May 8, 2021, 9:28 am Saturday
More

  பிரதமர் மோடிக்கு… தேவேந்திரகுல வேளாளர் சார்பில் ‘பாராட்டு’!

  டாக்டர் கிருஷ்ணசாமியின் மகன் ஷியாம் கிருஷ்ணசாமி கலந்து கொண்டு பட்டியல் இனத்தில் வெளியேறுவது குறித்து

  krishnasami-dr
  krishnasami-dr

  இராஜபாளையம் ஜவகர் மைதானத்தில் தமிழக வளர்ச்சி அரசியல் மாநாடு புதிய தமிழகம் கட்சி சார்பில் நடைபெற்றது, பாரத பிரதமர் மோடி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு

  விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஜவகர் மைதானத்தில் புதிய தமிழகம் கட்சி சார்பில் தமிழக வளர்ச்சி அரசியல் மாவட்ட மாநாடு மாவட்ட செயலாளர் ராமராஜ் தலைமையில் நடைபெற்றது

  இந்த மாநாட்டில் டாக்டர் கிருஷ்ணசாமியின் மகன் ஷியாம் கிருஷ்ணசாமி கலந்து கொண்டு பட்டியல் இனத்தில் வெளியேறுவது குறித்து மாற்றுக் கருத்து உடையவர்கள் சிந்திக்க வேண்டும் என பேசினார்

  மேலும் இந்திய நாட்டின் பிரதமர் ஒரு சமுதாயத்தைப் பற்றியும் சமுதாயம் எதற்காக போராடுகிறது என்பது குறித்தும் மிகத் தெளிவாக இன்று சென்னையில் பேசியுள்ளார் நாம் நம் சமுதாயம் தன்மானத்திற்க்காக போராடுகிறோம் அதற்கு இன்று தமிழக முதல்வரும் மோடி அவர்களும் நமக்கு ஒரு அங்கீகாரம் அளிக்கும் விதமாக பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது என பேசினார்

  இதை தொடர்ந்து பேசிய டாக்டர் கிருஷ்ணசாமி இந்த சமுதாயம் தேவேந்திர குல சமுதாய இனிமேல் அழைக்கப்படுவது பெருமைக்குரியது அதற்காக நம் சமுதாய மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் பாடுபடவேண்டும் இனிமேல் மிகவும் கவனமாக கையாளவேண்டும் பல காலங்களில் நம்மை கலவரக்காரர்கள் என கூறினார்கள்

  அப்போது நமக்கு வளர்ச்சி இல்லை கலவரம் செய்ததால் தான் நாம் இந்த அளவுக்கு வளர முடிந்தது இப்போது அதற்கு அவசியமில்லை நாம் ரோட்டில் மறியல் செய்ய வேண்டிய அவசியமில்லை போராட வேண்டிய அவசியம் இல்லை நம்முடைய கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளது அதனடிப்படையில் தேவேந்திர வேளாளர்களின் அறிவிக்கப்படுவதற்கு மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது இது கடந்த 15 ஆண்டுகளாக போராடியதற்காக கிடைத்த வெற்றி

  இந்த வெற்றிக்கு வழிவகுத்தார் தமிழக முதல்வருக்கும் பாரத பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறினார் மேலும் இந்த சமுதாயம் பல நூற்றாண்டுகள் முன்பு மன்னர் ஆட்சி காலத்தில் ஆண்ட சமுதாயம் ஆனால் மன்னர் காலத்தில் நிலங்கள் அபகரிக்கப்பட்டு நிலங்களில் பண்ணைத் தொழிலாளர்கள் வேலை பார்க்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது அதற்கு பின்பு ஆங்கிலேயரும் இந்த இனத்திற்காக எந்த முயற்சியும் எடுக்காமல் இந்த இனத்தின் வரலாறு அறியாமல் செட்டில் காஸ்ட் என்ற பிரிவில் சேர்த்துவிட்டனர்

  தற்போது நாம் பட்டியில் பிரிவில் வெளிவர அனைத்து பணிகளும் செய்து போராடி வெற்றி நோக்கி செல்கிறோம்

  திமுக ஆட்சி காலத்தில் பள்ளன் பறையன் என்று அழைப்பதை பள்ளர் பறையர் என்று அழைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தபோது செவிசாய்க்கவில்லை திமுக அதற்கு பதிலாக அப்போதைய முதல்வராக இருந்த கலைஞர் ஆதிதிராவிடர் என அழைத்ததால் எந்த ஒரு பலனும் கிடைக்கவில்லை நாம் தேவேந்திரகுல வேளாளர் என அழைக்கப்பட வேண்டும் பட்டியலில் இருந்து வெளிவரவேண்டும் நமக்கு மற்ற சமுதாயத்தில் கிடைப்பதுபோல் 8 சதவீதமும் அல்லது 9 சதவீதம் முதல் 10 சதவீதம் கிடைத்தால் போதும்

  இந்த சமுதாயத்தை உடைய வரலாறு எங்கு ஆய்வு செய்தாலும் கீழடி அல்லது எங்கு ஆய்வு செய்தாலும் அந்த ஆய்வில் நாம் தான் முதலில் இருப்போம் நாம் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் இனத்திற்காக ஜாதியைச் சொல்லி மதமாற்றம் கூடாது மதம் மாறுவதை தவிர்க்க வேண்டும் இந்துக்கள் என்று ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் நாம் ஆதிகாலத்தில் இந்துக்களை வழிபட்டு தான் வந்தோம் அதையே தொடர்ந்து இந்துவாக இருக்க வேண்டும்

  நமது இன பெண்கள் அரசியலில் ஈடுபட உடன் இருக்க வேண்டும் உதாரணத்திற்கு சிறையில் நான்கு ஆண்டு காலம் இருந்து வெளியே வந்த பெண்மணி (சசிகலா )தனக்கு உடல் நாலகுறைவாக உள்ளது என ஓய்வெடுக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் தொடர்ந்து கட்சியை கைப்பற்ற வேண்டும்

  அரசியல் கால் பதிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு செயல்பட்டு வருகிறார் அதேபோல் நமது இன மக்களும் அரசியல் களத்திலும் செயல்பட வேண்டும் என பெண்களுக்கு அறிவுரை வழங்கினார்

  இந்த மாநாட்டில் கலந்து கொண்ட அனைவரும் இனிமேல் பச்சை சிவப்பு புதிய கட்சி கொடியை மட்டுமே கையில் பிடிக்கவேண்டும் நாளைக்கே வேறொரு கட்சியினர் 500 ரூபாயும் பிரியாணியும் கொடுப்பதாக கூறி உங்களை அழைத்தால் நீங்கள் செல்லக் கூடாது அப்படி சென்றால் தேவேந்திரகுல வேளாளரில் இருந்து நீக்கப்படுவார்கள்

  மேலும் நமது சமுதாயத்தினர் இனிமேல் மாற்று சமுதாயத்திடம் இணக்கமாக நடந்துகொள்ள வேண்டும் யாரிடமும் சண்டை போடுவதோ பிரச்சனை செய்வதோ இருக்கக்கூடாது நீங்கள் அமைதியாக இருந்து மற்றவர்களும் சண்டையிடாமல் இருக்க வேண்டும் என கூறினார்

  இந்த மாநாட்டில் கலந்து கொண்ட தொண்டர்கள் அனைவரும் கிராமந்தோறும் சென்று நமது சமுதாயத்திற்காகவும் சமுதாய கொடியையும் புதியதாக காட்சிக்காக பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும் என கேட்டுக் கொண்டார்

  கூட்டத்தில் இறுதியாக பேசிய டாக்டர் கிருஷ்ணசாமி நாம் தேவேந்திரகுல வேளாளர் என்று இன்றுமுதல் அழைக்கப்படும் வகையில் அனைவரும் கவனத்துடன் செயல்பட வேண்டும்

  இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பாரத பிரதமர் மோடி அமிர்ஷா தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அனைவரும் எழுந்து நின்று கைதட்டி நன்றியை தெரிவிக்க வேண்டும் என கோரி அனைவரும் எழுந்து நின்று கைதட்டி தன்னுடைய நன்றியை தெரிவித்துக் கொண்டனர்

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,233FansLike
  0FollowersFollow
  19FollowersFollow
  74FollowersFollow
  1,163FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »