spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்கடையனுக்கும் வழிகாட்டிய குரு: சீரடி சாய்பாபா (பாகம் 5)

கடையனுக்கும் வழிகாட்டிய குரு: சீரடி சாய்பாபா (பாகம் 5)

- Advertisement -
shirdi sai baba 4

பஞ்சபூதங்களையும் கட்டுப்படுத்திய பாபா…. கிருஷ்ண பரமாத்மா கோகுலத்தில் வசித்தபோது கோபம் கொண்ட இந்திரனால் கடும் மழையும் காற்றும் வரவழைக்கப்பட்டது. அதனால் பெரிதும் கஷ்டப்பட்ட மக்கள் தஞ்சமடைய, கிருஷ்ண பகவான் கோவர்த்தன மலையைத் தூக்கி மக்கள் அனைவரையும் காத்தருளினார் .

இதே போன்றதொரு நிகழ்வு பாபாவின் வாழ்விலும் நிகழ்ந்தது. சீரடியை கடும் மழையும் சூறைக்காற்றும் சூழ்ந்துகொண்டது மக்கள் வீடுகளில் தங்க பயந்து பாபா தங்கியிருந்த பாழடைந்த மசூதிக்கு வந்து சரண் புகுந்தார்கள்.

பாபாவும் மக்களை அன்போடு அரவணைத்து மசூதியில் தங்க வைத்தார் .நேரம் ஆக ஆக சூறாவளியும் நிற்கவில்லை பலருக்கு மசூதியில் இருப்பதில் பயம் இல்லாவிட்டாலும், சிலர் பாபாவிடம் வந்து மழையை நிறுத்துமாறு வேண்டினார்கள். வேண்டுதலை பரி சீளித்த பாபா சிறிது நேரம் பொறுமையாக இங்குமங்கும் உலவிக் கொண்டிருந்தார்.

திடீரென ஆவேசம் வந்தராக வெளியே வந்து வானத்தை நோக்கி மழையே ஆவேசத்தை நிறுத்து இனியும் பொறுக்க முடியாது என மிக ஆவேசமாக கூறினார். பாபாவின் ஆவேசத்திற்கு பிறகு மழையும் மெல்ல மெல்ல குறைந்து சகஜ நிலையை அடைந்தது. மக்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்தவர்களாக தங்கள் தங்கள் இருப்பிடம் சென்றார்கள்.

பாபாவின் நெருங்கிய அவர்களில் ஒருவர் தா ஸ்கணு மகராஜ் இவரை மக்கள் தாஸ்கணு மகராஜ் என்றே அழைப்பார்கள் .இவர் இந்து மத நம்பிக்கைகளில் அதிக ஆர்வமும் நம்பிக்கை கொண்டவர் அவருக்கு இந்து சாஸ்திரங்கள் போற்றும் வகையில் பிர யாகையில் புனித நீராட வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.

பிரயாகையில் குளிப்பதால் முன் பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் கூட அழிந்துவிடும். தேவலோகத்திலிருந்து வந்த கங்கை நீரினால் பிரம்மா விஷ்ணு பாதத்தில் அபிஷேகம் செய்தார் என பல பெருமைகள் மிக்க நீரில் ஸ்நானம் செய்ய வேண்டும் என்ற ஆவல் தாஸ்கனுவிற்கு அளவிற்கு அதிகமாக எழுந்தது. இதனால் பாபாவிடம் பேசிக்கொண்டிருந்தபோது தனது ஆசையை வெளியிட்டார். தான் செல்ல அனுமதிக்க வேண்டும் என்றார்.

புன்னகை புரிந்த பாபா உனக்கு பிரயாகை செல்ல வேண்டுமா அல்லது புனித நதியான கங்கை யமுனை நீரில் குளிக்க வேண்டுமா என்று கேட் டார். காரணம் பிரயாகை செல்வதென்றால் நூற்றுக்கணக்கான மைல்கள் செல்ல வேண்டும். அவ்வளவு தூரம் சென்று வருவது கஷ்டமான காரியம் என்பதால் மீண்டும் கேட்டார். தாஸ்கணு நீ பிரயாகை செல்லவேண்டுமா புனித நீராடினால் போதுமா என்றால் பாபாவின் கேள்விகளில் ஏதாவது பொருள் இருக்கும் என்பதை உணர்ந்த தாஸ்கணு புனித நீராடுவதே ஆசை என்றார்.

உடனே பாபா அப்படியானால் இங்கே இப்போது புனித நீராடலாம் என்றார். பாபாவின் மீது எப்போதும் நம்பிக்கை கொண்டு பாபாவின் பாதம் பணிந்தார். கங்கையும் யமுனையும் பாபாவின் இரு கால் களிடையே ஊற்று போல் வெளிவந்தன. பார்த்துக் கொண்டிருந்த மக்கள் மிகுந்த ஆரவாரம் செய்தனர். மெய்மறந்து இரு கரங்களையும் கூப்பி பாதம் பணிந்தார் தாஸ்கணு மகராஜ்.

இந்திய தேசத்தில் கடைபிடிக்கப்படும் ஒவ்வொரு சாஸ்திரங்களும் விஞ்ஞான பூர்வமானவை கோவிலை வலம் வருவதும் மலை ஏறுவதும் தோப்புக்கரணம் போடுவது என ஒவ்வொரு முறையிலும் மருத்துவமும் மகத்துவமும் நிறைந்திருக்கும். வீடுகளிலும் கோவில்களிலும் முக்கிய இடங்களிலும் செய்யும் ஹோமங்கள் யாகங்கள் எல்லாம் விஞ்ஞானபூர்வமான வை என்றும் மருத்துவ ரீதியான என்றும் பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளன.

போபாலில் விஷவாயு கசிந்த போது அக்னிஹோத்ரம் செய்த வீட்டில் இருந்த அனைவரும் எவ்வித பாதிப்பும் இல்லாமல் இருந்தார்கள் என்பது உலகறிந்த செய்தி.

மசூதியில் தினமும் நெருப்பினை தேடவேண்டியிருந்தது. ஒருநாள் அடியவர்கள் பாபாவிடம் தினமும் நெருப்பை தேடவேண்டியுள்ளது. அதற்கு ஒரு நிரந்தர ஏற்பாடு செய்யக் கூடா தா என்றனர்.

புன்னகைத்த பாபா மசூதியின் ஒரு பகுதிக்கு சென்று அமர்ந்தார். ஏதோ முணுமுணுத்தவராய் தனது கைகளால் தரையில் தட்டினார் பூமியிலிருந்து நீரூற்று கிளம்புவது போல் நெருப்பு கொழுந்துவிட்டு வந்தது. மற்றவர்களை பார்த்து மீண்டும் புன்னகைத்த பாபா இது எனக்காக ஏற்படுத்தப்பட்டதல்ல மிகப் புனிதமான செயலுக்காகவும் மக்களின் துயர் துடைப்பதற்காகவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கே எரியும் நெருப்பு அணையாமல் பாதுகாத்து வாருங்கள் இதில் கிடைக்கும் உதி சாம்பலானது சர்வ சுகங்களை யும் கொடுக்க வல்லது என உறுதியான குரலில் விளங்கினார் .

அன்று ஏற்படுத்திய நெருப்பு இன்றும் அணையாமல் எரிந்து கொண்டு வருகிறது பாபா வினால் ஏற்படுத்தப்பட்ட நெருப்புக் குண்டத்திற்கு துனிஎன்று பெயர் துனியில் இருந்து கிடைக்கும் உதி லட்சக்கணக்கான மக்களின் துயரை துடைத்து வருகிறது.பாபா மசூதியில் இருக்கும் போது தனக்கு வரும் தொகையில் ஒரு பகுதியை துனிக்குக்கு விறகு மற்றும் இதர பொருட்கள் வாங்கினார்

தாமே தினந்தோறும் துனி அருகில் அமர்ந்து விறகுகளையும் முழு தேங்காய்களையும் போடுவார். துனி சீரடியில் மிகப் புனிதமாக வணங்கப்பட்டு வருகிறது

ஒருமுறை மக்கள் நிறைய கூடியிருந்தார்கள் பாபா அருகில் அமர்ந்திருந்தார். திடீரென துனியில் யில் இருந்து நெருப்பானது மிக உயரமாக எரியத்துவங்கியது சிறிது நேரத்தில் நெருப்பானது விட்டம் வரை எழுந்தது மக்கள் பயந்தார்கள். ஆனாலும் நெருப்பை அணைக்கும் எந்த முயற்சியும் எடுக்காமல் பாபாவிற்கு பயந்து திகைத்து நின்றார்கள்.

எதையோ உணர்ந்தவராய் விழித்துப் பார்த்த பாபா தனது கையில் இருந்த குச்சியை தரையில் ஓங்கி அடித்து கீழே இறங்கி கீழே இறங்கு என்றார். ஒவ்வொரு முறை சொல்லும் போதும் நெருப்பு கொஞ்சம் கொஞ்சமாக தனது பழைய நிலையை அடைந்தது 1910 ஆம் ஆண்டு தீபாவளி சமயத்தில் பாபா சாய்வாக அமர்ந்து வேண்டிய வி ற குகளையும் பொருள்களையும் துனியில் போட்டுக் கொண்டிருந்தார்.

தொடர்ந்து கொண்டிருந்த பாபா திடீரென தனது கையை நெருப்புக்குள் விட்டார். அருகில் இருந்தவர்கள் மிகக் கஷ்டப்பட்டு கையை வெளியே எடுத்தார்கள். கை முழுவதும் கருகி இருந்தது. பாபாவின் கறுகிப் போயிருந்தது

பாபாவை பார்த்து கண்ணீர்விட்ட பக்தர்கள் ஏன் இப்படி செய்தார் என தவித்துக் கொண்டிருக்கும் போது சிறிது நேரத்தில் பாபாவை அதன் காரணத்தை விளக்கினார்

ஊரின் எல்லையில் இருந்த பட்டறையில் ஒரு பெண்மணி வேலை செய்து கொண்டிருந்தாள். திடீரென கணவர் அழைக்கவே குழந்தையை மறந்து சென்ற விட்டாள். குழந்தை நெருப்பில் விழுந்து விட்டது

குழந்தையை காப்பாற்றி நான் ஏற்றுக்கொள்கிறேன் என்றார் மேலும் குழந்தை காப்பாற்றப்பட்டது.

குழந்தையின் காயத்தை நான் ஏற்றுக் கொண்டு விட்டேன். என்றார் மகிழ்ச்சியாக, எனது கைகள் வெந்து போனது பற்றி நான் கவலைப்படவில்லை குழந்தை காப்பாற்றப்பட்டது எண்ணி நான் மகிழ்கிறேன் என்றார்.

பாபாவின் கைகள் நெருப்பினால் காயமடைந்தது எண்ணி வருந்திய பக்தர்களில் நானாசாகிப் மும்பையைச் சேர்ந்த பிரபல மருத்துவர் பரமானந்த அழைத்து வந்து மருத்துவம் பார்க்க ஏற்பாடு செய்தார் . ஆனால் மருத்துவரின் உதவி தனக்கு தேவை இல்லை என்று மறுத்துவிட்டார்.

அதற்கு பதிலாக பாபுஜி யை தனது சிகிச்சை செய்ய அனுமதித்தார் பலரும் வெறுக்கும் அருவருக்கத்தக்க நோய் கொண்ட வர் பாபுஜி. பாபுஜி தினமும் பாபா லெண்டி தோட்டம் செல்லும்போது குடைபிடித்து செல்வார்.

பின்னர் மசூதியில் அமர்ந்தவுடன் பாபாவின் கரங்களை நீவிவிடுவார் பின்னர் பாபா சொல்லும் பச் சிலைகளை வைத்து கட்டிவிடுவார் சிகிச்சையானது ஆண்டுகளுக்கு நீடித்தது ஆனாலும் பாபாவின் அன்றாடச் செயல்கள் எதுவும் நடைபெறவில்லை

பாகுபலியின் சிகிச்சையை நிறுத்தி நல்ல மருத்துவர் மூலம் முயற்சித்தார்கள் ஆனால் கடைசிவரை கோரிக்கையை ஏற்கவில்லை. முன்ஜென்மத்தில் செய்த பாவங்களை தினந்தோறும் தன்னை தொட்டு சிகிச்சை செய்வது மூலம் தீர்த்தார் என்று மக்கள் பேசிக் கொண்டார்கள் பாபா ஐம்பூதங்களால் ஆன மனிதரையும் ஐம்பூதங்களையும் ஜெயித்தவர் என்பதை உணரும் அனைவருக்கும் ஜயம் உண்டு.

இறைவன் இறங்கி வருவது தன்னுடைய பெருமைகளை பூவுலகத்தில் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக மட்டுமல்ல பற்பல நோக்கங்களைக் கொண்டு இறைவன் இறங்கி வருகிறான் இறைவன் தாயாகவும் தந்தையாகவும் இருந்து மக்களை நல்வழிப்படுத்தும் சில நேரங்களில் தாயிற் சிறந்த கோவிலுமில்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை குருவே உயர்வானவர் என்பது போன்ற மொழிகளை மக்களுக்கு மீட்கும் பொருட்டு பல லீலைகளையும் நிகழ்த்துகிறார்

குரு-சிஷ்ய முறை நி லைக்க வேண்டும் என்பதற்காக பத்ரிகாஸ்ரமத்தில் ஸ்ரீமன் நாராயணனே குருவாகவும் சிஷ்யனாகவும் உருக்கொண்டு ஓம் நமோ நாராயணாய நம எனும் மூல மந்திரத்தை உபதேசிக்கிறார் குருவாக ஏற்றுக் கொள்பவர் அனைத்தும் அறிந்தவராக இருக்க வேண்டும் என்பதில்லை நமக்கு வேண்டிய ஒன்றே நாம் அறிந்து கொண்டாலும் அவருக்கு மரியாதை தரவேண்டும் என்பதை குருவாகிய தத்தாத்ரேயர் அவதாரம் நன்கு விளக்குகிறது.

ஒருவரை குருவாக ஏற்றுக் கொண்டுவிட்டால் அவரைப் பணிந்து நாம் இருக்க வேண்டும் என்பதை பல புராண நிகழ்வுகள் மூலம் அறியலாம். பிறவியிலேயே ஞானம் பெற்றவராக இருந்த போதும் அவன் முகத்தில் நடந்துகொண்டான் ஸ்ரீராமன் இறைவனாய் இருந்தபோதும் விஸ்வாமித்திரரிடம் பணிவுடன் நடந்து கல்விகற்றார் கிருஷ்ண பரமாத்மா. தன்மையோடு பல லீலைகள் புரிந்த போதும் தானாகவே நடந்து கொண்டார் பகவத் ராமானுஜர் பெறுவதற்காக முன்பும் பின்பும் பகவத் ராமானுஜர் வருவதற்கு முன்பும் பின்பும் குருவாக ஏற்றுக் கொண்டவர்கள் தாசனாய் நடந்துகொண்டார்.

காஞ்சிபுரத்தில் யாதவப் பிரகாசர் என்ற குரு விடம் பாடம் கற்றார் அப்போது ஞானம் இல்லாத போதும் அவரிடத்தில் பணிவுடன் நடந்து கொண்டால் பின்னர் பல ஆண்டுகளுக்குப் பின் அவரே சீடனாக வந்தபோது அவரை மரியாதையுடன் நடத்தினார்.

ஸ்ரீரங்கத்தில் இருந்த போது ஆளவந்தாரின் முக்கிய சீடர்கள் நான்கு பேரிடமும் பணிவும் அன்பும் கொண்டு நடந்து கொண்டதோடு அவர்களுக்கு அடிமை போல் பல பணிகளையும் செய்தார். ராமானுஜரின் சிஷ்யர்களும் குருவைப்போலவே ஆசாரியனிடத்தில் காத்திருந்தார்கள். வேதத்தில் வந்தவர்கள் வழிவந்தவர்கள் போல் தானும் அவ்வாறு நடந்து கொண்டு மக்களுக்கு நல்வழி காட்டினார்

சாய் பாபா எல்லாத்துறையிலும் அனுபவமும் ஆற்றலும் நிரம்பியதாய் இருந்தபோதும் சில இடங்களில் தன் ஆற்றலை குறைத்துக் கொண்டால் அதற்கு காரணம் அதில் இருந்து சில மாற்றங்களை உருவாக்கிக்கொள்ள தான் என்பது அவரை நன்கு அறிந்தவர்களுக்கு மட்டுமே புரிந்திருந்தது

சிறந்த வீரர் ஒருவர் வசித்து வந்தார் அவரின் பெயர் மோகினி தாம் போலி என்பதாகும்! அவருக்கும் சாயிபகவானுக்கும் பல நேரங்களில் விவாதங்கள் நடைபெறும்

ஒருநாள் விவாதத்தில் போலி அவர்கள் பாபாவை தம்மோடு வாதம் செய்ய வருமாறு அழைத்தார் தம்மோடு போட்டியிட வருமாறு அழைத்த தோழனிடம் கோபம் கொள்ளாமல், விளையாட்டு வீரர்களை போன்ற அழகான கச்சிதமான ஆடைகளை அணிந்து வந்தார்.

கிருஷ்ணனை போன்று சாய்பாபா ஒரு நிலைக்குப் பின் தன்னை மாற்றிக்கொண்டு தோற்றுவிட்டார். பார்த்துக் கொண்டிருந்த மக்கள் ஆச்சரியமடைந்தனர் ஆனால் பாபா மட்டும் மனதில் நினைத்து கொண்டார். மாற்றத்திற்கான மாற்றம் இது என்றார்.

அதன் பின்னர் உடை உடுத்துவதில் பெரிய மாற்றத்தை செய்துகொண்டார் மக்களின் மனங்களை படித்த பாபா தன் மேனி முழுவதையும் மறைக்கும் படியான நீண்ட அங்கி போன்ற ஆடைகளை அணிந்தார் தலையில் ஒரு சிறிய துணியை கட்டிக் கொண்டார்

நாளுக்கு நாள் தன்னை மாற்றிக்கொண்டார் சில நேரங்களில் கிழிந்த ஆடைகளை அணிந்தார். உருவாக்கிய இருப்பதற்கு பயன்படுத்தினார் ஆனாலும் மகிழ்ச்சியோடு காணப்பட்டார்

பலரும் பாபாவிடம் ஏன் இப்படி ராஜாதிராஜன் நீங்கள் ஏன் பிச்சை ஏற்றுக் கொள்கிறீர்கள் என்றனர். அதற்கு பாபா ஏழ்மை அரசுரிமையை விட அதிகம் சுகம் தருகிறது. இறைவனுக்கு மிக அருகில் இருக்கும் பாக்கியம் பெற்றவர்கள் என்று கூறி சிறப்பினை எடுத்துக் கூறி அதன்படி நடந்து காட்டினார்.

இவ்வூருக்கு நகரிலிருந்து ஜவஹர் அலி எனும் முகமதிய தனது அடியவர்களுடன் வந்து தங்கினார் அவர் குர்ஆன் முழுவதையும் நன்கு படித்தவர் விளக்கம் அளிப்பதிலும் வல்லவர். அதனால் அவர்கள் பலர் அறிவாற்றலைக் கண்டு வியந்து அவர் சொற்படி கேட்டனர் . தொழுகைக்கு முன் கட்டும் எனும் சுவர் கட்ட முயன்றார்

இது விஷயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், அவர் அருகில் இருந்த சீரடி கிராமத்திற்கு வந்து விட்டார். வந்தவர் சாய் பாபா தங்கியிருந்த மசூதியிலேயே தங்கும் பலர் வந்து அவரை பேட்டி கண்டு சென்றார்கள் ஒரு நாள் அவர் பாபாவை காட்டி மக்களிடம் இவன் என் சீடன் என்று அறிவித்தார்

பாபா மறுப்பேதும் சொல்லவில்லை ஆனால் மக்கள் மனம் பதைத்தனர் ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் சிஷ்யன் ஆகவே மாறிவிட்டார் குருவின் வழி நடக்க முடிவு செய்தார் அவர் சொற்படி கேட்டார் அவரின் தேவைகளை அறிந்து முன்னமே முடித்துவைத்தார். பணிவிடைகள் செய்யும்போது எந்தவித குறையும் இல்லாமல் செய்தார்

மொத்தத்தில் குருகுல வாசம் செய்யும் மாணவன் போல் தன்னை மாற்றிக்கொண்டார்.இருவரும் சென்று தங்கி விட்டார் அங்கு ஜவகர் அலி சாய் எனது சீடன் அறிவிக்கின்றார். அவ்வப்போது இருவரும் வந்து செல்வார்கள்.

வரும்போதெல்லாம் மக்கள் பலர் அங்கேயே தங்கி விடுங்கள் நீங்கள் இல்லாமல் சீரழிந்துவிட்டது எங்களையும் வெறுமை சூழ்ந்து விட்டது எனக் கூறினார் ஆனால் பாபாவும் அவர்களின் விருப்பப்படி நடப்பேன் அதில் மாற்றமில்லை என கூறிவிட்டார். பலமுறை கேட்டும் பாபா மறுத்துவிட்டதால் பலரும் சேர்ந்து ரஹதாவிற்கு போய் கேட்பது என முடிவு செய்து அதன்படி கூட்டமாக கிளம்பி ஊரை அடைந்தார்கள்

பார்த்து பரவசமடைந்த சீரடி மக்கள் தங்களோடு சீரடிக்கு வருமாறு அழைத்தார்கள். அதற்கு மறுமொழி கூறிய பாபா எனது குரு மிகுந்த கோபம் கொண்டவர் அவர் உங்களைப் பார்த்தால் மிகுந்த கோபம் கொண்டு விடுவார் உடனே நீங்கள் ஊருக்கு போய் விடுங்கள் என்றார்.

ஆனால் மக்கள் நகரவே இல்லை சற்று நேரத்தில் ஜவஹர் அலி வந்துவிட்டார் வந்தவர் மிகவும் கோபம் கொண்டவராய் என்னை விட்டு என் என் சீடனை பிரிக்க பார்க்கிறீர்கள் உடனே செல்லுங்கள் என்றார்.

பல விவாதங்களுக்கு பிறகு இருவரும் சீரடியில் தங்கட்டும் என்று முடிவானது அதன்படி வந்து தங்கினார். விருந்து வைக்க வேண்டும் என்ற தீவிர எண்ணம் கொண்ட பலரும் கூடி ஒரு முடிவு செய்தார்கள்

பாபா வருவதற்கு பல ஆண்டுகளுக்கு முன் வந்த மகான் பாபாவை நன்கு அறிந்தவர் என்பதால் அவர் மூலம் இப்பிரச்னைக்கு தீர்வு காண நினைத்தார்கள். அவருடன் விவாதம் செய்ய வேண்டும் அவர்கள் தோற்றுவிட்டால் பாபாவை விட்டுப் போய்விட வேண்டும் என்ற நிபந்தனையுடன் விவாதத்திற்கு ஏற்பாடு செய்தார்கள் .அந்த வாதத்தில் தோற்றவர் சீரடி யை விட்டு ஓடிவிட்டார்.

யாதவப்பிரகாசர் பல ஆண்டுகள் கழித்து ராமானுஜரை அடைந்து தன்னை சீடனாக்கிக் கொண்டது போல் பல ஆண்டுகள் கழிந்த பின் வந்து பணிந்து நீங்களே குரு எனது மமதையால் அவமரியாதை செய்து விட்டேன்.

சீடன் எப்படி பணிவிடை செய்ய வேண்டும் என்ற பாடம் என்னை முன்னிட்டு நீங்கள் நடத்திய நாடகம் என்பதை புரிந்து கொண்டேன் என்றார். போதிப்பது மட்டும் செய்யவில்லை நடந்தும் காட்டினார் என்பதை உணர்ந்து நாமும் நடப்போம்.

  • எழுத்து: குச்சனூர் தி. கோவிந்தராஜன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe