702104 untitled 2 - 2026

காஞ்சிபுரம் அருகே நடந்த துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி..

ஆலயங்கள்

காஞ்சிபுரம் ஓரிக்கை திரௌபதி அம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி பாரம்பரிய முறைப்படி இன்று நடைபெற்றது.

காஞ்சிபுரம் அருகே ஓரிக்கை கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற திரௌபதி அம்மன் ஆலயத்தில் அக்னி வசந்த தீமிதி விழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. அக்னி வசந்த தீமிதி விழாவின் ஒரு பகுதியாக  இன்று பீமன் – துரியோதனன் படுகள உற்சவம் நடைபெற்றது. உற்சவத்திற்காக பிரம்மாண்டமாக துரியோதனன் சிலை அமைத்து, கட்டைக்கூத்து கலைஞர்களால் பீமன் – துரியோதனன் போரிடும் போர்க்களக் காட்சி நடத்தப்பட்டது.

பீமன் – துரியோதனன் படுகள காட்சியை திராளனவர்கள்  தரிசனம் செய்து, திரொளபதி அம்மனை வழிபட்டுச் சென்றனர்.

702104 untitled 2 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.