
செங்கோட்டை ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் திருவாசகம் முற்றோதுதல் நிலவேம்பு கஷாயம் வழங்கல் நடைபெற்றது.
செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள அருள்மிகு நித்யகல்யாணி அம்மன் கோவில் முன்பு வைத்து செங்கோட்டை சாய் சித்த மருத்துமனை சார்பில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழச்சிக்கு பணிநிறைவு பெற்ற சித்த மருத்துவரும் சாய் சித்தமருத்துமனை நிறுவனருமான சித்தமருத்துவா் டாக்டர் கலா தலைமைதாங்கினார். கல்யாணி ஆடிட்டர்சங்கர், தங்கையா நகர்மன்ற உறுப்பினா் சரஸ்வதி ராஜகோபால், கோபாலகிருஷ்ணன், ஆகியோர் முன்னிலைவகித்தார் சமுதாய செயலாளா் ராம்நாத் அனைவரையும் வரவேற்று பேசினார்.
பின்னா் பொதுமக்கள் பக்தர்களுக்கு நிலவேம்பு கஷாயம் சாய் சித்த மருத்துவமனை பணியாளா்கள் வழங்கினா். அதனைத் தொடா்ந்து கோவில் வளாகத்தில் வைத்து திருவாசகி சிவபகவதி குழுவினா் திருவாசகம் முற்றோதுதல் மற்றும் அன்னதான பொதுவிருந்து நடந்தது.
முன்னதாக நித்யகல்யாணி அம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுகளுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை 6-30 மணிக்கு கோவில் வளாகத்தில் 108 திருவிளக்கு பூஜை நடந்தது. முதல் குத்துவிளக்கினை முத்துலெட்சுமிராமநாத் ஏற்றி துவக்கி வைத்தார் திருவிளக்கு பூஜை நடத்துனா்.
தவணைசெல்வி திருவிளக்கு பூஜையினை நடத்தினார். நிகழ்ச்சியில் செல்வி, தேவி, பழனியம்மாள், உஷா, இந்திரா, பேச்சியம்மாள், சிவனம்மாள், சிவபார்வதி, உத்ராதேவி, காளியம்மளா், ராஜேஸ்வரி, கல்யாணிஅம்மாள், காளியம்மாள் ஸ்ரீதேவி, புனிதா உள்பட பலா் கலந்து கொண்டனா். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.





