாவது தூரமா கொண்டு போய் பத்ரமா வெக்கச் சொல்லு! ஒடனே பண்ணு!”

“என் இப்படி ஒரு அவசர உத்தரவு?” பக்தவத்சலம் மனஸில் கூட இந்தமாதிரி ஒரு கேள்வி எழவில்லை. அப்படி ஒரு பிடிப்பு! பக்தி!

உடனுக்கு உடனே பெரியவா போட்ட உத்தரவு நிறைவேற்றப்பட்டது. பெரியவா சொன்னால் காரணம் இல்லாமல் இருக்குமா?

இருந்தது! அசுரவேகத்தில் புயல், ஆக்ரோஷமாக வீசியது! பிரளயகாலம் போல் கொட்டோ கொட்டென்று கொட்டித் தீர்த்தது வானம்! பரந்துவிரிந்த நீர் பரப்பு போதாதென்று நிலத்தையும் தன் கொந்தளித்த அலைகளால் அபகரித்துக் கொண்டான் சமுத்ர ராஜன்! தனுஷ்கோடி கடலுக்குள் மூழ்கியது! இன்று புதையுண்டு, அங்கங்கே சிதைந்து சரித்திர சின்னமாக விளங்குகிறது தனுஷ்கோடி! பாலத்தின் மீது போய்க்கொண்டிருந்த ரயில் பெட்டிகள் பேரலைகளில் சிக்கி இழுத்துக் கொண்டு போகப்பட்டன!

இவ்வளவு அலங்கோலமும், பெரியவா தனுஷ்கோடியை காலி பண்ணச்சொன்ன ஏழெட்டு நாட்களிலேயே!

பக்தவத்சலன் யார்? காவிக் கதரா? வெள்ளைக் கதரா?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.