அரோஹரா கோஷம் முழங்க செந்தூரில் சூரசம்ஹார விழா கோலாகலம்: லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்!

tiruchendur3 - 2026

திருச்சீரலைவாய் என்று புராணங்களில் புகழப்படும் திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில், ஜெயந்திநாதர் சூரனை சம்ஹாரம் செய்யும் சூரசம்ஹார விழா கோலாகலமாக நடைபெற்றது. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற கோஷம் விண்ணதிர லட்சக்கணக்காக பக்தர்கள் திருச்செந்தூர் கடற்கரையில் குழுமி, ஜெயந்திநாதரை வழிபட்டனர்.

திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நிகழாண்டு சஷ்டி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான, சூரசம்ஹாரம் இன்று நடைபெற்றது.

இன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டது. அதிகாலை 1:30க்கு விஸ்வரூப தீபாராதனை நடைபெற்றது. 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை மற்றும் தொடர்ந்து கால பூஜைகள் நடைபெற்றன.

tiruchendur3 - 2026

பின்னர் ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளினார். பக்தர்கள் அவரை பரவசத்துடன் தரிசித்தனர்.

மாலை 4.30க்கு செந்தூர் கடற்கரையில் லட்சணக்கான பக்தர்கள் கூடியிருக்க, கஜமுகன், சிங்கமுகன், சூரபத்மன் என அடுத்தடுத்து வலம் வந்து போரிட்ட சூரனை சுவாமி ஜெயந்திநாதர் தன் அன்னை பார்வதியிடம் பெற்ற சக்தி வேலால் சம்ஹாரம் செய்தார்.

ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

சேவல் உருவத்தில் போரிட்ட சூரனை முருகப் பெருமான் மன்னித்து அவனைத் தன் கொடியில் ஏற்றி, சேவற்கொடியோன் எனப் பெயர் தாங்கினார். மாமரமாக மாறிய சூரனை ஆட்கொண்டார்.

tiruchendur - 2026

சூர சம்ஹாரத் திருவிழாவைக் காண கூடியிருந்த பக்தர்கள் “வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா” வெற்றி வேல் வீர வேல் என கோஷங்களை எழுப்பி, பெருமானை வழிபட்டனர்.

ஆறு நாள் தொடர்ந்து ஆலயத்திலும் தங்கள் இல்லங்களிலும் சஷ்டி விரதம் இருந்து வந்த பக்தர்கள், ஆறாவது நாளான இன்று சூர சம்ஹாரம் முடிந்த கையுடன் செந்தூர் கடற்கரையில் புனித நீராடி தங்கள் விரதத்தை முடித்துக் கொண்டனர்.

tiruchendur1 - 2026

சூரசம்ஹாரம் முடிந்த பின்னர் சந்தோஷ மண்டபத்தில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் அலங்காரமாகி தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமி-அம்பாள் கிரிப்பிரகாரம் வழியாக வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து கோவிலை சேர்கின்றனர்.

tiruchendur4 - 2026

7-ம் நாளான ஞாயிற்றுக்கிழமை நாளை இரவு 11 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது.

ALSO READ:  கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories