திருநெல்வேலியில் மாவட்ட கிராம தொழில் முனைவோர் அமைப்பும் ,அப்னா கிராம தொழில் முனைவோர் அமைப்புமற்றும் கெள ரிப்போர்ட்ஸ் இணைந்து நடத்திய (ஜிஎஸ்டி )சரக்கு மற்றும் சேவை வரி குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது திருநெல்வேலியில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்ற முகாமிற்கு மாவட்டம் முழுவதுமிருந்து ஏராளமான கிராம தொழில் முனைவோர்கள் கொண்டனர்

பயிற்சி குறித்த அறிமுக உரையினை பொதுசேவை மைய மண்டல இணை ஒருங்கிணைப்பாளர் அருள்செல்வன் வழங்கினார் , வணிக வரித்துறை துணை இயக்குனர் (பயிற்சி )லட்சுமி நாராயணன் கலந்துகொண்டு ஜிஎஸ்டி என்றால் என்ன? சரக்கு மற்றும் சேவை வரி மிக முக்கியமானது?ஜிஎஸ்டி எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது? இந்தியாவும் மற்றும் சராசரி மனிதனும் எவ்வாறு ஜிஎஸ்டி மூலமாக பயனடைகிறார்கள்? இந்தியாவில் ஜிஎஸ்டி குறித்து தொழில்முனைவோர் மத்தியில் பேசினார்

பின்னர் கெள ரிப்போர்ட்ஸ் மேலாளர் ராஜபாண்டியன் சரக்கு மற்றும் சேவை வரி ஏன், மாதம் தோறும் வரி தாக்கல் செய்வது மற்றும் ஜிஎஸ்டியினால் பொது மக்கள், வியாபாரிகளுக்கான பயன் குறித்த பயிற்சி வகுப்பு நடத்தினார், தொடர்ந்து கெள ரிப்போர்ட்ஸ் சுருளிகுமார் ,விக்னேஷ் ஆகியோர் செயல் விளக்க முறை பயிற்சி அளித்தனர் , பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயிற்சி பெற்றவர்களுக்கு பயிற்சிக்கான சான்றிதழ்களை திருநெல்வேலி மாவட்ட கிராம தொழில் முனைவோர் அமைப்பின் தலைவி திருமதி .தனலட்சுமி, மற்றும் அப்னா சுரேஷ் ஆகியோர் வழங்கினர்
முடிவில் பி.எம்.ஜி.தேசா மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் விக்னேஷ் நன்றி கூறினார்




