“காஞ்சி யாத்திரை போன மாப்பிள்ளை”

“காஞ்சி யாத்திரை போன மாப்பிள்ளை”

“விவாஹ மந்திரம் ரொம்ப முக்கியம். சகல சௌபாக்கியமும் கிடைக்கணும்னு பிரார்த்தனை பண்றது” ‘வேத மந்திரம்-“பெரியவா உபதேசம்”.

சொன்னவர்; ஸ்ரீமடம் பாலு
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மாacd5055f743de05f493cdb3eaca18fce - 2026
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

காலை எட்டு மணிக்குள் திருமாங்கல்ய தாரணம் நடந்துவிட்டது. ஒன்பதரை மணிக்கு சேஷ ஹோமம் பத்து மணிக்கு சாப்பாடு.

மாப்பிள்ளைக்கு திடீரென்று பெரியவாளிடம் பக்தி அலைமோதியது. பஞ்சக்கச்சமும் கூறைப்- புடைவையுமாக, நண்பகலில் பெரியவாள் முன் ஆஜர்!

மணமகனுக்கு எல்லையில்லாத மகிழ்ச்சி. வேறு எந்த தம்பதிகள், காலையில் கையைப் பிடித்து, மூன்று மணி நேரத்திற்குள் பெரியவாள் தரிசனத்துக்கு வந்திருக்கிறார்கள்?.

பெரியவாள், எல்லோரிடமும் சொல்லப் போகிறார்கள் பாருங்கோ….”இந்தப் பையனுக்கு என்ன பக்தி… கல்யாணம் ஆன மறு லக்னத்திலேயே  தரிசனத்துக்கு வந்து விட்டானே! காசி யாத்திரையை நிறுத்திவிட்டு காஞ்சி யாத்திரை வந்திருக்கான்” என்று பாராட்டப் போகிறார்கள்.

அரை மணி நேரம் நின்றான், கால் கடுத்தது.

ALSO READ:  பஞ்சாங்கம் ஜூன் 22 - திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

பெரியவாள் வேறு யார் யாருக்கோ பிரசாதம் கொடுத்தார்கள்-இவரைத் தவிர.

மனம் தவிக்க ஆரம்பித்தது.

மூன்று மணிக்கு சென்னையில் இருக்க வேண்டும். இரவு ஏழு மணி முதல் வரவேற்பு. அதற்குள் மணப்பெண்ணுக்கு ஒரு முக்கியமான விஸிட் இருந்தது.

ஒரு சிஷ்யனைக் கண் அசைவினால்  அழைத்தார்கள் பெரியவாள்.

“இவாளை கொல்லா சத்திரத்துக்கு அழைச்சிண்டு போய் தம்பதிகளா உட்கார வச்சு,விவாஹ மந்திரம் முழுக்கச் சொல்லச் சொல்லு. மடத்து சாஸ்திரிகளை அழைச்சிண்டு போ…”

இளந்தம்பதிகள் கொல்லா சத்திரம் போய்விட்டு இரண்டு மணி நேரம் கழித்து தரிசனத்துக்கு வந்தார்கள்.பெரியவாள் பிரசாதம் கொடுத்துக் கொண்டே கூறினார்கள்.

“விவாஹ மந்திரம் ரொம்ப முக்கியம். சகல சௌபாக்கியமும் கிடைக்கணும்னு  பிரார்த்தனை பண்றது” ‘வேத மந்திரம்…” பிரசாதம் பெற்றுக் கொண்டு மணமக்கள் சென்னை வந்து சேர்ந்தபோது, மணி ஏழு.

நேரே வரவேற்பு மேடையில் கவர்னர் நாற்காலியில் அமர்ந்து கொண்டார்கள். உடை மாற்றிக்கொள்ளக்கூட நேரமில்லை.

பத்து நிமிடத்தில் அவன் அலுவலக மேலாளர்,மற்ற்ப் பணியாளர்கள் புடைசூழ வந்தார். கை குலுக்கினார்.ஓர் உரையாடலைக் கொடுத்தார்.

ALSO READ:  ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

“சத்தியமூர்த்தி அதைத் திறந்து பாருடா” என்றார் ஒரு மூத்த எழுத்தர்.’மொத்த மொய்த் தொகையின் காசோலையாக இருக்கும்’ என்று அலட்சியமாகப் பிரித்தான்.

கண்கள் விரிந்தன புரமோஷன் ஆர்டர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories