
மதுரையில் மல்லிகை பூ ஏற்றுமதி மையம் அமைக்க மத்திய அரசு விரைவில் நடவடிக்கை மத்திய அமைச்சர் பியுஸ் கோயல்
விருதுநகர் நாடாளு மன்ற உறுப்பினர் மாணிக் தாகூர் தகவல்!
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே திருநகரில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக் தாகூர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:
மதுரை மல்லியை பற்றிய ஒரு முக்கியமான செய்தி கடந்த பாராளுமன்ற கூட்டத் தொடரிலேயே அக்டோபர் 15 மற்றும் டிசம்பர் 15ஆம் தேதி பாராளுமன்றத்தில் ஜீரோ அவர் என்று சொல்வார்களே அந்த கேள்வி நேரத்தில் நான் கேள்வி எழுப்பியிருந்த மிக முக்கியமான விஷயம் மல்லிகை.
மதுரை மல்லியை பற்றி மதுரை மல்லிகை எக்ஸ்போர்ட் ஏற்றுமதி மையம் அமைக்க வேண்டும்.
மதுரை மல்லிகையை உலக அளவில் கொண்டு செல்வதற்கு அதற்கான திட்டங்களை மத்திய அரசு வகுக்க வேண்டும் என்று பாராளுமன்றத்திலேயே எழுப்பி இருந்தேன் .அதற்கு மத்திய வர்த்தகம் மற்றும் நுகர்பொருள் அமைச்சர் பியூஸ் கோயல் அவர்களுடைய கடிதம் வந்திருக்கிறது.
அந்த கடிதத்தில் பியூஸ் கோயல் சொல்லியிருப்பது என்னவென்றால் திருப்பரங்குன்றம்,திருமங்கலம் பகுதியில் (எக்ஸ்போர்ட் ஜாஸ்மின் ) மல்லிகை மலர் பொருட்கள் ஏற்றுமதி மையம் அமைப்பதற்கு மத்திய அரசு அதற்கான பணிகளை தொடங்க இருப்பதாகவும் . மல்லிகை உற்பத்தியாகும் மாவட்டங்களில் ஏற்றுமதி மையங்கள் திட்டத்தை விரைவில் ஆரம்பிப்பதாகவும்
அதிலே மதுரை மல்லிகையை மத்திய அரசு வெளி மார்க்கெட்டிலும் ஏற்றுமதி செய்வதற்காகவும் மத்திய அரசோடு சேர்ந்து மாநிலஅரசு திட்டம் வகுக்கும் என்பதையும் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்திருக்கிறார்.
அதைப்போல Apeda வேளாண் மற்றும் உணவு உற்பத்தி ஏற்றுமதி வளர்ச்சி மையம் மூலம் மல்லிகை ஏற்றுமதியை அதிகரிக்க குழு அமைக்கப்படும்.
இதன் மூலம் மல்லிகை பூக்கள் ஏற்றுமதி குறித்த வாய்ப்புகள் இடங்களை தேர்வு செய்து கண்காணித்து சர்வதேச அளவில் ஏற்றுமதி வளர்ச்சிக்கான பணிகள் துவக்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார்.
மல்லிகையை ஏற்றுமதி பற்றிய வருங்காலத்தில் என்னென்ன செய்ய வேண்டும் என்பதையும் அடுத்து அதில் விவசாயிகள் மற்றும் ஏற்றுமதியாளர்களையும் சேர்த்து திட்டத்தை தயாரிப்பதற்கும் மத்திய அரசு இசைந்து உள்ளது.
இந்த நல்ல செய்தி மதுரை மல்லியை பாதுகாக்கவும் அதை விவசாயிகள் விவசாயம் செய்கின்ற உற்பத்தி செய்கின்ற விவசாயிகள் வாழ்வில் நல்ல முன்னேற்றத்தைக் கொண்டு வருவதற்காக ஒரு முக்கியமான திட்டமாக நான் பார்க்கிறேன் இதற்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அவர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

தொடர்ந்து திட்டம் நல்லபடியா நடப்பதற்கு மாநில அரசும் மாநில அரசும் இந்த திட்டத்திற்கு மதுரை மாவட்டத்தில் உருவாக்குவதற்கு முழு ஒத்துழைப்பு தருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது .
முதல் தடவையாக மத்திய அரசினுடைய பார்வை மதுரை மல்லியில் மேல் பட்டிருக்கிறது இதுவரை வெறும் சட்டமன்றத்தில் ஒலித்துக் கொண்டிருந்த மதுரை மல்லியை பற்றி நான் பாராளுமன்றத்தில் பேசியதும் விளைவாக ஒரு குழு அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஒருங்கிணைந்த மத்திய அரசினுடைய திட்டம் உருவாகும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. மல்லிகை விவசாயத்தில் ஈடுபட்டிருக்கும் அதே நேரத்தில் ஏற்றுமதி தரத்திற்கு கொண்டு செல்வதற்காக மிக முக்கியமானதாக இருக்கும்.
மல்லிகை பூ விற்கnன ஒரு குவிக்குள் இந்த பொருட்களை ஏற்றுமதி செய்யலாம் என்பதற்காக ஒரு திட்டம் மத்திய அரசு கொண்டு வர போகிறது என்று பாரத பிரதமர் மோடி அவர்கள் கடந்த சுதந்திர தின விழாவில் இந்த மல்லிகை திட்டமாக இருக்கிறது.
மத்திய அரசு அறிவித்திருந்த திட்டத்தின் ஒரு பகுதியாக நாம் மல்லிகையை கொண்டு வந்திருக்கிறோம் என்பது மிக முக்கியமானது. இனி வரும் காலங்களில் மல்லிகை பூ விவசாய உற்பத்தி அதிகரிக்கவும், விவசாய பரப்பளவு அதிகரிக்கும்.
இதே போல், சிவகாசி பட்டாசு தொழிலில் ஈடுபட்டுவரும் உற்பத்தியாளர்கள் தொழிலாளர்கள் பாதிப்பிற்கான நாடாளுமன்றத்தில் இதற்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்துள்ளேன். வரும் காலங்களில் அவர்களுக்கான தொழில் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படும் என நம்புகிறேன்.
இதேபோல் அங்கு விபத்துகள் ஏற்பட்டு ஏற்படும் உயிர் பலி ஏற்படாமல் தடுக்க முதல் உதவி மையங்கள் அமைக்கப் பட்டுள்ளது. மேலும், வரும் காலங்களில் அதற்கான கூடுதல் மையங்கள் ஏற்பாடுகள் செய்து வருகிறது …. என்றார்.