மந்த்ர புஷ்பம்
நம் வீடுகளில் எல்லா சுப கார்யங்கள் நடக்கும்போதும், ஆலயங்களிலும், கேட்கும் ஒரு அருமையான சின்ன சில நிமிஷ ஸமஸ்க்ரித மந்திரம் இது. செவிக்கினிமையான ”மந்த்ர புஷ்பம்”.
வைதிகர்கள் லௌகீகர்கள் (நம்மில் அனைவருக்கு இது மனப்பாடம்) சேர்ந்து சொல்லும் பரோபகார சிந்தனை கொண்ட மந்திரம். அதன் அர்த்தத்தை புரிந்து கொண்டால் அதன் அருமை புரியும். விரும்பி மனப்பாடம் செய்ய தோன்றும். வேதத்தில் தைத்ரீய அரண்யகம் என்ற பகுதியில் வருகிறது. நீரின்றி அமையாது உலகம். எனவே எங்கும் நீர் வளம் பெறுக வேண்டும் மந்திரம். நீர் ஒன்றே சுபிக்ஷத்தின் அறிகுறி.
அந்த கால ராஜா மழை பொழிகிறதா என்று கூட தெரியாதவன். மந்திரியை தான் கேட்பான். ”மந்திரி நமது நாட்டினில் எங்கும், மாதம் மும்மாரி மழை பொழிகிறதா?” நமக்கு மழை பொழிவது மட்டும் அல்ல என்று எப்படி, எப்போது எவ்வளவு நாள் பெய்யும் என்று கூட முன்பே காற்றழுத்த மண்டலம் பற்றி சொல்லி விடுகிறார்கள்.
यो॑पां पुष्पं॒ वेद॑ पुष्प॑वान् प्र॒जावा॓न् पशु॒मान् भ॑वति ।
च॒न्द्रमा॒ वा अ॒पां पुष्पम्॓ । पुष्प॑वान् प्र॒जावा॓न् पशु॒मान् भ॑वति ।
य ए॒वं वेद॑ । योஉपामा॒यत॑नं॒ वेद॑ । आ॒यतन॑वान् भवति ।
யோ பாம் புஷ்பம் வேத’ புஷ்ப’வான் ப்ரஜாவா”ன் பஶுமான் ப’வதி |
சம்த்ரமா வா அபாம் புஷ்பம்” | புஷ்ப’வான் ப்ரஜாவா”ன் பஶுமான் ப’வதி |
ய ஏவம் வேத’ | யோஉபாமாயத’னம் வேத’ | ஆயதன’வான் பவதி|
நீர் என்பதே ஒரு புஷ்பம். ஜலபுஷ்பம். இதைப் புரிந்து கொண்டவனிடம் புஷ்பங்கள் சேர்கிறது, பூக்களாகிய குழந்தைகள் சேர்கிறது. சுபிக்ஷத்தின் சின்னமாகிய ஆநிரை, ஆடு என்று செல்வம் சேர்கிறது. சந்திரன் எனும் நிலவு, நீரின் குளுமையில் பூவாகிறது. பனி நீர் சுரக்க வைப்பது. இதை அறிந்தவன் மேற்கண்டவாறு நன்மை பெறுகிறான். நீரின் ஆதாரம் புரிந்தவன் நீரின் சுவையோடு இனிமையோடு வளத்தோடு கலந்த தன்னையே அறிந்த புண்யசாலி.
अ॒ग्निर्वा अ॒पामा॒यत॑नम् । आ॒यत॑नवान् भवति ।
यो॓ग्नेरा॒यत॑नं॒ वेद॑ । आ॒यत॑नवान् भवति ।
आपो॒वा अ॒ग्नेरा॒यत॑नम् । आ॒यत॑नवान् भवति ।
य ए॒वं वेद॑ । यो॑உपामा॒यत॑नं॒ वेद॑ । आ॒यत॑नवान् भवति ।
அக்னிர்வா அபாமாயத’னம் | ஆயத’னவான் பவதி | யோ”க்னேராயத’னம் வேத’ | ஆயத’னவான் பவதி | ஆபோவா அக்னேராயத’னம் | ஆயத’னவான் பவதி | ய ஏவம் வேத’ | யோ’உபாமாயத’னம் வேத’ | ஆயத’னவான் பவதி |
நிறைய பேருக்கு நெருப்பிலிருந்து தான் நீர் தோன்றுவது தெரியாது. H2O என்பதே ஹைட்ரஜன் வாயு வுடன், ஆக்சிஜன் எனும் உஷ்ணத்தின் சேர்க்கை தான் நீர். கொதிக்கும் சூரியன் ஒளியில் கடல் நீர் ஆவியாகி மேகமாகி குளிர்ந்து மழையாகி நீராகிறது. இதை அறிந்தவன் நீரை புரிந்தவன். நீரின் ஆதாரம் புரிந்தவன் நீரின் சுவையோடு இனிமையோடு வளத்தோடு கலந்த தன்னையே அறிந்த புண்யசாலி.
वा॒युर्वा अ॒पामा॒यत॑नम् । आ॒यत॑नवान् भवति ।
यो वा॒योरा॒यत॑नं॒ वेद॑ । आ॒यत॑नवान् भवति ।
आपो॒ वै वा॒योरा॒यत॑नम् । आ॒यत॑नवान् भवति ।
य ए॒वं वेद॑ । यो॑உपामा॒यत॑नं॒ वेद॑ । आ॒यत॑नवान् भवति ।
வாயுர்வா அபாமாயத’னம் | ஆயத’னவான் பவதி | யோ வாயோராயத’னம் வேத’ | ஆயத’னவான் பவதி | ஆபோ வை வாயோராயத’னம் | ஆயத’னவான் பவதி | ய ஏவம் வேத’ | யோ’உபாமாயத’னம் வேத’ | ஆயத’னவான் பவதி |
வாயு எனும் காற்றும் நீருக்கான ஆதாரம். காற்று தான் நீராவியாக மேலே மிதந்து சென்று மழை பொழியும் மேகமாகி நீரை அளிக்கிறது. இதை அறிந்தவன் மேற்கண்டவாறு நன்மை பெறுகிறான். நீரின் ஆதாரம் புரிந்தவன் நீரின் சுவையோடு இனிமையோடு வளத்தோடு கலந்த தன்னையே அறிந்த புண்யசாலி.
अ॒सौ वै तप॑न्नपा॒मायत॑नम् आ॒यत॑नवान् भवति ।
यो॑உमुष्य॒तप॑त आ॒यत॑नं वेद॑ । आ॒यत॑नवान् भवति ।
आपो॑ वा अ॒मुष्य॒तप॑त आ॒यत॑नम् ।आ॒यत॑नवान् भवति ।
य एवं वेद॑ । यो॑உपामा॒यत॑नं॒ वेद॑ । आ॒यत॑नवान् भवति ।
அஸௌ வை தப’ன்னபாமாயத’னம் ஆயத’னவான் பவதி |
யோ’உமுஷ்யதப’த ஆயத’னம் வேத’ | ஆயத’னவான் பவதி |
ஆபோ’ வா அமுஷ்யதப’த ஆயத’னம் |ஆயத’னவான் பவதி |
ய ஏவம் வேத’ | யோ’உபாமாயத’னம் வேத’ | ஆயத’னவான் பவதி|
சுட்டெரிக்கும் சூரியனே நீரின் ஆதாரம். நீரே சுட்டெரிக்கும் சூரியனின் ஆதாரம். இதுவே உண்மை. இதை அறிபவன் தன்னைத் தானே அறிகிறான். நீரின் ஆதாரம் புரிந்தவன் நீரின் சுவையோடு இனிமையோடு வளத்தோடு கலந்த தன்னையே அறிந்த புண்யசாலி.
च॒न्द्रमा॒ वा अ॒पामा॒यत॑नम् । आ॒यत॑नवान् भवति ।
यः च॒न्द्रम॑स आ॒यत॑नं वेद॑ । आ॒यत॑नवान् भवति ।
आपो॒ वै च॒न्द्रम॑स आ॒यत॑न॒म् । आ॒यत॑नवान् भवति ।
य एवं वेद॑ । यो॑உपामा॒यत॑नं॒ वेद॑ । आ॒यत॑नवान् भवति ।
சந்த்ரமா வா அபாமாயத’னம் | ஆயத’னவான் பவதி
| ய சந்த்ர ம்த்ரம’ஸ ஆயத’னம் வேத’ | ஆயத’னவான் பவதி |
ஆபோ வை சந்த்ரம’ஸ ஆயத’னம் | ஆயத’னவான் பவதி |
ய ஏவம் வேத’ | யோ’உபாமாயத’னம் வேத’ | ஆயத’னவான்பவதி|
சந்திரன் தான் நீருக்கு ஆதாரம். நீர் தான் சந்திரன் உருவாக காரணம். இதுவே உண்மை. இதை அறிபவன் தன்னைத் தானே அறிந்தவன் ஆகிறான். நீரின் ஆதாரம் புரிந்தவன் நீரின் சுவையோடு இனிமையோடு வளத்தோடு கலந்த தன்னையே அறிந்த புண்யசாலி.
नक्ष्त्र॑त्राणि॒ वा अ॒पामा॒यत॑न॒म् । आ॒यत॑नवान् भवति ।
यो नक्ष्त्र॑त्राणामा॒यत॑नं॒ वेद॑ । आ॒यत॑नवान् भवति ।
आपो॒ वै नक्ष॑त्राणामा॒यत॑न॒म् । आ॒यत॑नवान् भवति ।
य ए॒वं वेद॑ । यो॑உपामा॒यत॑नं॒ वेद॑ । आ॒यत॑नवान् भवति ।
நக்ஷ்த்ர’த்ராணி வா அபாமாயத’னம் | ஆயத’னவான் பவதி |
யோ நக்ஷ்த்ர’த்ராணாமாயத’னம் வேத’ | ஆயத’னவான் பவதி |
ஆபோவை னக்ஷ’த்ராணாமாயத’னம் | ஆயத’னவான் பவதி |
ய ஏவம் வேத’ | யோ’உபாமாயத’னம் வேத’ | ஆயத’னவான் பவதி|
நக்ஷத்ரம் எனும் விண்மீன்களே நீரின் ஆதாரம். இதுவே உண்மை. இதை அறிபவன் தன்னைத் தானே அறிகிறான். நீரின் ஆதாரம் இவ்வாறு புரிந்தவன் நீரின் சுவையோடு இனிமையோடு வளத்தோடு கலந்த தன்னையே அறிந்த புண்யசாலி.
प॒र्जन्यो॒ वा अ॒पामा॒यत॑नम् । आ॒यत॑नवान् भवति ।
यः प॒र्जन्य॑स्या॒यत॑नं॒ वेद॑ । आ॒यत॑नवान् भवति ।
आपो॒ वै पर्जन्यस्या॒यत॑न॒म् । आ॒यत॑नवान् भवति ।
य ए॒वं वेद॑ । यो॑உपामा॒यत॑नं॒ वेद॑ । आ॒यत॑नवान् भवति ।
பர்ஜன்யோ வா அபாமாயத’னம் | ஆயத’னவான் பவதி |
ய பர்ஜன்ய’ஸ்யாயத’னம் வேத’ | ஆயத’னவான் பவதி |
ஆபோ வை பர்ஜன்யஸ்யாயத’னம் | ஆயத’னவான் பவதி |
ய ஏவம் வேத’ | யோ’உபாமாயத’னம் வேத’ | ஆயத’னவான் பவதி|
மோகங்களே நீரின் ஆதாரம். நீரே முகில்களின் ஆதாரம். இது எல்லோரும் அறிந்த உண்மை. நீர் உஷ்ணத் தால் ஆவியாகி மேகமாகி மீண்டும் மழையாக மாறி நீராகிறது. இரண்டுமே ஒன்றுக்கு ஒன்று ஆதாரம். இதை அறிபவன் தன்னைத் தானே அறிகிறான். நீரின் ஆதாரம் இவ்வாறு புரிந்தவன் நீரின் சுவையோடு இனிமையோடு வளத்தோடு கலந்த தன்னையே அறிந்த புண்யசாலி.
स॒ंव॒त्स॒रो वा अ॒पामा॒यत॑न॒म् । आ॒यत॑नवान् भवति ।
यः सं॑वत्स॒रस्या॒यत॑नं॒ वेद॑ । आ॒यत॑नवान् भवति ।
आपो॒ वै सं॑वत्स॒रस्या॒यत॑नं॒ वेद॑ । आ॒यत॑नवान् भवति ।
य एवं वेद॑ । यो॓உप्सु नावं॒ प्रति॑ष्ठितां॒ वेद॑ । प्रत्ये॒व ति॑ष्ठति ।
ஸம்வத்ஸரோ வா அபாமாயத’னம் | ஆயத’னவான் பவதி
| யஃ ஸம்’வத்ஸரஸ்யாயத’னம் வேத’ | ஆயத’னவான் பவதி |
ஆபோ வை ஸம்’வத்ஸரஸ்யாயத’னம் வேத’ | ஆயத’னவான் பவதி |
ய ஏவம் வேத’ | யோ”உப்ஸு னாவம் ப்ரதி’ஷ்டிதாம் வேத’ | ப்ரத்யேவ தி’ஷ்டதி |
மாரிகாலமே நீரின் ஆதாரம்.வாழ்வின் ஜீவாதாரம் அது தான். ஆகவே தான் நீரே மாரிகாலத்தின் ஆதாரம். மாரிகாலத்தின் விளைவே நீர் மழையாக, ஆறாக, கடலாக பெருகுவது. இதுவே உண்மை. இதை அறிபவன் தன்னைத் தானே அறிகிறான். நீரின் ஆதாரம் இவ்வாறு புரிந்தவன் நீரின் சுவையோடு இனிமையோடு வளத்தோடு கலந்த தன்னையே அறிந்த புண்யசாலி
கோவில்களில் மட்டும் அல்ல, வீடுகளிலும் பகவானை அர்ச்சித்து, நைவேத்தியம் எல்லாம் சமர்ப்பித்து கடைசியில் கற்பூர ஹாரதி காட்டும்போது அனைவரும் கன்னத்தில் விரல்களால் போட்டுக்கொண்டு தலைக்கு மேல் கரம் தூக்கி கற்பூர ஜோதியில் தெரியும் விக்ரஹத்தின் திவ்ய ரூபத்தை மனநிறைவோடு வணங்குகிறோம். அற்புதமான தரிசனம் கிடைத்தது என்கிறோம். கற்பூர ஹாரதி காட்டும்போது சொல்லும் மந்திரம் இது. அதன் அர்த்தம் தெரிந்துகொள்ளலாம்:
रा॒जा॒धि॒रा॒जाय॑ प्रस॒ह्य साहिने॓ ।
नमो॑ व॒यं वै॓श्रव॒णाय॑ कुर्महे ।
स मे॒ कामा॒न् काम॒ कामा॑य॒ मह्यम्॓ ।
का॒मे॒श्व॒रो वै॓श्रव॒णो द॑दातु ।
कु॒बे॒राय॑ वैश्रव॒णाय॑ । म॒हा॒राजाय॒ नमः॑
ஓம் ராஜாதிராஜாய’ ப்ரஸஹ்ய ஸாஹினே” |
நமோ’ வயம் வை”ஶ்ரவணாய’ குர்மஹே |
ஸ மே காமான் காம காமா’ய மஹ்யம்” |
காமேஶ்வரோ வை”ஶ்ரவணோ த’தாது |
குபேராய’ வைஶ்ரவணாய’ | மஹாராஜாய நமஃ’ |
”ஹே ராஜாதி ராஜனே, என் பிரபு, உன்னை போற்றுகிறேன். ஜெயத்தை அளிப்பவன். விருப்பங்களை நிறைவேற்றி தருபவனே, செல்வம் வாரி வழங்குபவனே, குபேரனே, உன்னை போற்றுகிறேன். ராஜாவுக்கெல்லாம் ராஜாவான மஹாராஜனே, வணங்குகிறேன். அருள்வாயாக.
तद्ब्रह्म । ओं॓ तद्वायुः । ओं॓ तदात्मा ।
ओं॓ तद्सत्यम् । ओं॓ तत्सर्वम्॓ । ओं॓ तत्-पुरोर्नमः ॥
अन्तश्चरति भूतेषु गुहायां विश्वमूर्तिषु
त्वं यज्ञस्त्वं वषट्कारस्त्व-मिन्द्रस्त्वग्ं
रुद्रस्त्वं विष्णुस्त्वं ब्रह्मत्वं॑ प्रजापतिः ।
त्वं तदाप आपो ज्योतीरसोஉमृतं ब्रह्म भूर्भुवस्सुवरोम् ।
ईशानस्सर्व विद्यानामीश्वर स्सर्वभूतानां
ब्रह्माधिपतिर्-ब्रह्मणोஉधिपतिर्-ब्रह्मा शिवो मे अस्तु सदा शिवोम् ।
तद्विष्नोः परमं पदग्ं सदा पश्यन्ति
सूरयः दिवीवचक्षु राततं तद्वि प्रासो
विपस्यवो जागृहान् सत्समिन्धते
तद्विष्नोर्य-त्परमं पदम् ।
ऋतग्ं स॒त्यं प॑रं ब्र॒ह्म॒ पु॒रुषं॑ कृष्ण॒पिङ्ग॑लम् ।
ऊ॒र्ध्वरे॑तं वि॑रूपा॑क्षं॒ वि॒श्वरू॑पाय॒ वै नमो॒ नमः॑ ॥
ॐ ना॒रा॒य॒णाय॑ वि॒द्महे॑ वासुदे॒वाय॑ धीमहि ।
तन्नो॑ विष्णुः प्रचो॒दया॓त् ॥
ॐ शान्तिः॒ शान्तिः॒ शान्तिः॑ ।
ஓம்” தத்ப்ரஹ்ம | ஓம்” தத்வாயுஃ | ஓம்” ததாத்மா |
ஓம்” தத்ஸத்யம் | ஓம்” தத்ஸர்வம்” | ஓம்” தத்-புரோர்னமஃ ||
அம்தஶ்சரதி பூதேஷு குஹாயாம் விஶ்வமூர்திஷு
த்வம் யஜ்ஞஸ்த்வம் வஷட்காரஸ்த்வ-மிம்த்ரஸ்த்வக்ம்
ருத்ரஸ்த்வம் விஷ்ணுஸ்த்வம் ப்ரஹ்மத்வம்’ ப்ரஜாபதிஃ |
த்வம் ததாப ஆபோ ஜ்யோதீரஸோ அம்ருதம் ப்ரஹ்ம பூர்புவஸ்ஸுவரோம் |
ஓம் ஶாந்திஃ ஶாந்திஃ ஶாந்திஃ’ |
இது மந்த்ர புஷ்ப ஸ்தோத்ரத்தின் கடைசி பகுதி. இதையும் சேர்த்து தான் சொல்வது வழக்கம். . இதற்கு என்ன அர்த்தம்?
ஓம். இது தான் ப்ரம்மா. ஓம். இது தான் வாயு என்கிற காற்று. உயிர் மூச்சு. ஓம். இது தான் என்னுள்ளே இருக்கும் ஆத்மா. ஓம். இது தான் நிரந்தரமான பேர் உண்மை. ஓம். இது தான் எல்லாமே. ஓம் என்நமஸ்காரங்களுக்குரிய புருஷனே, எங்கும் எந்த உயிரிலும் உள் நின்று இயங்கும் விஸ்வமூர்த்தியே . நீயே நான் செய்யும் யாகத்தீ. நீயே வேதம் சொல்லும் தியாகங்களின் உருவகம். நீயே இந்திரன். நீ தான் வாயு எனும் காற்று. நீ தான் சம்ஹாரம் செய்யும் ருத்ரன். நீயே காக்கும் மஹா விஷ்ணு. நீயே படைக்கும் ப்ரம்ம தேவன். சகல உயிர்களுக்கும் தலைவன் நீயே. ஓம். நீர் என்பதே ஒளி. வடிகட்டிய அம்ருத சக்தி. ஏழுலகிலும் பிரம்மத்தின் தத்வம். எங்கும் அமைதி உள்ளும் புறமும் அமைதி. அமைதி. அமைதி.
- – ஜே.கே.சிவன்