கருணைக் காஞ்சி கனகதாரை – பாகம் 2

கண்டகீக்ருத்ய பிரக்ருதி குடிலம் கல்மஷம் ப்ராதிபஸ்ரீ- கண்டீரத்வம் நிஜபதஜூஷாம் சூன்யதந்த்ரம் திசந்தீ| துண்டீராக்யே மஹதி விஷயே ஸ்வர்ணவ்ருஷ்டி-ப்ரதாத்ரீ சண்டீ தேவீ கலயதி ரதிம் சந்த்ரசூடால சூடே|| (தனது திருவடியை அண்டிய மக்களின் இயற்கையிலேயே வக்கிரமான பாபப் போக்கை கண்டனம் செய்து அறிவுச் செல்வத்தின்  நிறைவைச் சோம்பலின்றி வழங்கிக் கொண்டு “துண்டீரம்” என்னும் தொண்டை மண்டலமான மகிமை வாய்ந்த நாட்டில் பொன்மழை பொழியும் சண்டிகா பரமேச்வரி சந்த்ர மௌலீச்வரனிடம் ப்ரேமை புரிகிறாள்.) அரசியலில் தொண்டை மண்டலத்துக்கு மட்டுமே காஞ்சி தலைநகராயிருந்தது. ஆன்மீகத்திலோ அந்தக் காஞ்சியை உலகத்திற்கே தலைநகராக ஸ்ரீ சங்கர ஜகத்குரு வைத்து, தாமே அருள் அரசு பீடத்தின் முதல் அதிபராக இருந்து ப்ராதீபஸ்ரீ என்ற ஞானச் செல்வத்தை தாரையாகப் பொழிந்தார். அவரது வழி நடந்தால் தர்மம் – அர்த்தம் – காமம் – மோக்ஷம் ஆகிய நான்குமே பொன் முழுக்குகளாகி நம் மீது பொழியும் என நம் ஸ்ரீ சரணர்கள் மேலே கண்ட கனகாபிஷேக விளக்கத்திற்கு பின் சென்னையில் நடைபெற்ற கனகாபிஷேகத்தில் விஸ்தாரமாக விளக்கி கூறினார்கள். இந்த மல்டி-பர்ப்பஸ் கனகதாரையானது தமது நாளில் நடப்பது மாத்திரமன்றிப் பின்னாட்களிலும் சாச்வதமாக நடைபெற வேண்டுமென்றே ஓர் ஆசார்ய தாரை குரு–ஷிஷ்ய பரம்பரையாக அங்கிருந்து பெருக ஸ்ரீ மடம் அமைத்தார். அகண்ட ஆத்ம சாம்ராஜ்யத்தை அகண்ட பாரதத்திலும் அப்பாலுங்கூட அனைவருக்கும் காட்டிக் கொடுக்கும் ஞான அரசானபடியால் அதற்கு ஓர் அதிபரும், ஒரு தலைநகரும், மாத்திரமிருந்தால் போதாது என்று இன்னும் பல திருமடங்களையும் அமைத்து அங்கெல்லாமும் ஆசார்ய தாரை பெருக வழிகோலினார் அதிசய மஹிமை கொண்ட ஆதி சங்கரர் பகவான். ஏழை மாதுக்கு செல்வத் திருமகளான லக்குமியின் அருளை மூலமாகக் கொண்டு திரவிய கனகத்தைப் பொழிந்து காலடியில் தொடங்கிய அவரது கருணை மாட்சி சகல மாந்தருக்கும் ஞானத் திருமாதாவான காமாக்ஷி காமகோடியை மூலமாக கொண்டு காஞ்சியில் சகல புருஷார்த்த கனகத்தைப் பொழிந்ததில் நிறைவுற்றது. அவரது ஆசியைப் பெற்ற ஆசார்யர்களாலும், அவரது அம்சமாக வந்த ஆசார்யர்களாலும், அவரது ஸாக்ஷாத் மறு அவதாரமாகவே வந்த ஆசார்யர்களாலும், அந்தக் காஞ்சி காமகோடி ஞான தாரை தொடர்ந்து ஞாலத்திற்கு உள்ளொளி தரும் கனகதாரையை வர்ஷித்து வருகிறது. அதுதான் கருணைக் காஞ்சி கனகதாரை.! சுக்லாம் பரதரம்! “ஸ்ரீ கணபதி ஆவாஹனத்தில் சொல்லும் வேத மந்திரத்தைப் பெரியவாள் குழந்தையாய் இருந்தபோது கலவை சின்னப் பெரியவாள் சொல்லிக்கேட்டு ஒப்பித்ததுண்டா?” ஸ்ரீ மஹா பெரியவாளின் வாழ்க்கை வரலாறு தொடர்பாக அடியேன் அவரிடம் கேட்ட கணக்கிலடங்காக் கேள்விகளில் இதுவும் ஒன்று. “கேட்ட” என்றால் வாய் வார்த்தையில் கேட்ட என்று மாத்திரம் பொருளல்ல. அப்படிக் கேட்டது கொஞ்சந்தான். எவ்வளவுதான் உயிருக்கு உயிரான அத்யந்தப் பெரியவாள், நம்பவொண்ணாத நெருக்கத்துடன் பழக அனுமதித்த சௌலப்ய மூர்த்தி என்றாலும், அநேக சந்தர்ப்பங்களில் ஏதோ ஒரு கூச்சம், சில சமயம் பயமேகூட வாய்மொழியாகக் கேட்கவிடாமல் பூட்டு போட்டு விடும். அப்போது மனத்தில் நிமிண்டும் விஷயங்களைத் திறந்துவிட மறுசாவியாக எழுத்தே உதவி புரியும். கேள்விகளை எழுதி வைத்து அவரிடம் நான் ஸமர்ப்பணம் செய்ததே அதிகமிருக்கும். ஆனால் பதிலை வெளியிட அவருடைய மனப்பூட்டுக்குச் சாவி, மறு சாவி எல்லாம் அவரிடமே-அம்பாளிடமே? (இருவரும் வேறா?) – இருந்தது. ஆகாயமாகத் தம்மைத் திறந்து போட்டுக் கொண்டிருந்த அந்தப் பெரியவாளே இங்கு மட்டும் அவரது தெய்வீக உயர்வை வெளிப்படுத்தும் விஷயமெனிலோ, மானுடமாகவே கூட மிக்க உயர்நிலையைக் காட்டும் ஒன்று எனிலோ சாவிப் பிரயோகம் யோஜித்தே செய்வார். “பெரும்பாலும்” என்று சொல்லக்கூடிய அளவுக்குச் சாவியைப் பிரயோகிக்காமலே இருந்து விடுவார்.! இரட்டைப் பூட்டும் பூட்டுவார்! இவரைவிடத் தம்மைப் பூட்டிப் பூட்டி வைத்துக் கொண்டிருப்பவர் எவருமில்லை எனுமாறு சோதிப்பார்! இந்த விசித்திரத்தில் பளிச்சிட்ட இன்னொரு விசித்திரம் என்னவென்றால், அவரை சராசரி மனிதர் போலவே காட்டும் விஷயங்களைத் தாராளமாக வெளியிட்டது மட்டுமல்ல; சராசரிக்கும் கீழே எனும் மாதிரியான அநேக விஷயங்களை நான் கேட்காமலே சொல்லி- சொல்லி? – என்னை சோதித்தாரோ, அவரையே சோதித்தாரோ? எனக்கே தெரியவில்லை! ஆனால் இப்படியும் பல சொன்னார் என்பது உண்மை. நர சரீரம் எடுத்துவிட்டால் அவதார புருஷர்களுங்கூட அவர்களுடைய ஆதர்ச நிலையில் இருந்து பார்க்கும் போது உன்னத மானுட நெறியைச் சில சமயங்களில் அப்பழுக்கின்றி ஆற்றமுடியாமல் ஆகிறது என்றே புராண இதிஹாசங்களை மனக்கரவின்றி பார்க்கும் போது தெரிகிறது. அவ்வாறு நேர்ந்த சிலவற்றைத்தான் சராசரி நிலைக்கும் தாழ்ந்துவிட்டாற்போல் அவர் சொல்வார். மஹாபெரியவாளின் ஏனைய மஹா பெருமைகள்- ஞானப் பெருமை, கருணைப் பெருமை, புத்திப் பெருமை, பொறுமைப் பெருமை, இத்யாதி – இருக்கட்டும், தம்மைப் போல் ஸ்வாரஸ்யமான ஒரு வியக்தி இருக்க முடியாது என்ற பெருமையும் படைத்தவர் அவர். எதிலும் அவரது அணுகுமுறை அலாதியாயிருந்ததால், அவர் சொன்ன ஒவ்வொன்றும், செய்த ஒவ்வொன்றும் புதியதொரு சுவையைப் பெருக்கி ஒரு நூதன இன்பமூட்டியது. ஆகையால் “என்ன இன்டரஸ்டிங் பெர்சனாலிட்டியப்பா இவர்?” என்று வியக்கும் வண்ணம் ரஸ பரிதமாக – பல்சுவைகளைத் திரட்டி வைத்த பாண்டமாக- அவர் இருந்தார். அந்த ரஸங்களில் ஒன்றாகவே தம்மையே குறைத்துச் சொல்லி நொந்துகொள்ளும் இந்த அம்ஸத்தையும் அம்பிகை வைத்திருந்தாள் போலும்! ஸ்ரீ ரா.கணபதி அண்ணா அவர்களின் தொகுப்பில் இருந்து பிரசுரிக்கபட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories