திருநாமங்கள் காட்டும் தலைமைப் பண்புகள்: மணிவண்ணன்!

thirunamangal - 2026

2.மணி வண்ணன் திருநாமம்

-> மகர சடகோபன், தென்திருப்பேரை <-

நம்மாழ்வார் திருவாய்மொழி 7-3-2 ல் தென்திருப்பேரை எம்பெருமானை “
“ தேன் மொய்த்த பூம்பொழில் தண்பணை சூழ்* தெந்திருப்பேரெயில் வீற்றிருந்த* வானப்பிரான் மணிவண்ணன் கண்ணன்* செங்கனிவாயின் திறத்ததுவே.”
என்று மங்களாசாசனம் செய்துள்ளார்.

மணிவண்ணன் திருநாமம் காட்டும் தலைமைப் பண்புகள்

1.மணி போன்ற ரத்தினங்கள் விலை மதிப்பு உயர்ந்து இருந்தாலும், புடவைத் தலைப்பில் முடிந்து ஆளலாம்படி அடங்கியிருக்கும்.அதே போல் தலைவன் என்பவன் மதிப்பு புகழ் பெற்றிருந்தாலும் மக்கள் தொடர்புடையவர் என்ற எளிமையைப் பெற்றிருக்க வேண்டும். ( யசோதை உரலில் கயிறு கொண்டு கட்ட, கட்டுண்டு நின்றவன் என்பதன் மூலம் அவன் எளிமை உணரப்படுகிறது)

2.ரத்தினம் என்பது பார்ப்பதற்குப் பெருமிதத்தைத் தரும். அது பிறந்த இடமான மலையும் கடலும் பெருமிதத்துடன் இயற்கையில் தோன்றுபவையாக இருக்கின்றன. அந்த கடலும் மலைகளும் தன்னை அழித்துக் கொண்டு ரத்தினத்தை வெளிப்படுத்துகின்றன மக்களின் மகிழ்ச்சிக்காக என்பதுதான் உண்மை. அதே போல் தலைவன் என்பவனுக்கு அவனுடைய செயலால் மக்கள் மனதிலும் , அவன் மனதிலும் பெருமிதம் தோன்றுகிறது. தலைவனைப் பெற்ற தாய் தந்தையர் தலைவனைப் பெற்றதால் பெருமிதம் அடைகின்றனர். இந்தப் பெருமிதம் இயற்கை கொடுத்த கொடை அவர்களுக்கு இந்தப் பிறப்பில். (எம்பெருமான் கடல் வண்ணன் , மலையப்பன் என்றெல்லாம் அழைக்கப்படுகிறார். “மலை மேல் நிற்பாய் கடல் சேர்ப்பாய்” என்பது திருவாய்மொழி வாக்கு. திருப்பாற்கடல், திருவேங்கடம், திருமாலிருஞ்சோலை போன்ற திவ்ய தேசங்கள்)

ALSO READ:  பழங்குடியினர் சலுகைகள் - யாருக்கு?

3.ரத்தினம் என்பது தானாகவே கடலிலும் மலைகளிலும் தோன்றுகிறது. கடல் , மலைகள் அவற்றைப் பாதுகாத்து வளர்க்கிறது. அதேபோல் தலைவன் என்பவன் ஒரு தாய் தந்தையருக்கு தானாகவே , அவனுடைய கர்ம பலன் காரணமாக இந்தப் பிறப்பில் அவர்களுக்குக் குழந்தையாகப் பிறந்து, அவர்கள் மூலம் பாதுகாப்பாக வளர்க்கப்படுகிறான். ரத்தினம் போல் தானாகவே தோன்றிய தலைவர்கள் பலர் உண்டு , அது அவர்களின் இயற்கைக் குணத்தில் ஒன்றாகக் கலந்து இருப்பது என்பது இப்பிறவியில் அவர்களுக்குக் கிடைக்கப்பெற்ற பெரும் பாக்கியம்.

4.ரத்தினத்தின் மேன்மை என்பது சுற்றுச்சூழலைப் பொறுத்து அதன் தரத்தின் தன்மை மெருகேற்ற அடையப்பெறுகிறது. அதேபோல் தலைவன் என்பவன் சுற்றுச்சூழல் தன்மையினால் அவனுடைய திறமையின் தரம் மெருகேற்ற அடையப் பெறுகிறது. ( எம்பெருமான் அர்ச்சையாக எழுந்தருளியிருக்கும் திவ்ய தேசங்கள் சுற்றுச்சூழலைப் பொறுத்து மேன்மை, மெருகேற்ற ஏற்படுகிறது). இப்படியாக உருவாக்கப்பட்ட தலைவர்களை ஒவ்வொரு தேசத்திலும், நிறுவனங்களிலும் பார்க்கிறோம்.

5.ரத்தினங்கள் என்பது பலமுறை சுத்தம் செய்து பட்டறைகளில் தீட்டினால் அதன் ஒளிர்வுத் தன்மை என்பது நன்றாக வெளிப்படும். ரத்தினம் ஒளிர்வால் மேன்மைபெறும். அதேபோல் தலைவன் என்பவன் தொடர் பயிற்சியினால் திறமைகளை மெருகேற்றிக் கொண்டு தன் பணிகளைத் திறம்படச் செயல்படுத்தமுடியும்.அதன்மூலம் மேன்மை பெறுவான். (எம்பெருமானுக்கும் , திவ்ய தேசங்களும் பக்தர்களின் சம்பந்தம் மூலமே அவனுடைய ஒளிர்வு என்பது ஏற்படுகிறது)

ALSO READ:  தாம்பரம் - தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

6.ரத்தினமானது தன்னையுடையவனை மார்பு நெறிக்கப் பண்ணும். அதே போல் நல்ல தலைவனை அடைந்த தேசம், தேசத்து மக்களை மார்பு நெறிக்கப் பண்ணும். ரத்தினமானது தன்னையுடையவனைப் பலரும் புகழும் படியும், சமுதாய செல்வாக்கு மிகுந்த நபராகப் பண்ணும். தலைவன் என்பவன் அவனுடைய செயல்களினால் பலராலும் பாராட்டக்கூடியவனாகவும் , சமுதாய செல்வாக்கு மிகுந்தவனாகவும் விளங்குவன்.

7.ரத்தினமானது சேற்றில் புதைந்து கிடந்தால் அதன் ஒளிர்வுத் தன்மை உலகத்திற்குத் தெரிய வராது. சேற்றை நீக்கினால் ரத்தின ஒளிர்வு புலப்படும். தலைவன் என்பவன் தன்னுடைய மாசுக்குணத்தை அகற்றி, தான் வெளிப்படும்போது அவனுடைய திறமை முழுவதுமாக வெளிப்படும் .

8.ரத்தினம் என்பது அதன் ஒளிர்வினால் அனைவரையும் தன்பால் ஈர்க்கும் தன்மை கொண்ட பொருள். அதேபோல் தலைவனின் செயல்கள், குணங்கள் அவன்பால் ஈர்க்கும் படி அமைய வேண்டும்.

  1. ரத்தினமானது தன்னையிழந்தவனைக் கதறிக் கதறி அழச்செய்யும். புலம்பலை ஏற்படுத்தும். நல்ல தலைவனை இழக்கும் போது சமுதாயம் கதறிப் புலம்புவதைப் பார்க்கமுடிகிறது. இதுவே சிறந்த தலைவன் என்பதை வெளிப்படுத்தும் ( மக்கள் மனதில் நிற்கும் தலைவன்)
ALSO READ:  சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

“மாலே மணிவண்ணா” என்று ஆண்டாளும் , “மருத்துவனாய் நின்ற மாமணிவண்ணா” என்று அவளுடைய திருத்தகப்பனார் பெரியாழ்வார் வாக்குகளின் படி எம்பெருமான் எல்லோருக்கும் பெரும் தலைவனாக நின்று, இயற்கையின் மூலம் சிறந்த குணங்களை ” தலைவன்” கற்றுக்கொள்ளும் படி உணர்த்திய வண்ணம் இருப்பது என்பது சனாதன தர்மத்தின் சிறப்பு. பாரத தேசத்தின் சிறப்பு

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!

பள்ளிகளில் மாணவர்கள் கயிறு கட்டி வரக்கூடாது என்று மாணவர்களுக்கு தடை விதிக்கும் தமிழக அரசு கிறிஸ்தவ பள்ளிகளில் நடைபெறும் இது போன்ற சட்டவிரோதமான ஜெபம் நடக்கும் நிகழ்ச்சிகளை அனுமதிக்க கூடாது.

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Topics

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

Entertainment News

Popular Categories