ஏப்ரல் 21, 2021, 8:28 மணி புதன்கிழமை
More

  தண்ணீரில் விடியவிடிய விளக்கெரிந்த அதிசயம்!

  thiruvarur - 1

  thiruvarur - 2

  ஏமப்பேரூர் திருவாரூருக்கு பக்கத்தில் உள்ளது. அங்கு நமிநந்தி அடிகள் என்று ஒரு சிவனடியார் வாழ்ந்து வந்த நம்பி நந்தி என்று பெயர் தான் நமிநந்தி என்று மருவிவிட்டது.

  திருநாவுக்கரசர் அவரை நம்பிநந்தி என்றே குறிப்பிடுகிறார். நமிநந்தியடிகள் ஒரு அந்தணர். வேதத்தில் வேரூன்றிய சைவநெறியில் பிழறாத உத்தமர் பொழுது புலர்வதற்கு முன்னால் எழுந்து தன்னுடைய அனுஷ்டானங்களை எல்லாம் செய்து முடித்துவிட்டு ஓட்டமும் நடையுமாக விரைந்து திருவாரூரில் உள்ள கமலாம்பிகை  கோவிலுக்கு  சென்று இறைவனை வழிபடுவது அவரது வழக்கம்.

  திருவாரூரில் கமலா எழுந்திருக்கும் புற்றிடம் கொண்ட பெருமானையும் வீதி விடங்கப் பெருமானை தரிசித்து தொண்டுகள் செய்த வருவார் சாயரட்சை பூஜை முடித்து ஊருக்குத் திரும்புவது வழக்கம் திருவாரூர் ஆலயத்தில் இரண்டாவது பிரகாரத்தில் அறநெறி என்னும் சன்னதி அமைந்துள்ளது பிற்கால சோழ மன்னர்களில் மிகச் சிறந்த சிவபக்தராக திகழ்ந்த கண்டராதித்த சோழரின் பட்டத்தரசி செம்பியன் மாதேவியார் தான் திருவாரூர் அரநெறி கோவிலை கல் கட்டிடமாக கட்டியவர்

  நம்பி நந்தியடிகள் அதற்கு முந்தைய காலத்தவர் அதனால் அப்பொழுது அறநெறி கோவில் கல் கட்டிடமாக இல்லை நம்பி நந்தி அடிகள் அறநெறி ஈசனையும் சென்று வழிபட்டு வருவது வழக்கம் ஒரு நாள் மாலையில் நம்பி வழக்கம்போல் ஆலயத்திற்குள் வந்தார் விளக்குகள் ஏதும் எரியவில்லை இருட்டாக இருந்தது. ஒவ்வொரு விளக்காக  எடுத்துப்பார்த்தால் அதில் ஒரு சொட்டு கூட நெய் இல்லை.

  அறநெறி நாதரை கண்ணால் தரிசிக்காமல் எப்படி ஊருக்கு திரும்பிச் செல்வது வீட்டிற்கு சென்று எடுத்து வருவோம் என்றால் அதற்குள் பொழுது போய்விடும் என்ன செய்வது என்று திகைத்தார் அந்த நேரத்தில் அவருக்கு ஒரு யோசனை தோன்றியது பக்கத்தில் யார் வீட்டிலாவது கோயில் விளக்கு எரிக்க நெய் வாங்கி வந்தால் என்ன என்று ஆர்வம் எழுந்தது.

  அவர் இருந்த துடிப்பின் அவசரத்தில் யார் வீட்டிற்கு சென்று கேட்பது என்று முன்யோசனை ஏதுமின்றி ஏதோ ஒரு வீட்டிற்குள் நுழைந்தார். ஐயா அறநெறி கோயிலில் விளக்குகளில் நெய் இல்லை ஒரே இருட்டாக இருக்கிறது கொஞ்சம் நெய் தாருங்கள் உங்களுக்கு கோடி புண்ணியம் என்று அந்த வீட்டிலுள்ளவர்கள் இடத்தில் பணிவாக முறையிட்டு கேட்டுக் கொண்டார்.

  ஆனால் அந்த வீடு சைவநெறி சாராத ஒருவரின் வீடு நந்தி அடிகள் நயந்து வேண்டுவது கேட்டு அந்த வீட்டாருக்கு ஏளனம் தோன்றியது ஏன் ஐயா நீர் சொல்வது வேடிக்கையாக இருக்கிறதே உங்களுடைய சிவபெருமான் கையில் நெருப்பை ஏந்திக்கொண்டு ஆடுவதாக சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் அவருக்கு நீங்கள் வெளிச்சம் தர வேண்டுமா? நீங்கள் தீபம் ஏற்றி கொடுத்தால்தான் அவருக்கு வெளிச்சம் தெரியுமா? என்றெல்லாம் அவர் கேலி செய்தார்.

  வேண்டுமானால் இதோ பக்கத்தில் குளம் இருக்கிறது குளத்து நீரை மொண்டு கொண்டு வந்து நெய்யாக பாவித்து விளக்கு ஏற்றலாமே என்று நையாண்டி பேசினார் அடிகளின் மனம் நொந்து கொண்டது அறநெறிக்கு வந்தார் உணர்வு ஒடுங்க சாய்ந்தார் அனல் ஏந்தி ஆடும் பெருமான் தொண்டரின் பக்தியை உணர்ந்தவர் அல்லவா அவருடைய குரல் அசரிரீயாக ஒலித்தது

  நம்பி கவலைப்பட வேண்டாம் கமலாலயக் குளத்தில் நீரை எடுத்து அதனை விளக்கில் ஊற்றி விளக்குகளை ஏற்றி என்னை தரிசிக்கலாம் என்று. சோர்வுற்று  படுத்திருந்த திருத்தொண்டர் கிளர்ந்து எழுந்து ஓடிச்சென்று குளத்து நீரை முகர்ந்து வந்து நெய்க்கு பதிலாக சட்டியில் ஊற்றினார் விளக்குகள் எரிந்தன மிகவும் பிரகாசமாக விடிய விடிய விளக்குகள் எரிந்தன.

  மறுநாள் காலையில் அந்த அதிசய செய்தி ஊர் முழுவதும் பரவியது நாவுக்கரசர் பெருமான் இந்த நிகழ்ச்சியைப் பற்றி மிகவும் பயபக்தியுடன் பாடியிருக்கிறார்

  நம்பி நந்தி நீரால் திருவிளக்கு நீள்நாடு அறியும் அன்றோ

  மேலும் நாவுக்கரசர் நந்தியை தொண்டருக்கு ஆணிப்பொன் போன்றவர் என்று சிறப்பித்து பாராட்டுகின்றார் இவ்வளவு பெருமை மிக்கவர் நம்பிநந்தி அடிகள்.

  திருவாரூரில் தியாகராஜர் திருவிழாக்கள் விமர்சையாக கொண்டாடப்படும் மார்கழியில் திருவாதிரை திருவிழா பங்குனியில் பங்குனி உத்திர திருவிழா 5000 ஆண்டுகளுக்கும் மேலாக விழாக்கள் நடைபெற்று வருகின்றன இந்த விழாக்களில் தான் விடங்கபெருமானின் திருவடி தரிசனம் கிடைக்கப் பெற்று வருகிறது

  thiruvarur 1 - 3

  thiruvarur 1 - 4

  திருப்புகலூரில் திருஞானசம்பந்தர் தங்கியிருக்கும் பொழுது திருவாரூர் சென்று தரிசித்துவிட்டு நாவுக்கரசர் வரும் செய்தி கேட்டு ஆசையோடும் ஆர்வத்தோடும் சம்பந்தர் சந்திக்க செல்கிறார் இருவரும் சந்திக்கும் பொழுது இரண்டு கடல்கள் ஒன்றையொன்று ஆரத் தழுவிக் கொள்வது போல இருந்தது என்று வர்ணிக்கிறார் சேக்கிழார்

  அப்பொழுது சம்பந்தர் நாவுக்கரசர் பார்த்து அப்பரே திருவாரூரில் திருவாதிரை திருவிழா எப்படி நடைபெற்றது என்று விசாரித்தார் சமந்தர். நாவுக்கரசரை முதன்முதலில் அப்பர் என்று அழைத்தார் அதற்கு பிறகு அவருக்கு அப்பெயர் நிலைபெற்றது.

  திருவிழாவைப் பற்றி பத்து பாடல்களில் விரித்து சொன்னார் ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு இன்னும் நம் கண்முன்னால் நடப்பதைப்போல அப்பாடல்கள் அமைந்திருப்பதைக் காணலாம் முத்து விதான மணிப்பொற் கவரி தோன்ற தியாகேசன் பவனி வந்த காட்சி நம்மை மெய்சிலிர்க்க செய்கின்றது பங்குனி உத்திர திருவிழா மிகப் பிரசித்தமான இன்றும் தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகின்றது  சுற்றியுள்ள அத்தனை ஊர்களிலிருந்தும் மக்கள் வெள்ளம்போல் திரிகின்றார்கள் தியாகராஜரின் அஜபா நடனத்தையும் புஜங்க நடனத்தை கண்டு மகிழ்ச்சிப் பெருக்கால் துள்ளி ஆடுகிறார்கள் அவருக்கு உள்ளும் புறமும் எங்கும் அலங்காரப் பந்தல்கள் தண்ணீர் பந்தல்கள் ஆயிரம் ஆயிரம் உயிர்களுக்கு அன்னதானம் செய்யும் மண்டபங்கள் என்று சீரும் சிறப்புமாக நடந்தேறியது பங்குனி உத்திரத் திருவிழா பொன்னும் மெய்ப்பொருளும் தருவானை போகமும் திருவும் புணர் பானைநாம் காண்கிறோம்

  திருவாரூருக்கு பக்கத்தில் குண்டையூர் என்ற இடம் உள்ளது. குண்டையூர் என்ற ஊரில் வாழ்ந்து வந்த பெரும் நிலச்சுவான்தார் சிவனிடம் மாறாத பக்தி கொண்டவர்  வண்டி வண்டியாக பாவையர் வீட்டிற்கு நெல்லை அனுப்புவது வழக்கம் ஒருசமயம் மழை பொய்த்து விளைச்சல் இல்லாமல் போய்விட்டது சுந்தரருக்கு நெல் அனுப்ப முடியவில்லை தவித்துப் போனார் குண்டையூர் கிழார் இறைவனை நெஞ்சுருக வேண்டிக்கொண்டார்

  சிவபெருமானின் அருளால் அன்று இரவு திருக்கோயிலில் கோயில் பிரகாரங்களில் மழையாகப் பெய்து மலை மலையாகக் குவித்து விட்டது அந்த நெல் மலைகளை பரவையார் மாளிகைக்கு எப்படி எடுத்துச் செல்வது என்பதே பெரிய பிரச்சனையாகிவிட்டது

  குண்டையூர் கிழார் சுந்தரரிடம் தன் கருத்தைச் சொன்னார் கோழி கடவுளை பாடினார் கோளிலி எம்பெருமான் குண்டை யூர்ச்சில நெல்லுப் பெற்றேன் ஆளிலை எம்பெருமான் அவை அண்டித் தரப்பணியே
  கோளிலியில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானின் குண்டையூரில் உன் அருளால் சிறிது நெல் பெற்றேன் ஆனால் அதனை பரவையாரின் இல்லத்தில் சேர்ப்பதற்கு என்னிடம் ஆட்கள் இல்லை அதனால் நீ உன் பூதகணங்களை அனுப்பி அவற்றை எடுத்து வரச் செய்ய வேண்டும் என்று முறையிட்டார் இறைவன் தன் தோழனின் பாட்டிற்கு இறங்கி பூதகணங்களை ஏவினர்

  அவர்கள் நெல் மலைகளை பரவையார் மாளிகையில் மட்டுமல்லாது ஆறு ஊரில் உள்ள அத்தனை வீடுகளிலும் கொண்டு குவித்தனர் இதனால் மக்களின் பசியும் பட்டினியும் முற்றிலும் தீர்ந்தது

  Source: தெய்வத்தமிழ் | Deivatamil.com

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,231FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,120FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »