ipl 2022 - 2026

IPL 2022: சென்னை vs மும்பை

விளையாட்டு Featured இந்தியா
ipl 2022 - 2026

ஐ.பி.எல் 2022 – சென்னை vs மும்பை
– K.V. பாலசுப்பிரமணியன் –

ஐபிஎல்லின் 59ஆவது ஆட்டம் மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் சென்னை, மும்பை அணிகளுக்கிடையே நடந்தது.

சென்னை அணி (97 ஆல் அவுட், தோனி 36*, டேனியல் சாம்ஸ் 3/16, மெரிடித் 2/27, கார்த்திகேயா 2/22)) மும்பை அணியிடம் (103/5, திலக் வர்மா 34*, ரோஹித் 18, ஹிருத்திக் 18, டிம் டேவிட் 16, முகேஷ் சௌத்ரி 3/23) 5 விக்கட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. டாஸ் வென்ற மும்பை அணி சென்னை அணியை மட்டையாடச்சொன்னது.

முதல் ஓவரில் கான்வே, மொயீன் அலி இருவரும் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். இரண்டாவது ஓவரில் ராபின் உத்தப்பாவும் (ஒரு ரன்) ஐந்தாவது ஓவரில் கெய்க்வாட் (7 ரன்), ஆறாவது ஓவரில் அம்பாடி ராயடு (10 ரன்) ஆட்டமிழந்தனர். அப்போது அணியின் ஓட்ட எண்ணிக்கை 5/29. ஷிவம் துபே (10 ரன்) ஏட்டாவது ஓவரிலும் ப்ராவோ (12 ரன்) 13ஆவது ஓவரிலும் ஆட்டமிழந்தனர்.

அதன் பின்னர் சிமர்ஜீத் சிங் (2 ரன்), திக்ஷணா (ரன் எடுக்கவில்லை), முகேஷ் (4 ரன்) ஆகியோர் நிலைத்து ஆடமுடியாமல் ஆட்டமிழந்தனர். தோனி 36 ரன்களுடன் மறுமுனையில் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

சென்னை அணியின் இரண்டாவது குறைந்த ஸ்கோர் இது. இதற்கு முன்னர் 2013ஆம் ஆண்டு இதே மும்பை அணிக்கு எதிராக 79 ரன்கள் எடுத்ததே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மிகக் குறைந்த ஐபிஎல் ஸ்கோராகும்.

மும்பை அணியும் மிக மோசமாகத் தொடங்கியது. இஷான் கிஷன் முதல் ஓவர் ஐந்தாவது பந்தில் 6 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். ரோஹித் 3.3 ஓவரில் 18 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரில் டேவிட் சாம்ஸ் அவுட்டானார். அதே ஓவரில் ஸ்டப்ஸ் அவுட்டானார். பின்னர் திலக் வர்மா (ஆட்டமிழக்காமல் 34 ரன்), ஹிருதிக் ஷௌகீன் (18 ரன்), டிம் டேவிட் (ஆட்டமிழக்காமல் 16 ரன்) மூவரும் 14.5 ஓவரில் 103 ரன் எடுத்து அணியை வெற்றிபெறச் செய்தனர்.

இந்தப் போட்டியில் வென்றதன் மூலம் மும்பை 6 புள்ளிகளுடன் பத்தாவது இடத்திலும், சென்னை அனி 8 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்திலும் உள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.