spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்மந்திரங்கள் சுலோகங்கள்தீபாவளி ஸ்பெஷல் ஸ்துதி:: காசி ஸ்ரீஅன்னபூரணி துதி:: தமிழில்!

தீபாவளி ஸ்பெஷல் ஸ்துதி:: காசி ஸ்ரீஅன்னபூரணி துதி:: தமிழில்!

annapurnamandir

(காசி ஸ்ரீ அன்னபூரணி ஸ்துதி தமிழில்)

நித்ய ஆனந்தகரீ வர அபயகரீ ஸௌந்தர்ய ரத்னாகரீ|
நிர்தூதாகில கோர பாபநிகரீ ப்ரத்யக்ஷ மாஹேஸ்வரீ|
ப்ராலேய அசல வம்ச பாவனகரீ காசீ புராதீச்வரீ|
பிக்ஷாம் தேஹி க்ருபாவலம்பநகரீ மாதா அன்னபூர்ணேச்வரீ|| (1)

அனுதினமும் ஆனந்தம் அளிப்பவளே! அபய வரத கரங்கள் உடையவளே! அழகின் ரத்தினக் கடலே!
எம் பாவத் தொகுப்பை நாசம் செய்பவளே! காட்சிதந்து அருளும் மாஹேஸ்வரியே!
மலையரசன் ஹிமவானின் வம்சத்தைத் தூய்மையாக்குபவளே! காசிபுரத்து நாயகியே!
பக்தர் பால் கருணை காட்டுபவளே! அன்னபூரணி அன்னையே! எமக்கு பிட்சை இட்டு அருள்வாய்!

நானா ரத்ன விசித்ர பூஷணகரீ ஹேம அம்பர ஆடம்பரீ|
முக்தா ஹார விலம்பமான விலஸத் வக்ஷோஜ கும்பாந்தரீ|
காச்மீரா கருவாஸிதா ருசிகரீ காசீ புராதீச்வரீ
பிக்ஷாம் தேஹி க்ருபாவலம்பநகரீ மாதா அன்னபூர்ணேச்வரீ|| (2)

நாலாவித விசித்திர ரத்ன ஆபரணங்கள் அணிந்தவளே! தங்கப் பட்டாடை அணிந்தவளே!
முத்துமாலை மார்பின் நடுவே ஆடும்படி அலங்கரிக்கப் பட்டவளே!
காஷ்மீர அகில் தூபம் சூழ, நறுமணம் நிரம்பப் பெற்றவளே! காசிபுரத்து நாயகியே!
பக்தர் பால் கருணை காட்டுபவளே! அன்னபூரணி அன்னையே! எமக்கு பிட்சை இட்டு அருள்வாய்!

யோக ஆனந்தகரீ ரிபு க்ஷயகரீ தர்மைக நிஷ்டாகரீ|
சந்த்ர அர்க அனலபா ஸமான லஹரீ த்ரைலோக்ய ரக்ஷாகரீ|
ஸர்வ ஐச்வர்யகரீ தப: பலகரீ காசீ புராதீச்வரீ|
பிக்ஷாம் தேஹி க்ருபாவலம்பநகரீ மாதா அன்னபூர்ணேச்வரீ|| (3)

யோகானந்தத்தை அருள்பவளே! தர்மத்தின் மீதிலேயே சிந்தையைச் செலுத்த வைப்பவளே!
சந்திரன் சூரியன் அக்னிக்கு ஈடான ஒளியோடு திகழ்பவளே! மூவுலகையும் காப்பவளே!
அனைத்து விதமான செல்வங்களையும் தருபவளே! தவப் பலனைத் தரும் தாயே! காசிபுரத்து நாயகியே!
பக்தர் பால் கருணை காட்டுபவளே! அன்னபூரணி அன்னையே! எமக்கு பிட்சை இட்டு அருள்வாய்!

கைலாச அசல கந்தராலயகரீ கௌரீ ஹ்யுமாசங்கரீ|
கௌமாரீ நிகமார்த்த கோசரகரீ ஹ்யோங்கார பீஜ அக்ஷரீ|
மோக்ஷ த்வார கவாடபாட நகரீ காசீபுராதீச்வரீ|
பிக்ஷாம் தேஹி க்ருபாவலம்பநகரீ மாதா அன்னபூர்ணேச்வரீ|| (4)

கயிலாச மலைக் குகையை வீடாகக் கொண்டவளே! பொன்னிறத்தில் ஒளிரும் உமாதேவியே! சங்கரன் துணைவியே!
இளமை பொருந்தியவளே! வேதப் பொருளை அறியச் செய்பவளே! ஓங்காரத்தை பீஜாட்சரமாகக் கொண்டவளே!
மோட்ச வாசலைத் திறந்தருளும் தாயே! காசிபுரத்து நாயகியே!
பக்தர் பால் கருணை காட்டுபவளே! அன்னபூரணி அன்னையே! எமக்கு பிட்சை இட்டு அருள்வாய்!

த்ருச்யா த்ருச்ய விபூதி வாஹனகரீ ப்ரம்மாண்ட பாண்டோதரீ|
லீலா நாடக ஸூத்ர கேலனகரீ விக்ஞான தீபாங்குரீ|
ஸ்ரீவிச்வேச மன: ப்ரஸாதனகரீ காசீ புராதீச்வரீ|
பிக்ஷாம் தேஹி க்ருபாவலம்பநகரீ மாதா அன்னபூர்ணேச்வரீ|| (5)

இக-பர சுகம் பெறக் காரணமாக இருப்பவளே! பிரமாண்டத்தை வயிற்றில் தாங்கியவளே!
உலகியல் நாடகத்தை நடத்தும் நாயகியே! அனுபவ ஞான விளக்கின் சுடராய் ஒளிர்பவளே!
மகேச்வரனின் மனத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்துபவளே! காசிபுரத்து நாயகியே!
பக்தர் பால் கருணை காட்டுபவளே! அன்னபூரணி அன்னையே! எமக்கு பிட்சை இட்டு அருள்வாய்!

ஆதி க்ஷாந்த ஸமஸ்த வர்ணனகரீ சம்போஸ்த்ரி பாவாகரீ|
காச்மீரா த்ரிபுரேச்வரீ த்ரிநயனீ விச்வேச்வரீ சர்வரீ|
ஸ்வர்க த்வார கவாட பாடனகரீ காசீ புராதீச்வரீ|
பிக்ஷாம் தேஹி க்ருபாவலம்பநகரீ மாதா அன்னபூர்ணேச்வரீ|| (6)

எல்லா எழுத்துகளுக்கும் காரணமாய் இருப்பவளே! முத்தொழில்களின் தோற்றத்துக்கும் மூலகாரணப் பொருளே!
மங்கலக் குங்குமம் தரித்தவளே! முப்புரம் எரித்த முக்கண் முதல்வனின் பத்தினியே! உலக நாயகியே! எங்கும் இருப்பவளே!
சுவர்க்க உலகத்தின் வாசல் கதவைத் திறந்து அருளும் தாயே! காசிபுரத்து நாயகியே!
பக்தர் பால் கருணை காட்டுபவளே! அன்னபூரணி அன்னையே! எமக்கு பிட்சை இட்டு அருள்வாய்!

உர்வீ ஸர்வ ஜனேச்வரீ ஜயகரீ மாதா க்ருபாஸாகரீ|
வேணி நீல ஸமான குந்தலதரீ நித்ய அன்னதானேச்வரீ|
ஸாக்ஷான் மோக்ஷகரீ ஸதா சுபகரீ காசீபுராதீச்வரீ|
பிக்ஷாம் தேஹி க்ருபாவலம்பநகரீ மாதா அன்னபூர்ணேச்வரீ|| (7)

பூமி உருவாக இருப்பவளே! அனைத்து மக்களுக்கும் ஈச்வரியே! வெற்றியைத் தரும் வித்தகியே! கருணைக் கடலே!
அழகுப் பின்னலுடன் கருங்குழல் கொண்டவளே! தினம்தினமும் அன்னதானம் அளிக்கும் அன்னையே!
மோட்சம் அருள்பவளே! மங்கலம் தருபவளே! காசிபுரத்து நாயகியே!
பக்தர் பால் கருணை காட்டுபவளே! அன்னபூரணி அன்னையே! எமக்கு பிட்சை இட்டு அருள்வாய்!

தேவீ ஸர்வ விசித்ர ரத்ன ரசிதா தாக்ஷாயணி ஸுந்தரீ|
வாமா ஸ்வாது பயோதரா ப்ரியகரீ ஸௌபாக்ய மாஹேச்வரீ|
பக்தாபீஷ்டகரீ ஸதா ஸுபகரீ காசீபுராதீச்வரீ|
பிக்ஷாம் தேஹி க்ருபாவலம்பநகரீ மாதா அன்னபூர்ணேச்வரீ|| (8)

அனைத்து அபூர்வ ரத்தினங்களாலும் ஒளிர்பவளே! தாட்சாயணி தாயே! அழகு மிகுந்த அன்னையே!
ஈசனில் பாதியாய் இடப்புறம் கொண்டு ஈசன் விரும்பும் இனியதைச் செய்பவளே! சௌபாக்கியம் கொண்ட மகேசன் மனைவியே!
பக்தரின் விருப்பத்தை நிறைவேற்றித் தருபவளே! என்றும் சுபமானதைச் செய்பவளே! காசிபுரத்து நாயகியே!
பக்தர் பால் கருணை காட்டுபவளே! அன்னபூரணி அன்னையே! எமக்கு பிட்சை இட்டு அருள்வாய்!

சந்த்ர அர்க அனல கோடி கோடி ஸத்ருசீ சந்த்ராம்சு பிம்பாதரீ|
சந்த்ர அர்க அக்னி சமான குண்டலதரீ சந்த்ர அர்க வர்ணேச்வரீ|
மாலா புஸ்தக பாச அங்குசதரீ காசீபுராதீச்வரீ|
பிக்ஷாம் தேஹி க்ருபாவலம்பநகரீ மாதா அன்னபூர்ணேச்வரீ|| (9)

கோடிக்கணக்கான சந்திர சூரிய அக்னியருக்கு ஒப்பானவளே! பிறைச் சந்திரன் போல் கோவைப்பழ வதனம் கொண்டவளே!
சந்திர சூரிய அக்னியர்போல் ஒளிவீசும் குண்டலங்கள் அணிந்தவளே! சந்திர அக்னியின் ஒளி நிறத்தவளே!
மாலை புத்தகம் பாசம் அங்குசம் ஆகியவற்றைத் தாங்கியவளே! காசிபுரத்து நாயகியே!
பக்தர் பால் கருணை காட்டுபவளே! அன்னபூரணி அன்னையே! எமக்கு பிட்சை இட்டு அருள்வாய்!

க்ஷத்ர த்ராணகரீ மஹாபயகரீ மாதா க்ருபா ஸாகரீ|
ஸர்வ ஆனந்தகரீ ஸதாசிவகரீ விச்வேச்வரீ ஸ்ரீதரீ|
தக்ஷா க்ரந்தகரீ நிராமயகரீ காசீபுராதீச்வரீ|
பிக்ஷாம் தேஹி க்ருபாவலம்பநகரீ மாதா அன்னபூர்ணேச்வரீ|| (10)

சத்திரியரைப் போல் சாமானியரைக் காப்பவளே! பயத்தைப் போக்கி அருள்பவளே! கருணைக் கடலான தாயே!
அனைவருக்கும் ஆனந்தத்தையே அருள்பவளே! சதாசிவன் துணை லோகநாயகியே! முப்போதும் மங்கலமே தருபவளே!
வாட்டும் பிணியை ஓட்டுபவளே! நோயற்ற வாழ்வு அளிப்பவளே! காசிபுரத்து நாயகியே!
பக்தர் பால் கருணை காட்டுபவளே! அன்னபூரணி அன்னையே! எமக்கு பிட்சை இட்டு அருள்வாய்!

அன்னபூர்ணே ஸதாபூர்ணே சங்கர ப்ராண வல்லபே|
ஞான வைராக்ய ஸித்யர்த்தம் பிக்ஷாம் தேஹீ ச பார்வதீ||

அன்னம் நிறைந்தவளே! என்றும் பூரணமாக இருப்பவளே! சங்கரனின் பிராண நாயகியே!
மாதா பார்வதியே! எமக்கு ஞான வைராக்கியம் ஏற்பட பிட்சை இட்டு அருள்வாய்!

மாதா ச பார்வதீ தேவீ பிதா தேவோ மஹேச்வர:|
பாந்தவா: சிவபக்தாச் ச ஸ்வ தேசோ புவன த்ரயம்||

எனக்குத் தாய் – பார்வதீ தேவீ! தந்தை – மகேஸ்வரன்!
சொந்தங்கள் – சிவபக்தர்கள்! என் தேசம் – மூவுலகமுமே!

தமிழாக்கம்: செங்கோட்டை ஸ்ரீராம்

குறிப்பு: வழக்கமாக அன்னபூரணாஷ்டகம் சொல்வது போல் ராக நயத்துடன் சொல்வதற்கு ஏற்ற வகையில் இது இருக்காது. காரணம், முழு நீள சம்ஸ்கிருத பதங்களை, பொருள் வரும் வகையில் பிரித்துக் கொடுத்துள்ளேன். உதாரணத்துக்கு…

ஹேமாம்பராடம்பரீ = ஹேம + அம்பர+ ஆடம்பரீ ; சந்த்ரார்காக்னி = சந்த்ர+அர்க+அக்னி… என்பதாக! இப்படித் தருவதற்கு, சம்ஸ்கிருத பண்டிதர்கள் என்னை மன்னிப்பார்களாக! இருந்தாலும், இப்படிச் சொன்னாலும், சொன்னதற்கான பலனை அன்னை அன்னபூரணி அவசியம் அளிப்பாள்! பசியற்ற உலகம் அமையட்டும்! அதற்கு அன்னையின் அருள்
எங்கும் நிறையட்டும்!

அன்னம் பஹுகுர்வீத| – தைத்ரீய உபநிஷதத்தின் ப்ருகுவல்லி சொல்லும் வாக்கியம் இது. அன்னத்தை மிகுதியாக உண்டாக்குங்கள்! பசியற்ற உலகம் படையுங்கள்!உலகுக்கு வழிகாட்டிய உன்னத நாட்டின் பாரம்பரியச் சிந்தனை இது!

2 COMMENTS

  1. ஆன்ம வெளிப்பாடுடன் அழகிய தமிழாக்கம்

    நீலகண்டன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe