திருநெல்வேலி: நெல்லை மாவட்ட ஆட்சியருக்கு சில கேள்விகளை முன்வைத்துள்ளனர் நெல்லை வாழ் அன்பர்கள்.
நெல்லையப்பர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து, இயல்பாக நடக்கும் செயல்களையும் இல்லாததாக்கி இருக்கிறார் ஆட்சியர் என்று பொருமுகிறார்கள் பக்தர்கள். ஏற்கெனவே கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆலயப் பணிகள் நிறைவு பெறாமலேயே குடமுழுக்கு தேதி அறிவிக்கப் பட்டு விட்டது. கும்பாபிஷேக தேதியும் சர்ச்சைக்குரியதாக உள்ளது. இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் மேற்கொண்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து சில கேள்விகளை எழுப்பியுள்ளனர் அன்பர்கள்.
அந்தக் கேள்விகள்… அன்பிற்குரிய திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு அடியேனின் தாழ்மையான கேள்விகள்
1. நெல்லையப்பர் கும்பாபிஷேகத்திற்கு அறநிலையத்துறை சார்பில் வைக்கப்பட்ட பேனர்களுக்கு ரூ. 250/- வீதம் கட்டணம் வசூலித்துள்ளீர்கள். விளம்பரத்திற்கு உதவிய வங்கி மேலாளரை தொலைபேசியில் மிரட்டியுள்ளீர். தங்களின் வீரத்தை பாராட்டுகிறேன்.
2. தற்போது அனைத்து கட்சிகளும் தனிப்பட்ட நபர்களும் சேர்ந்து 500க்கும் மேல் பேனர் வைத்துள்ளனர் கட்டணம் வசூலித்துவிட்டீர்களா?
3. ஆன்மிக பணி செய்யும் தொண்டர்களை மிரட்டும் நீங்கள் அரசியல் வாதிகளை மிரட்டுவீர்கள்?
4. இனி வரும் காலங்களில் பிற மத நிகழ்ச்சியில் வைக்கும் பேனர்கள் மீதும் உங்களின் இதே வீரத்தை காட்டுவீர்களா?
5. பாபநாசம் லோபமுத்ரா சிலையை உடைத்த மதவெறியர்கள் மீது நடவடிக்கை எடுத்து விட்டீர்களா? சிலையை சரிசெய்து கொடுப்போம் என்ற வாக்குறுதியை நிறைவேற்றி விட்டீர்களா?
6. மணிமூர்தீஸ்வரம் உச்சிஷ்ட கணபதி கோவில் முன்பு கல்லறை தோட்டம் உங்கள் R.D.O மற்றும் காவல்துறை அதிகாரிகள் தலைமையில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. கிறிஸ்தவர்களின் கைகூலிகளாக மாவட்ட நிர்வாகம் மாறிவிட்டதாக மக்கள் சந்தேகிக்கிறார்கள். நீதி கிடைக்குமா?
7. விவசாயிகள் அறுவடை செய்யும் நேரத்தில் அணையில் உள்ள நீர் அனைத்தையும் திறந்து விட்டீர்கள். விவசாயிகள் கூட்டத்தில் காரணம் கேட்டதற்கு பாலம் வேலை செய்யவேண்டும் என்றீர்கள். மடையை அடைத்தால் போதும் என்ற விவசாயியின் கோரிக்கைக்கு எனக்கே யோசனை சொல்கிறாயா என கூறி வெளியே போ என அந்த ஏழை விவசாயியை மிரட்டியுள்ளீர்கள். ஸ்டெர்லைட் மற்றும் Cocacola கம்பெனிகளிடம் வாங்கிய காசுக்காக தான் அணை நீர் அனைத்தும் திறந்து விட்டதாக மக்கள் சந்தேகிக்கின்றனர். கோடையில் குடிநீர் பிரச்சினை குறித்து யோசித்தீர்களா?
8. சமீபத்தில் அம்பாசமுத்திரத்தில் ஒரு பள்ளி ஆண்டு விழாவில் 2:30 மணி நேரம் பிஷப்புடன் கலைநிகழ்ச்சிகளை கண்டு களித்தீர்கள் தவறில்லை. ஆனால் நடுப்பிள்ளையார்குளம் தேவேந்தர் இன மக்கள் காவல்துறையினர் நடவடிக்கைகளை கண்டு அஞ்சி தங்களை காப்பாற்றுமாறு மனு கொடுக்க வந்த போது இரவு 11 மணி ஆகிவிட்டது என்று காரணம் கூறி இரவு 2:30 மணி வரை நடு ரோட்டில் காக்க வைத்தீர்கள். உங்களை விளம்பர பிரியர் என்று மக்கள் பேசிக்கொள்கிறார்கள்.
இன்னும் ஏராளம் இருக்கலாம் மக்கள் மனதை புரிந்து கொண்டு உங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறோம். நீங்கள் சரியான முடிவுகள் எடுக்கும் பட்சத்தில் மக்களின் மனம் கவர்ந்த ஆட்சியராக இருப்பீர்கள். இல்லை என்றால் நெல்லை மாவட்ட மக்களின் மன உளைச்சலுக்கு காரணமான ஆட்சியராக இருப்பீர்கள்.
என்றும் உங்கள் நலன் விரும்பும்
அடியேன்… என்று ஒரு தரப்பு கேட்க…
இன்னொரு தரப்பு வேறுவிதமாக கோரிக்கைகளை எழுப்பியுள்ளது. அதில்,
நெல்லையில் கும்பாபிஷேத்திற்கு பொருட்காட்சி மைதானத்தில் அன்னதானம் போட காவல் துறை கலெக்டர் தடை ; அன்னதான சிவனடியார்களுக்கு சந்திப்பு காவல் துறை நிர்பந்தம்; இரவு 8மணிக்கு காவல்நிலையத்திற்கு வருமாறு மிரட்டல்
நீர் மோர் கொடுக்க தடை; அன்னதான விளம்பர போர்டு வைக்க கட்டண வசூல் ; சர்ச் அசன பண்டிகை விருந்து நடத்த தடை விதிக்க இயலுமா?
பள்ளிவாசல் நோன்பு கஞ்சி கொடுக்க தடை விதிக்க இயலுமா?
இந்துக்கள் அநாதைகளா ஏமாளிகளா ?
நாவுக்கரசர் பெருமான் பெயரால் நீர்மோர் அன்னதானம் தண்ணீர் பந்தல் அமைத்து சமயம் காத்த நாயன்மார் அப்பூதிஅடிகள் வளர்த்த மதம்; அன்று சமனர்கள் அடக்குமுறை இன்று அரசும் அதிகாரிகளும் அடக்குமுறை;
நன்கொடையாளர்களை வைத்து கும்பாபிஷேகம் நடத்தும், கும்பாபிஷேகத்திற்கு ஒருபைசா செலவழிக்காத தமிழக அரசு அறநிலைய துறை!
அதிகாரிகளை ஏவி அன்னதான போர்டு வைக்க கூட கட்டணம் வசூலிக்கிறது. முதலமைச்சர் EPS வந்த போது வைத்த போர்டுகளுக்கு எல்லாம் கட்டணம் வசூலித்தீர்களா ?
அன்னதானம் செய்ய தடுக்கிறது? இது தமிழகமா பாக்கிஸ்தானா?
இந்து சமுதாயமே தமிழக அரசு, காவல் துறை , மாவட்ட நிர்வாகத்தின் இந்து விரோத, பாரபட்சமான போக்கை எதிர்த்து குரல் கொடுப்போம்… என்கிறார் நெல்லை அன்பர் கா.குற்றாலநாதன்.






