123 ஜோடிகளுக்கு இலவச திருமணம்! நடத்தி வைத்த முதல்வர், துணை முதல்வர்!

உள்ளூர் செய்திகள் கோவை சற்றுமுன்
marriage-2
marriage-2

கோவையில் 123 ஜோடிகளுக்கு இலவச திருமண விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு மாங்கல்யம் எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தனர்.

வரும் 24ம் தேதி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் கொண்டாடப்படவுள்ளது. ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி கோவை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஆண்டுதோறும் ஏழை பெண்களுக்கு இலவச திருமணங்கள் நடத்தி வைப்பது வழக்கம்.

இதையடுத்து கோவையில் 123 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்க முடிவான நிலையில், திருமணத்தில் பங்கேற்க தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட அனைத்து கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டது.

அதன்படி இந்த ஆண்டு கோவை பச்சாபாளையத்தில் இன்று 123 ஜோடிகளுக்கு இலவசமாக திருமணம் செய்து வைக்கப்பட்டது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு மாங்கல்யம் எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தனர்.

இதில் திருமண ஜோடிகளின் உறவினர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.திருமண ஜோடிகளுக்கு கட்டில், பீரோ, மெத்தை, சூட்கேஸ், கியாஸ் ஸ்டவ், சில்வர் குடம், குக்கர் உள்பட 73 வகையான சீர்வரிசை பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.