
கிராமம் ஒன்றில் வசிக்கும் திருமணமான ஆண்கள் அனைவருக்கும் இரண்டு மனைவிகள் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் ராஜஸ்தான் மாநிலத்தின் பார்பர் மாவட்டத்தில் அமைந்துள்ளது தேரசர் என்ற கிராமம். அந்த கிராமத்தில் சுமார் 600 பேர் குடியிருந்து வருகின்றனர். பல ஆண்டுகளாக அவர்கள் அந்த பகுதியில்தான் வசித்து வருகின்றனர்.
அவர்களுக்குள் ஒரு வித்தியாசமான பழக்கம் இருக்கிறது. அதை அந்த கிராம மக்கள் அனைவரும் பின்பற்றி வருகின்றனர்.
அந்த கிராமத்தில் உள்ள திருமணமான ஆண்கள் அனைவருக்கும் இரண்டு மனைவிகள். இது அவர்கள் பின்பற்றும் சமயச் சடங்கு இல்லை; ஆனால், இந்த பகுதியில் வாழும் மக்களின் கலாச்சாரம் என்று கூறப்படுகிறது.
அப்பகுதியில் இஸ்லாமிய மக்களும் வாழ்ந்து வருகின்றனர். அவர்களும் இதே பழக்கத்தைப் பின்பற்றுகின்றனர்.
அந்த ஊரில் வாழும் ஆண்கள் திருமணம் செய்ய விரும்பினால் முதல் மனைவியை திருமணம் செய்த பிறகு கட்டாயம் இரண்டாவது மனைவியையும் திருமணம் செய்ய வேண்டுமாம். முதல் மனைவிக்கு குழந்தைகள் பிறக்காது எனக் கூறப்படுகிறது.
அதனால் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் யாரும் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு அவர் மூலமே குழந்தையை பெற்றுக்கொள்கின்றனர்.
பலர் தனது முதல் மனைவியின் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள முயற்சி செய்தாலும் அது தோல்வியிலேயே முடிந்தது என கூறி கிராமவாசிகள் வியக்க வைக்கிறார்கள்.!