தட்சிண அகோபிலத்தில் சுவாதி நட்சத்திர பூஜையும் தீர்த்தவலமும்

விழாக்கள் விசேஷங்கள்

கீழப்பாவூர் நரசிம்மர் கோவிலில் சுவாதி நட்சத்திர பூஜை மற்றும் தீர்த்தவலம் நடைபெற்றது

தட்சிண அகோபிலம் என்றழைக்கப்படும் கீழப்பாவூரில் 16 திருக்கரங்கள் கொண்ட அபூர்வ நரசிம்மர் கோவிலில் சுவாதி நட்சத்திர பூஜை நடைபெற்றது
மாலை 3 மணி முதல் 16 வகை மூலிகைகளால் மூலமந்திர ஹோமம்,விஷ்ணு சூக்தஹோமம்,மகாலட்சுமி ஹோமமும்,12 வகை திரவியங்களால் சிறப்பு அபிஷேங்களும் நடைபெற்றன., பெருமாள் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் ஸ்ரீ நரஸிம்ஹ புஷ்கரணியையும் திருக்கோவிலையும் பக்கதர்கள் பஜனை பாடி தீர்த்தவலம் வந்தனர் விழாவில் ,கீழப்பாவூர் ,பாவூர்சத்திரம் ,சுரண்டை ,தென்காசி ,ஆவுடையானூர் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்
ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினரும் ,ஸ்ரீ நரசிம்ம சுவாமி கைங்கர்ய சபையினரும் ,பொதுமக்களும் செய்திருந்தனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.