“ஒனக்கு மஹா வாயாப் போயிடுத்து! நீயும் பெரியவா தான்” (ரா.கணபதியின் அனுபவம்) தொகுத்தவர்-ரா. கணபதி. தட்டச்சு-வரகூரான் நாராயணன். (இது வித்யாஸமான கட்டுரை) ‘பெரியவாள்’ என்கிறோமே, அதை மட்டும் விட்டு வைத்தாரா? மனப் புண்ணை ஆற்றத் தமக்கு ஏது சக்தி? தாமே நன்றாகக் காயப்படுத்தும் பெரிய ‘வாள்’ அல்லவா என்று கூறிச் சிரித்தே புண்ணை ஆற்றினார். சட்டென்று பகவத்பாதாள் வாக்கு நினைவு வந்தது. “விவேக விஜ்ஞான மஹா(அ)ஸி” என்று அவர் கூறியிருப்பது. ‘மஹா அஸி’ என்றால் ‘பெரியவாள்’ விவேகத்தில் பழுத்த அநுபவ ஞானம் என்ற பெரிய வாளினாலேயே அநாதியான மாயா பந்தத்தை வெட்டியெறிய முடியும் என்கிறார். எனவே மாயையைக் களையவே வந்த விவேக விஜ்ஞான விக்கிரஹமானஸ்ரீ சரணரைப் ‘பெரிய வாள்’ என்பதும் சரிதானே?. இதனை நான் அவரிடம் நிவேதிக்க, குரூபிரான் குழந்தையாக குதூஹலித்தார். “ஞானாஸி” (ஞானவாள்) என்று கண்ணனும் மொழிந்திருப்பதை எடுத்துக் காட்டினார். கடோபநிஷத்தில் வாள்முனை நடையாகவே ஞான ஸாதனையைக்கூறி, குருவை அடைந்தே ஸாதனையில் ஸித்திகாணப்பணித்திருப்பதையும் விண்ணப்பத்தேன். அவ்வாறு வாள்முனையையும் மழுங்கச் செய்கிற குரு அதைவிடப்பெரிய வாளா’கத்தான் இருக்கவேண்டும் என்று கூற, மிகவும் ரஸித்தார். “குருன்னா ஹிம்ஸை ஸ்வரூபம்னு ரூபிச்சுட்டே” என்று விசித்ர வியாக்யானமும் செய்து சிரித்தார்! ‘பெரியவா’ என்றுதானே பேச்சு வழக்கில் சொல்கிறோம்? காய்,பாய்,வாய் ஆகிய வார்த்தைகளைப் பேச்சில் கா,பா, வா, என்றே சொல்வதை அவர் குறிப்பிட்டு, “வா(ய்) மூடாம ஓயாமப் பேசிண்டிருக்கேனோல்லியோ? அதுதான் பெரிய வா” என்று சிரித்தார். “மஹா வாக்கியம் (வேதத்தில் வரும் ஜீவ பிரம்ம ஐக்கிய வாக்கியம்) உபதேசிக்கிறது. மஹா வாயாகத்தானே இருக்கவேண்டும்” என்றேன். ஏதோ ஒரு துணிச்சலில் இதுபோலப் பல சமயங்களில் சொல்லியிருக்கேன். “ஒனக்கு மஹா வாயாப் போயிடுத்து! நீயும் பெரியவா தான்” என்று அத் தன்னிகரில்லாப் பெரியவர் சிரிக்க,இச்சிறியேனும் அதில் கலந்து கொண்டேன்
“ஒனக்கு மஹா வாயாப் போயிடுத்து! நீயும் பெரியவா தான்”
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari
Popular Categories