December 5, 2025, 11:22 PM
26.6 C
Chennai

மதுரை… விபத்து.. மரணம்… க்ரைம்!

crime-beat
crime-beat

மதுரை டவுன்ஹஹால் ரோட்டில் நடந்து சென்ற முதியவர் மயங்கி விழுந்து மரணம்

மதுரை ஜன 17 டவுன்ஹால் ரோட்டில் நடந்து சென்ற முதியவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்..

அலங்காநல்லூர் புது பட்டியை சேர்ந்தவர் ஹரிஹரன் 64 .இவர் சொந்த வேலையாக மதுரைக்கு வந்திருந்தார் .டவுன்ஹால் ரோட்டில் நடந்து சென்ற போது திடீரென்று மயக்கமடைந்து கீழே விழுந்து பலியானார் இவரது சாவு குறித்து மகன் பாலமுருகன் கொடுத்த புகாரின் பேரில் திடீர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பேக்கரி உரிமையாளரிடம் 72,000 ஒரு பவுன் நகை திருட்டு வியாபாரம் செய்தபோது கைவரிசை

மதுரை ஜன 17: ஆரப்பாளையத்தில் பேக்கரியின் உரிமையாளர் வியாபாரம் செய்து கொண்டிருந்தபோதுரூபாய் 72,000 மற்றும் ஒரு பவுன் நகையை மர்ம ஆசாமி திருடியது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஆரப்பாளையம் டி.டி. ரோடு வை சேர்ந்தவர் சின்னம்மாள் சின்னசாமி 66. இவர் அதே முகவரியில் பேக்கரி நடத்தி வருகிறார். நேற்று மதயம்பேக்கரியில் வியாபாரம் செய்து கொண்டிருந்த போது தனக்கு சொந்தமான மணிபர்சில் ரூபாய் 71650 மற்றும்ஒரு பவுன் நகையையும் வைத்துவிட்டு வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.

அதை முடித்துவிட்டு பார்த்தபோது அந்த மணி பர்சை காணவில்லை அதில் வைத்திருந்த பணமும் நகையும் திருடு போய்விட்டது .இந்த சம்பவம் தொடர்பாக சின்னம்மாள் சின்னசாமி கரிமேடு போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு ஆசாமியை தேடி வருகின்றனர்.

மதுரை அருகே மாடிப் படி ஏறிய கர்ப்பிணி பெண் தவறி விழுந்து மரணம்

மதுரை ஜன 17 மதுரை அருகே மாடிப் படியில் ஏறிய கர்ப்பிணி பெண் தவறி விழுந்து உயிரிழந்தார்.

மதுரை அருகே கடச்சநேந்தல் எல் கே டி நகரை சேர்ந்தவர் மெர்சி என்ற காயத்திரி 34 இவர் 5 மாத கர்ப்பிணியாக இருந்து வந்த நிலையில் வீட்டின் மாடிப் படியில் ஏறிய போது கால் தவறி தடுமாறி விழுந்து விட்டார். இதில் பலமாக அடிபட்டு மதுரை அரசு மருத்துவமனைக்குசிகிச்சைக்காக கொண்டு சென்றனர் .ஆனால் செல்லும் வழியிலேயே மெர்சி என்ற காயத்திரிபரிதாபமாக உயிரிழந்தார்.இவரது சாவு குறித்து அப்பன் திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மதுரை அருகே அணைக்கட்டுக்கு குளிக்கச் சென்ற இளைஞர் தண்ணீரில் மூழ்கி மரணம்

மதுரை ஜன 17 மதுரைஅருகேஅணை கட்டில் குளிக்கச் சென்ற வாலிபர் தண்ணீரில் மூழ்கி பலியானது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

மதுரை அருகேஎம்.கல்லுப் பட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி 35. இவர் அந்த பகுதியில் உள்ள அய்யனார் அணை கட்டிற்கு குளிக்கச் சென்றார் .அப்போது தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிர் இழந்தார் .இவரது சாவுகுறித்து மனைவி சமயக்காள்கொடுத்த புகாரின் பேரில் எம.கல்லுப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சிவகங்கை தாலுகா அலுவலகம் முன்பு கிராம தலையாரிக்கு அரிவாள் வெட்டு. மருத்துவமனையில் அனுமதி!

சிவகங்கை அருகே பெரிய கோட்டை வழுதனி கிராமத்தில் தலையாரியாக பணிபுரிந்து வருபவர் பாண்டியன். இவர் பணிபுரியும் எல்லைப்பகுதியில் மாட்டு வண்டியில் சட்டவிரோதமாக சிலர் மணல் அள்ளி கடத்தியுள்ளனர்.

இது குறித்து தலையாரி பாண்டியன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த புது குலத்தை சேர்ந்த சிவா மற்றும் அவரது நண்பர்கள், சிவகங்கை தாலுகா அலுவலகத்தில் இருந்த தலையாரியை அழைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் அரிவாளால் தலையாரியின் கையில் வெட்டி விட்டு தப்பி ஓடியுள்ளனர்.

தலையாரியின் அலறலைக் கேட்ட தாலுகா அலுவலக ஊழியர்கள் உடனடியாக அவரை சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்ற நிலையில், அங்கு அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுளார்.

சம்பவம் குறித்து தலையாரி பாண்டி அளித்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த சிவகங்கை நகர காவல் நிலையத்தினர் தப்பி ஓடிய சிவா மற்றும் அவரது நண்பர்கள் மூன்று பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories