
புரட்டாசி மாதத்தில் தரிசனம் செய்ய,
ராஜபாளையம் நகரில் பிரபலமான பெருமாள் காேவில்கள் பல உள்ளன.
விருதுநகர்மாவட்டத்தில் சிவகாசியில் திருத்தங்கல் வில் 108திவ்ய தேசங்களில் ஒன்றான நின்ற நாராயண பெருமாள் கோவில், ஸ்ரீவில்லிபுத்தூரில் வடபத்ரசயன பெருமாள் கோயில் அருகில் திருவண்ணாமலையில் ஸ்ரீனிவாசபெருமாள் கோயில் செண்பகம் தோப்பில் வனப்பகுதியில் காட்டழகர் கோயில் என பிரபலமான கோயில் உள்ளது போல் தொழில் நகரமாக விளங்கும் ராஜபாளையத்தில் பிரபலமான பெருமாள் கோயில் பல உள்ளது.இங்குபுரட்டாசி சனிக்கிழமை பெருமாளை சேவிப்பதை பலரும் முக்கிய மாக கருதுகின்றனர்.
ராஜபாளையத்தில் சஞ்சீவி மலை கிழக்கு பகுதியில் வேட்டை வெங்கடேச பெருமாள் காேவில் உள்ளது.இங்கு தினசரி பூஜைகள் நடந்தாலும் புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமை தோரும் பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர்.

ராஜபாளையத்தில் தென்காசி ஶ்ரீ காேதண்ட ராமசுவாமி காேவில் உள்ளது.கோயில் உற்சவருக்கு அலங்காரம் அழகு என்றால் கட்டிடங்கள் மேலும் அழகு சேர்க்கின்றன.
பச்சமடம் ஶ்ரீ சீனிவாச பெருமாள் காேவில்,சம்மந்தபுரம் ஶ்ரீ சாேலைமலை பெருமாள் காேவில்,சம்மந்தபுரம் அக்ரகாரம் ஶ்ரீ சூடிகாெடுத்த பெருமாள் காேவில்,
புளியங்குளம் கம்மாய் அருகே ஶ்ரீ ராமசுவாமி காேவில்,பழையபாளையம் இரட்டை வாட்டர் டேங்க் அருகே ஶ்ரீ லட்சுமண பெருமாள் காேவில்,ஆவரம்பட்டி மின்வாரிய அலுவலகம் அருகே ஶ்ரீ சாேலைமலை பெருமாள் காேவில்,
சர்வ சமுத்திர அக்ரகாரம் ஶ்ரீ கிருஷ்ணன் காேவில்,அரங்கசாமிராஜா சிலை எதிர்புறம் தெருவில் உள்ள ஶ்ரீ ராமசுவாமி காேவில் உள்ளது.

ராஜபாளையத்தில் தென்காசி சாலையில் ஶ்ரீ திருப்பதி தேவஸ்தான பெருமாள் காேவில்,உள்ளது.இங்கு உற்சவருக்கு நடைபெறும் சிறப்பு அலங்காரம் கண்கொள்ளாக் காட்சியாகும்.பழையபாளையம் இரட்டை வாட்டர் டேங்க் அருகே பஜனை மடம் ஶ்ரீ பெருமாள் காேவில்,செவல்பட்டி நாயுடு தெருவில் இருக்கும் ஶ்ரீ வாடிவாசல் பெருமாள் காேவில்,பழையபாளையம் என்ஆர்கே மண்டபம் கிழக்கு பகுதி பெரிய சாவடி தெருவில் அமைந்திருக்கும் ஶ்ரீ சோலைமலை பெருமாள் கோவில்,பழையபாளையம் கோட்டைதலை வாசல் கிழக்கு பகுதி தர்மராஜா பெரிய தெருவில் அமைந்திருக்கும் ஶ்ரீ செல்லம் பெருமாள் கோவில்,பழையபாளையம் பெரிய சாவடி எதிர்புறம் பெரியகடை பஜார் தெருவில் அமைந்திருக்கும் ஶ்ரீ ஹரஹர பெருமாள் கோவில் இப்பகுதியில் பிரபலமான பெருமாள் கோயில்களாகும்.