“நன்றி சொன்ன மாநுஷ தெய்வம்” தொகுத்தவர்-ரா. கணபதி. தட்டச்சு-வரகூரான் நாராயணன்
“பெரியவா சொல்கிறார்- நான் ஸ்வாமிகளாய் ஒரு வருஷம் முடியற ஸமயத்திலேயே ஜம்புகேச்வரம் கும்பாபிஷேகம்
போக வேண்டி வந்ததுலே, ஜம்புநாதர் பக்தகோடிகள்
கிட்டேருந்து ஸம்பாதிச்சுண்டது மட்டுமில்லாம
நம்ம சந்திரமௌளீச்வரரும் நன்னா சம்பாதிச்சுண்டார். “அப்புறம் அந்த வருஷ சாதுர்மாஸ்யம் நன்னா நடத்திண்டு தஞ்சாவூர் வழியா கும்பகோணம்
திரும்பறச்சே, தஞ்சாவூர் பாய் ஸாஹிப்கள் (ராணிகள்)
ரெண்டு பேரும் ஒரு மாஸம் தங்க வெச்சு, வேணது
செஞ்சதோட, நெறயவும் குடுத்தனுப்பினா.
“அதுக்கப்பறம் மாமாங்கம் வந்துடுத்து. (1909ம் வருஷத்திய மஹாமகம்) அதுல சிவன்வாள்
லக்ஷ பிராம்மண போஜனம்-னு ஆரம்பிச்சது.
அவரோட அந்த மனஸு விசேஷத்துல ப்ராம்மணாள்,
அப்ராம்மணாள்னு பல லக்ஷக்கணக்கில் சாப்பிட்டவிட்டும்
மூட்டை மூட்டையா,அம்பாரம்,அம்பாரமா ஸாமான்கள்
மிஞ்சிடுத்து. அத்தனையையும் அவர் மடத்துக்கே சேத்துட்டார்.
இப்படி மடத்துக்கு ஏறக்கொறைய ஒரு வருஷத்துக்கு
ஸம்ருத்தியா ஆஹாரம் போட்டுட்டார்.! குடிபடை கூட,
‘துண்ண வவுத்தெ முன்னே வெச்சுப்பேசு’ன்னு சொல்றதுண்டு.
அப்படி எங்களுக்கு ச்ரம தசையிலே போட்டு,’நன்றிக் கடன்’னு
எழுதறேளே, அந்த மாதிரி எந்நாளும் பட்டிருக்கும்படியா
அந்தப் பெரியவர் (சிவன்வாள்) உபகரிச்சிருக்கார்.
இப்படிக் கூறியவர்தாம் தொடர்ந்து, “மடத்துச் சார்பிலே அவர் மாமாங்க ஸமாராதனை பண்ணினதாத்தான் லோகத்துக்குத் தெரிவிச்சது.
யதார்தத்திலே, மடத்துச் சார்பிலே இல்லே;
கண்ணுக்குத் தெரியாத சந்த்ரமௌளீச்வரரோட ரக்ஷை தவிர
மடத்துக்கே சார்பில்லையோன்னு சரிஞ்சு போயிருந்த அந்த
ஸமயத்துலே அந்தப் புண்யவான்தான் அந்த மாமாங்க
அன்னதானத்தாலே மடத்தையே தூக்கி நிறுத்தினார்னு
சொல்லணும்” என்றார். அடியாருலகனைத்தும் பாலிக்கும் தெய்வகுரு மாநுஷமாகித்
தம் மடத்தையே பாலித்ததாக வேறொருவரிடம் கொண்டிருந்த
நன்றிதான் எத்தனை அழகு? மேலே அவர் பிரஸாதமாக நாம்
உண்டோமே,நிறைய உணவு,அதை ஜீரணித்து ரத்தத்தில்
ஒட்டவைக்கும் வெற்றிலையன்றோ இந்த உணர்வு?