கிருஷ்ணன் கோபிகா ஸ்திரீகளைத் தொட்டு நாட்டியமாடியது அதர்மம் அல்லவா?

gopika krishna
gopika krishna

சிருஷ்டிக்கு அப்பாற்பட்டவன்

ஶ்ரீ பரீக்ஷித் உவாச –
ஸம்ஸ்தாபனாய தர்மஸ்ய ப்ரசமாயேதரஸ்ய ச
அவதீர்ண: ஹி பகவான் அம்சேன ஜகதீச்வர:

ஸ: கதம் தர்மஸேதூநாம் வக்தா கர்தாபிரக்ஷிதா
ப்ரதீபம் ஆசரத் ப்ரஹமன் பரதாராபிமர்சனம்

(பரீக்ஷித் மகாராஜா சொன்னது –

ஓ, பிராமணரே! படைப்புக்கெல்லாம் அதிபதியாகிய பகவான், தனது அம்சமாகிய பலராமனுடன் அவதாரம் செய்ததே, இந்த பூமியில் தர்மத்தை நிலைநாட்டவும் அதர்மத்தை அழிப்பதற்காகவும் தானே? தார்மிக நெறிகளை உபதேசித்தவனும் அவனே, அவற்றை செயல்படுத்துபவனும் அவனே, அவற்றைக் காத்து நிற்பவனும் அவனே. பிறகு எப்படி அவன் (ராசலீலையின் போது) தார்மிக நெறிகளை மீறிப் பிறரது மனைவியரைத் தீண்டினான்?)

ஆப்தகாம: யதுபதி: க்ருதவான்வை ஜுகுப்ஸிதம்
கிம் அபிப்ராய ஏதன்ன: சம்சயம் சிந்தி ஸுவ்ரத்

(யதுகுல நாயகன் ஆசைகளுக்கும் தேவைகளுக்கும் அப்பாற்பட்டவன். அவன் (மேலோரால்) இழிவாகக் கருதப்படும் செய்கையை மேற்கொண்டதன் காரணம்தான் என்ன? ஓ, தபஸ்வியே! எனது இந்த ஐயத்தைப் போக்கியருள வேண்டும்.)

ஶ்ரீ சுக உவாச –
தர்மவ்யதிக்ரமோ த்ருஷ்ட ஈச்வராணாம் ச ஸாஹஸம்
தேஜீயஸாம் ந தோஷாய வஹ்னே ஸர்வபுஜோ யதா

(ஶ்ரீ சுகப்ரம்மம் சொன்னது –

அக்னி அனைத்தையும் பஸ்மமாக்கி விடுகிறது. ஈசுவரத்தன்மை கொண்டவர்களும் அக்னியைப் போன்றவர்கள். நமது பார்வையில் தர்மக் குறைவாகத் தெரியும் செயல்களால் எந்த விதத்திலும் அவர்கள் பாதிப்படைவதில்லை.)

ALSO READ:  கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

நேதத் ஸமாசரேஜ்ஜாது மனஸாபி ஹ்யநீச்வர:
வினச்யத்யாசரன் மௌட்யாத்யதாருத்ரோ(அ)ப்திஜம் விஷம்

(ஈசுவரத்தன்மை இல்லாதோர் மனதளவில்கூட இத்தகைய செயல்களில் ஈடுபடக் கூடாது. சாமானியர்கள் யாராவது முட்டாள்தனத்தால் இத்தகைய செயல்களைக் கைக்கொண்டால் அவர்கள் அடியோடு அழிந்து போவார்கள். ருத்ரன் அல்லாமல் மற்றவர்கள் பாற்கடலின் விஷத்தைக் குடிக்க முயற்சித்தால் அழிந்து போய்விடுவார்கள், அல்லவா?)

ஈச்வராணாம் வச: ஸத்யம் தத ஏவ ஆசரிதம் க்வசித்
தேஷாம் யத் ஸ்வவசோயுக்தம் புத்திமாந்ஸ்தத் ஸம ஆசரேத்

(ஈசுவரத்தன்மை உடையவர்களின் வாக்கு சத்தியத்தன்மை கொண்டது. அவர்களது செயல்கள் சில சமயங்களில் அவர்களது வாக்குடன் அனுசரித்துப் போகின்றன.. அவர்களது செயல்கள் அவர்களது வாக்குடன் எவ்வாறு ஒத்துப் போகின்றன என்பதை அறிவுள்ளவன் (தனது அறிவின் மூலம்) புரிந்து கொண்டு அதற்கேற்றவாறு அவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும்.)

குசலசரிதேன ஈஷாமஹி ஸ்வார்த: ந வித்யதே
விபர்யயேண வானர்த: நிரஹங்காரிணாம் ப்ரபோ

(அரசனே! அவர்கள் அகங்காரத்துக்கு அப்பாற்பட்டவர்கள். தாங்கள் செய்யும் அறச்செயல்களால் அவர்கள் எந்தவொரு நற்பலனையும் அனுபவிப்பதில்லை. அதேபோல, அறத்துக்கு மாறான செயல்களால் எந்தவொரு கெடுதியையும் அவர்கள் அனுபவிப்பதில்லை.)

கிம் உத அகில ஸத்த்வானாம் திர்யங்மர்த்யதிவௌகஸாம்
ஈசிதுஸ்சேதவ்யானாம் குசல அகுசல அன்வய:

[(ஈசுவரனின் அதிகாரிகளே இப்படி மேம்பட்ட நிலையில் இருக்கும்போது) ஈசுவரனைப் பற்றிக் கேட்கவா வேண்டும்? (கீழ் உலகில் உள்ள மரணிக்கும் தன்மை உடைய) விலங்குகளையும், மனிதர்களையும், (மேல் உலகில் உள்ள மரணத்துக்கு அப்பாற்பட்ட) தேவர்களையும் படைத்தவன் அவன். அவனே சர்வேசுவரன். (மாயாவலையில் சிக்கியுள்ள) படைக்கப்பட்ட ஜீவர்களுக்கு (மட்டுமே) உரிய அறச்செயல்கள், மறச்செயல்கள் முதலானவற்றின் விளைவுகள் அவனை எவ்வாறு தீண்ட முடியும்?)

ALSO READ:  பராபவ - பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

(அவன் படைப்புக்கு அப்பாற்பட்டவன். படைப்பின் இயல்புகளான கர்மவினைகளும், அவற்றால் விளையும் புண்ணிய பாவங்களும் அவனைக் கட்டுப்படுத்த முடியாது. எனவே, படைப்பின் இயல்புகளைக் கொண்டு அவனை எடைபோடக் கூடாது என்பது இந்த சுலோகத்தின் கருத்து.)]

யத் பாதபங்கஜ பராகநிஷேவ த்ருப்தா யோக ப்ரபாவ விதுத அகில கர்ம பந்தா:
ஸ்வைரம் சரந்தி முனயோ(அ)பி ந நஹ்யமானா: தஸ்ய இச்சயாத் தவபுஷ: குத ஏவ பந்த:

(எந்த (சர்வேஸ்வரனின்) திருவடித் தாமரைகளின் அடிப்பொடியைப் பணிந்து கைங்கரியம் பண்ணுவதால் (பேரின்பத்தை அடைந்து) திருப்தியடைய முடியுமோ, (எந்த சர்வேஸ்வரனுடன்) யோகத்தால் தங்களை இணைத்துக் கொண்ட முனிவர்கள் (தங்களது முந்தைய) கர்ம பந்தங்களில் இருந்து விடுபடுவதுடன், (இனிவரும் காலங்களில்) பந்தங்களில் சிக்காமல் சர்வ சுதந்திரமாகச் செயல்பட முடியுமோ, அவன் (அத்தகைய சர்வேஸ்வரன்) தனது சங்கல்பத்தினால் எடுக்கும் திவ்ய சரீரத்தை (அவதார புருஷனை) எத்தகைய கர்மத்தால் தளைப்படுத்த முடியும்?)

கோபீனாம் தத் பதீனாம் ச ஸர்வேஷாம் ஏவ தேஹீனாம்
யோ(அ)ந்த: சரதி ஸோ(அ)த்யக்ஷ: க்ரீடனேன இஹ தேஹபாக்
அனுக்ரஹாய பக்தானாம் மானுஷம் தேஹமாஸ்தித:
பஜதே தாத்ருஷீ: க்ரீடா யா: ச்ருத்வா தத்பர: பவேத்

ALSO READ:  ஆதிசங்கரரின் சதச்லோகி - எளிய விளக்கம்!

(கோபிகைகளுக்குள்ளும் அவர்களது கணவர்களுக்குள்ளும் மட்டுமின்றி, உடல் தரித்த சகல ஜீவர்களுக்குள்ளும் (அந்தர்யாமியாக) வீற்றிருந்து (புலன் இன்பங்களையோ, கர்ம பலன்களையோ அனுபவிக்காமல்) வெறும் பார்வையாளனாக மட்டும் திகழ்பவன் எவனோ, அத்தகைய சர்வேசுவரன், பக்தர்களுக்கு அனுக்கிரகம் செய்வதற்காக மனித வடிவத்தில் அவதரிக்கும் போது லீலைகளில் ஈடுபடுகிறான். தனது லீலா வினோதத்துக்காக இத்தகைய வடிவங்களைத் தரித்துக் கொள்கிறான். இந்த லீலைகளைப் பற்றிக் கேட்பவர்கள் அவன் மீது பக்தியில் திளைக்கிறார்கள்.)

விக்ரீடிதம் வ்ரஜவதூபி: இதம் ச விஷ்ணோ:
சிரத்தாவிந்தோ(அ)நுச்ருணுயாதத வர்ணயேத் ய:
பக்திம் பராம் பகவதி ப்ரதிலப்ய காமம்
ஹ்ருத்ரோகமாச்வபாஹினோத்யசிரேண தீர:

[(அதுபோலவே) பிருந்தாவனத்தில் கோபிகா ஸ்திரீகளுடன் பகவான் நிகழ்த்திய (ராசலீலை எனப்படும் அதி அற்புதமான) இந்த லீலையைச் சொல்பவரும் கேட்பவரும், பகவான் விஷ்ணுவின் மீது மாறாக பக்தி கொண்டவர்களாகத் திகழ்வார்கள். அவர்கள் காமம் என்னும் பெரு நோய் நீங்கப் பெற்றவர்களாய் உள்ளத் தூய்மை அடைவார்கள்.]

  • வேதா டி.ஸ்ரீதரன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories